14/01/2021

பராரிகள்

சரியான பாதையில் செல்வதில் என்ன இருக்கிறது. தொலைந்து போவதும், திசைமாறிப்போவதும் தான்
அழகான பயணம்

-பராரிகள்

ராஜாராம்

இழுத்துக் கொண்டு
ஓடிப்போன தங்கமுத்து மாமா
அத்தையை சாகக்கொடுத்த பிறகு
திரும்ப வந்து விட்டார்.

இப்ப அத்தை மட்டுமே
ஓடிப் போனவளாகவே
இருக்கிறாள்.

-ராஜாராம்

மனுஷ்யபுத்திரன்

உலகத்தில் மிகவும் 
சவாலானது 
நம்மைப் பற்றிய பிறரது கற்பனைகளோடு 
நாம் போராடுவது தான்

-மனுஷ்யபுத்திரன்

சுஜாதா

ஒரு டெலிபோன் உரையாடல்
நண்பர்: hello
மகள்: நான் சந்தியா பேசறேன். 2ம் வகுப்பு
நண்பர்: அப்பா இல்லையா
மகள்: ம்..ம்.. இல்லை
நண்பர்: வீட்டில வேற யாரு இருக்காங்க
மகள்: சேகர் இருக்கான். இருங்க போனை கொடுக்கிறேன்
நண்பர்: ஹலோ சேகர்.
சேகர்: ம்ம ல லா
(சேகர் 2வயது குழந்தை)

-சுஜாதா

படித்தது

ஒவ்வொரு ரயிலும் கலைத்து விட்டுத்தான் போகிறது.ஏதாவொரு ஸ்டேசனில் சொல்ல முடியாத சோகத்தோடு தனித்து அமர்ந்திருக்கும் யாரோ ஒருவரின் இறுக்கத்தை!-P

ராஜா சந்திரசேகர்

தொடர்பு எல்லைக்குள்
எல்லோரும் இருந்தார்கள்
தொடர்பற்று

-ராஜா சந்திரசேகர்

மகுடேசுவரன்

செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை

பஞ்சுக்குப்பை
மண்டிய தலை
அரிக்கிறது

பனியன் கம்பெனி உஷ்ணத்தில்
சன்னமாய்ச் சுரக்கும் வியர்வையில்
ரவிக்கைக் கையிடுக்கு ஊறி
உறுத்துகிறது

சமயத்தில்
கொண்டுவந்த பழஞ்சோறு
ஊசிப்போய் ஏமாற்றுகிறது

விடிய விடிய பணியிருக்கிறது
கண்ணுக்குள் மண்ணறுக்கிறது

துணி உதறி உதறி
கைகளிரண்டும்
கதறுகிறது

அவ்வப்போது
பூவாத்தா மடித்துத்தரும் வெற்றிலையில்
அன்பு தடவியிருக்கிறது

தங்கமணியக்கா
தன் குடும்பக் கதை சொன்னால்
எனக்கும் அழுகை வருகிறது

மேற்பார்வையிடும்
மெர்ச்சண்டைசரின் பார்வையில்
இன்பத்திற்கான யாசிப்பு
எப்பொழுதும் தென்படுகிறது

இடையிடையே நினைவும் வருகிறது
குடிகாரப் புருஷ முகம்
ஸ்கூல் போகும் சுப்பரமணி முகம்

– மகுடேசுவரன்

வேள்பாரி

முன்னேறுவதைவிடக் கடினமானது பின்தொடர்வது.

-வேள்பாரி

மா.சே.துங்

பழம் பெருமைகளை
பேசி கொண்டிருக்கும்...
ஒரு இனம் நிகழ் காலத்தையும், 
எதிர் காலத்தையும் தொலைக்கும்.

