10/08/2019

ப்ரியம்வதா

நீ எனக்குச் சொந்தமில்லை ஆனாலும்
உன்னை தொலைத்து விட்டதாய் ஓர் உணர்வு..

தொலைத்த உறக்கமும் தொலைத்து விட்டதாய் என்னை நம்ப வைத்து கொண்டிருக்கிற காதலும் குத்திக் கிழிக்கின்றன என் நாட்களை..

காதலித்ததால் வாழ்ந்து கொண்டிருக்கிற என்னை
காதலற்று வாழும் இச்சமூகம் சொரணை அற்றவனாக அடையாளம் காண்பதில் பெருமிதம் கொள்கிறது..

என்றோ எங்கோ ஓர் திருமண மண்டபத்தில் எனது இந்த அடையாளம் மாற்றப்படும் வரை இப்பெயரை பத்திரமாக சுமந்து திரிவேன் நான்..

ப்ரியம்வதா..