-மா சே துங்

சுப.வீ

'பொறி வழிச் செல்லாமல் நிற்றலே தவம்'

மனம் ஐம்பொறிகளின் வழியாகப் பல்வேறு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கும்.கண்வழி,செவி வழி, நாசிவழி போகிறது.இப்படிச் செல்லும் மனத்தை நிறுத்தலே தவம்.அதாவது கவனக்குவிப்பு எனலாம்.

-சுப.வீ

வேள்பாரி

மனிதன் கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனைக் குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது.

-வேள்பாரி

க.நா.சு

தவறு செய்பவனைப் போல் நியாயமும் தத்துவமும் பேசுவதில் தீவிரமுள்ளவன் வேறு யாரையும் காண முடியாது

-க.நா.சு

ஓஷோ

Discussion is an Exchange Of Knowledge
Argument is an Exchange Of Ignorance

-Osho

வேள்பாரி

எல்லாம் கண்டறியாதவர்கள் சொல்லும் கதைகள். ஆளுக்கு ஒன்றாக இருக்கும்.

-வேள்பாரி

ஓஷோ

ஒரு பொருளை நீங்கள் தேடாவிட்டால் அது முன்னால் இருந்தாலும் உங்களுக்குத் தெரியாது.அதை உரசிக்கொண்டும் போகலாம். நீங்கள் இன்னது வேண்டும் என்று தேடினால்தான் அதை பார்க்க முடியும்

-ஓஷோ

வேள்பாரி

மனிதன் பாம்பைப் பற்றி பேசும் கணத்திலேயே அது அவனுக்குள்ளே வந்துவிடுகிறது.

-வேள்பாரி

01/01/2021

ஓஷோ

உச்சியில் இருக்க வேண்டும் என்றால் மென்மையாக இரு. பலவீனமாக இரு.ஒரு புல்லைப் போல மென்மையாக இரு. பெரிய மரத்தைப் போல பலமாக அல்ல

-ஓஷோ

சுப.வீ

தேவைக்குப் பொருள் வாங்குவதற்கும்..ஆசைக்குப் பொருள் வாங்குவதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.ஏனென்றால் தேவைகளை நிரப்ப முடியும்.ஆசைகளை நிரப்ப முடியாது

-சுப.வீ

அம்பேத்கர்

இந்தியா ஏற்றத் தாழ்வுகளின் தாயகம். பல தளங்கள் உள்ள கட்டிடம் போன்றது. அதற்கு நுழைவாயில் கிடையாது. படிக்கட்டுகளும் இல்லை. அந்தந்த தளத்தில் பிறந்தவன் சாகும் வரை வெளியேற முடியாமல் அந்த தளத்திலேயே இருக்க வேண்டியதுதான்."

- அம்பேத்கர்,

வேள்பாரி

எல்லோரும் அதிகம் புகழப்படும் ஓர் இடத்தில் பிழைகள் மலிந்திருக்கும். யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு. அதற்கு அடிமையாகதவர்களை அது சந்தித்தது இல்லை என்ற அகம்பாவம்தான் புகழின் ஆணிவேர்.

-வேள்பாரி

வேள்பாரி

இயற்கையின் அதிஅற்புதம் எல்லாம் எதிர்பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே தொடங்குகிறது.

-வேள்பாரி

வேள்பாரி

வள்ளல் தன்மை என்பது நிர்வாகத்திறமை  அல்ல. அது குழந்தையின் அழுகுரல் கேட்ட கணத்தில் பால் கசியும் தாயின் மார்பைப் போன்றது.

-வேள்பாரி

ஓஷோ

வாழ்வின் சிறிய தருணங்களையும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்..

ஏனெனில்..
தவறவிடப்பட்ட பேரின்பமாக அவை நாளை தெரியக்கூடும்..

- ஓஷோ

ரால்ஃப் வால்டோ எமர்சன்

நம் ஒவ்வொருவருக்குள்ளும் வழிகாட்டுதல் உள்ளது. நாம் உன்னிப்பாகக் காதுகொடுத்துக் கேட்டால்.. சரியான வார்த்தை நம் காதுகளில் விழும்

-ரால்ஃப் வால்டோ எமர்சன்

ஜெயகாந்தன்

நம்மிடமுள்ள மாபெரும் தீயகுணம்,
நாம் எதையுமே கோயிலாக்கி
தெய்வமாக்கிவிடுவது..
எனவே நாம் வழிபடுவதில் சமர்த்தர்கள்,வளர்வதில் இல்லை
-ஜெயகாந்தன்

பேயோன்

மனைவி தரப்பைக் கேட்கையில் மனைவிக்கு ஆதரவாகிறேன்
தாயின் தரப்பைக் கேட்கையில்
தாய்க்கு ஆதரவாகிறேன்
என் தரப்பென எதுவும் இல்லை
எனக்கு யாரும் ஆதரவில்லை

-பேயோன்

வேள்பாரி

குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும்போதும் தோற்கும் போதும்தான் ஓர் ஆண், தாய்மையை அனுபவிக்கிறான்.

-வேள்பாரி

சுஜாதா

_விசேஷங்களில்_
_அழகான இளம்_
_பெண்களைக் கண்டால்_

`` _அடடா அவசரப்பட்டுட்டோமே_ ``
_என்று நினைப்பது போய்…_

_சித்தி பையன் பாலாவுக்கு_
_இந்தப் பொண்ண கேக்கலாமே_
_எனத் தோன்றுகிறதா.??_

            ~ *÷÷÷÷*~

_சண்டை போட்ட_
_உறவினர்களின் மேல்_

_காழ்ப்பணர்ச்சி விகிதம்_
_கரைய ஆரமபித்திருக்கிறதா???_

             ~ *÷÷÷÷÷* ~

_உறவுகளில்_
_சம வயதினர்_
_அமெரிக்காவில்_
_செட்டில் ஆனால்_

_பொறாமைப்படுவது நின்று_

_நம்ம பையனுக்கு_
_பின்னாடி_ _பிரச்சினையில்லை…..,_
_REFER பண்ண_ _ஆளிருக்கு_
_என மனது_ _சாந்தப்படுகிறதா. ??_

             ~ *÷÷÷÷* ~

_மனைவியை_
_கவனிக்க_ _தவறிவிட்டதாக_
_உள் மனது ஒப்பாரி இடுகிறதா??_

              ~ *÷÷÷÷* ~

_திரைப்படங்களின்_
_முதல் நாள் முதல் காட்சி_
_பார்க்கும் எண்ணம் போய்விட்டதா.??_

            ~ *÷÷÷÷* ~

_வெள்ளை முடி கவலை_
_அப்பிக் கொள்ள_
_ஆரம்பித்துவிட்டதா???_

             ~ *÷÷÷÷* ~

_மியூசிக் சேனல் பார்ப்பது_
_குறைந்து_

_செய்தி சேனல் பார்ப்பது_
_அதிகரித்திருக்கிறதா??_

            ~ *÷÷÷÷* ~

_ஞாயிற்றுக்கிழமை_
_யார் வற்புறுத்தலும்_ _இன்றி_

_காலையில் WALKING_
_போகிறீர்களா??._

           ~ *÷÷÷÷* ~

_இன்னிக்கு அமாவாசை,_
_ஏகாதசி,_
_சஷ்டின்னு_
_ஏதாச்சும்_ _இருக்கான்னு_

_மனசு பார்க்க வைக்கிறதா?._

              ~ *÷÷÷÷*~

_பாலிஸி DUE DATE_
_பாக்க_
_ஆரம்பித்து விட்டீர்களா??_

               ~ *÷÷÷÷*~

_ஒரு மருந்துக்கடைக்காரர்,_
_ஒரு சிறு உணவக முதலாளியின்_
_நட்பு_
_நிச்சயம்_ _ஏற்பட்டிருக்கிறதா??_

               ~ *÷÷÷÷* ~

_கவலையை மறக்க_
_காமெடி சானல்_ _பார்ப்பது_
_சிறந்த சாய்ஸ்_
_எனத்தோன்றுகிறதா??._

                ~ *÷÷÷÷* ~

_வண்ணத்திரை, சினிக்கூத்து_
_வாங்கிய கடைகளில்_

_சக்தி விகடனும்,_ 
_நாணயம் விகடனும்_
_வாங்க வைக்கிறதா??._

                 ~ *÷÷÷÷* ~

_பல் விளக்க,_
_சேவிங் செய்ய,_
_குளிக்க_
_வழக்கத்தை விட_

_அதிக நேரம் ஆகிறதா?_

             ~ *÷÷÷÷* ~

_பிள்ளைகளின் ஆசை,_
_சோம்பல் மீதான_ _கோபம்_
_வடிந்து_

_``இப்போ அனுபவிக்காட்டி_
_எப்போ, ……_
_போய்ட்டு போகுது ``_

_என்ற எண்ணம் வருகிறதா??._

            ~ *÷÷÷÷* ~

_அலுவலகத்தில்_
_சனி,ஞாயிறு அன்று_
_நண்பர்கள்_
_ஏதாவது அவுட்டிங்_ _பிளான்_
_செய்தால்_

_தகுந்த காரணமின்றி_
_ஜகா வாங்க_ _வைக்கிறதா??._

            ~ *÷÷÷÷* ~

_சாலை கடக்க_
_பயப்படத் தொடங்கி_

_PEAK HOURS_
_அவாய்ட் பண்ணினால் என்ன_

_என்று மனைவியடம்_
_தர்க்கம் பண்ண தொடங்கி விட்டீர்களா??_

            ~ *÷÷÷÷* ~

_பேருந்து வழக்கமாக_
_வரும் நேரத்திற்கு_

_ஒரு நிமிடம் தாமதமாய் போய்_ _ஓடிச்சென்று ஏறுவது நின்று,_

_ஐந்து நிமிடம் முன்னரே_
_பஸ்ஸ்டாண்டில் காக்க முடிகிறதா??_

             ~ *÷÷÷÷* ~

_என்னால் எல்லாம் முடியும்,_
_யார் தயவும் தேவையில்லை_
_என்ற எண்ணம் போய்„_
_உலக மக்கள்_ _அனைவரின்_
_கூட்டு உழைப்பால்_ _தான்_
_நமக்கு இந்த_ _வாழ்க்கை_ 
_சாத்தியமாயிற்று என்ற எண்ணம்_
 _வருகிறதா??_

             ~ *÷÷÷÷* ~

_அப்ப நீங்க_
*"UNCLE"* / *AUNTY*
_ஆகிவிட்டீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இவைதான்…!_

- #சுஜாதா. 

😃😃😛
ஐய்யய்யோ 
எல்லாமே இருக்கிற  மாதிரி தோணுதா?

நாஞ்சில் நாடன்

எந்த கூர்க்காவையும் கடுகடுத்த முகத்துடன் நான் கண்டதில்லை. முகம் ஏறிட்டுப் பாத்த உடன் மலரும் சிரிப்பு. 'உன் ஆதரவில் என் வாழ்க்கை' என்பதுபோல்.

 -நாஞ்சில்நாடன்

ரூமி

சுடராக மாறிய நெருப்பில்
புகை இருப்பதில்லை..!

-ரூமி

சுப.வீ

ஒரு சொல்லுக்குப் பின்னால்
ஒரு சமூகத்தினுடைய வரலாறு உறைந்திருக்கிறது
"சுயமரியாதை"

-சுப.வீ

கடற்கரய்

பலரது பிரச்னையே, முடிவை அவர்கள் எடுத்துவிட்டு பதிலை நம்மிடம் கேட்பதுதான்

-கடற்கரய்

அ.கி.பரந்தாமனார்

வலிமிகுதல் என்கின்ற இப்பண்பு உலகில் வேறெந்த மொழிகட்கும் இல்லை. இது தமிழுக்கும் மலையாளத்திற்கும் மட்டுமே உரிய மொழிப்பண்பு

-அ.கி.பரந்தாமனார்

ஐன்ஸ்டீன்

எதிர்காலத்தை பற்றி நினைக்கத் தேவையில்லை.அது தானாகவே சீக்கிரம் வந்துவிடும்

-ஐன்ஸ்டீன்

ப.பி

"தேர்தல்" 

“தேர்தலெனும்
ஆர்ப்பாட்டமான டெஸ்ட்டில்
அம்பயர்களாக நின்ற
அப்பாவி மக்களே-எப்போதும்
அவுட் ஆகிறார்கள்..!”

-படித்தது

வேள்பாரி

ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறான். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.

-வேள்பாரி

ஜேம்ஸ் ஜாய்ஸ்

“தன்னிலிருந்து தப்பித்து ஓடுபவன் மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே ஓடுகிறான்” -  

-ஜேம்ஸ் ஜாய்ஸ்

பெரியார்

தொடர்ந்து கற்றுக்கொள்,

ஆய்வு செய்

உருமாறு.!

-பெரியார்

யுக பாரதி

வேகமாக முன்னேறுகிறவன்
*******
வேகமாக முன்னேறுகிறவன் வேறு எதையும் சிந்திப்பதில்லை
முன்னேறுவதிலும் வேகப்படுவதிலும் குறியாய் இருக்கிறான்

அவனுக்கு தர்மத்தின் மீது கருணையில்லை
அவனுக்கு நேர்மைகளோடு பேச நேரமிருப்பதில்லை
உச்சிக்கு மேலேயும் போக அவன் வியூகம் வகுக்கிறான்

தனக்குக் கீழே தோண்டப்படும் பள்ளங்கள் குறித்தும் அவன் பயப்படுவதில்லை
தாமதப்பட நேருமென்பதால் கடந்த காலத்தை அவ்ன திரும்பிப் பார்ப்பதே இல்லை

வேகமாக முன்னேறுகிறவன் வேகமாகவே தனது பயணத்தையும் முடித்துக்கொள்வது தவிர்க்க முடியாதது

- யுகபாரதி

வண்ணதாசன்

தேவையற்ற இலைகள் உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாக பறவைகளும் இருக்கையில்., தேவையெற்றதெல்லாம் உதிரும்படியாகவே வாழ்வும் இருக்கும்.

-வண்ணதாசன்

வேள்பாரி

உரத்துச் சொல்லப்படுவதைவிடக் காதோடு காதாகப் பேசும் கதைக்கு வயது அதிகம்.

-வேள்பாரி

சுபா செந்தில்குமார்

வார்த்தைகளை
எய்து முடித்தபின்
நிராயுதபாணியாய்
 போரை தொடர்கிறது
மௌனம்”

-சுபா செந்தில்குமார்

அருள் எழிலன்

எல்லா அயோக்கியமான செயல்பாடுகளையும் அறிவின் துணையோடு நியாயப்படுத்தி விட முடியும். 

-அருள் எழிலன்

கல்யாண்ஜி

சிறுவனாகப்
பென்சில் சீவும்போது
கசிந்த ரத்தம்
உண்மையாக இருந்தது.
இப்போது ஜாக்கிரதை உணர்வு
வந்துவிட்டது வயதுடன்.
எஞ்சியது என்ன?
காயம் படாத கை விரல்.
நிஜம் கசியாத கவிதை.

-கல்யாண்ஜி

மஞ்சுளா தேவி

எந்த சாமியும் கும்பிடாத செல்வியக்கா
எல்லா கிறிஸ்மஸ்க்கும்
ராத்திரி பன்னண்டு மணிவரைக்கும்
முழிச்சிருந்து
சர்ச்சில் வெடிக்கும் 
பட்டாசப் பார்த்துட்டுத்தான் தூங்கும்
ஏசுசாமியவா கும்பிடுற
ஏன் தூங்காமலிருக்கற
என்று  யாராவது  கேட்டால்
ஒரு குழந்தை  பிறக்கப்போகுதுன்னு 
தெரிஞ்சிட்டு பார்க்காமல்
எப்படித் தூங்கறது
என்று கேட்டுச் சிரிக்கும்.

~ Manjula Devi

மணிகண்டபிரபு

No one notices your tears,
No one notices your sadness,
No one notices your pains,
but, they all notice your mistakes.

எஸ்.ரா

வெளிச்சம் ஒரு துணை. ஒரு ஆள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஆறுதல்.

 -எஸ்.ரா

வேள்பாரி

நிலத்தை உழவேண்டும். அதற்குமுன் உழும் நிலத்தை உணர வேண்டும்.

-வேள்பாரி

வேள்பாரி

தீயவர்களின் வீழ்ச்சி மகிழ்வை கொடுக்கும்; பாதிப்பை ஏற்படுத்தாது. நல்லவர்களின் வீழ்ச்சியோ துயரத்தோடு நிற்காது; பெரும்பாதிப்பை உருவாக்கும்.

-வேள்பாரி

மார்க் ட்வைன்

புகைப்பதை விடுவது ரொம்ப ஈசி. நான் எத்தனையோ முறை விட்டிருக்கிறேன்

-மார்க் ட்வைன்

ஜார்ஜ் ஆர்வெல்

ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முன் கடந்து போன தலைமுறையை விட தான் புத்திசாலித்தனமானதாகவும், அடுத்து வரும் தலைமுறையை அறிவானதாகவும் கற்பனை செய்து கொள்கிறது.

ஜார்ஜ் ஆர்வேல்.

ஈரோடு தமிழன்பன்

ஒரு கோப்பை 
வாழ்க்கை பருக
நேரமின்றி
எங்கே
ஓடிக் கொண்டிருக்கிறோம்?

-ஈரோடு தமிழன்பன்

திருமூலர்

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்

 அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்

   அறிவுற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே
   அறிவிக்க தம் அறிவார் அறிவோரே

அறிவார்ந்த தத்துவ ஞானங்களை அறிவில்லாதவர்களிடத்தில் தெரியப் படுத்த வேண்டாம்.அறிவுடைய அறிஞர்பெருமக்களுக்கும்  அதை அறிவிக்க வேண்டியது  அவசியம் இல்லை..அறிவு இருந்தும் அறியாமையினால்  தெளிவுக்காக அணுகுபவர்களுக்கு மட்டுமே அறிவிக்கத்  தெரிந்தவர்கள் அறிவுடையவர்கள்

- திருமூலர்.

அந்தோனியே கிராம்ஸி

அதிகாரம் காற்றைப் போல
எங்கும் நிறைந்திருக்கிறது

-அந்தோனியே கிராம்ஸி

ஜே.கிருஷ்ணமூர்த்தி

நமது கருத்தென நாம் நம்பும் யாவுமே உண்மையில் நம்முடையில் அல்ல.நாம் வாழும் சமூகத்தால் நம்மில் கட்டமைக்கப்பட்டன.நீ அறிந்ததாக நினைக்கும் யாவும் உன்னுடையது அல்ல. அவற்றிலிருந்து நீ விடுபடு

-ஜே.கிருஷ்ணமூர்த்தி

மு.மேத்தா

நாற்காலிகள்
காலியாக இருக்கின்றன
யார் வரப்போகிறீர்கள்?
பரவாயில்லை..வாருங்கள்
காலிசெய்யத் தானே
வருகிறீர்கள்!""

-மு.மேத்தா

ஷான்

மௌனத்தை விடவும்
சிறந்த பதிலைத்
தேடும் முயற்சியில்
நான் இருக்கையில்தான்
என் மௌனத்தை
பதிலாக எண்ணிக் கொண்டு
அடுத்த கேள்வியைக் கேட்கிறீர்கள்.

– ஷான்