26/07/2019

படித்தது

வேஷத்துக்கு கிடைக்கும் மதிப்பு கூட உண்மையான பாசத்திற்கு கிடைப்பதில்லை...!
கடந்து போக கற்றுக்கொள்...
இந்த மாயமான உலகில்
காயங்களுக்கு
நியாயங்கள் தேடாமல்..!!

_இனிய காலை வணக்கம்...

படித்தது

தேர்தல் எப்போது வரும் என்று எல்லோரும் ஆர்வத்தோடு விசாரிக்கிறார்கள். திரும்ப திரும்ப ஏமாறுவதில் தான் இவர்களுக்கு எவ்வளவு ஆசை?

-படித்தது

நரன்

முழுவதும்
வரைந்து முடிக்கப்பட்ட ஓவியத்திலிருந்து
பறவைகள் பறந்துவிடுமென எண்ணி
அதன்
சிறகுகளை மட்டும்
வரையாமல் விட்டு வைக்கிறாய்.
பின்னொருநாள்
வெறிச்சோடிக்கிடக்கிறது
பறவைகளற்ற ஆகாயம்.
காணாமல் போய்விட்டது
உன் தூரிகை.

-நரன்

கண்டராதித்தன்

எப்போதும் தனியாகவே இருக்கும் இந்த மனத்திற்குத் தெம்பூட்ட நான் எதையாவது கொடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதுகேட்கும் எல்லாவற்றிற்கும் பதிலாக வேறு ஒன்றைத் தரமுடியும் அளவிற்கே இருக்கிறது வாழ்க்கை.

- கண்டராதித்தன்

வண்ணதாசன்

காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும்..

-வண்ணதாசன்!

சுப.வீ

யாரேனும் தூக்குப்போட்டுக் கொண்டு இறந்தால் கிராமங்களில் "நாண்டுக்கிட்டு செத்துட்டான்"என்பர்.இது ஞான்று எனும் சொல் நாண்டு என திரிந்தது.ஞான்று என்றால் தொங்குதல் எனப் பொருள். அந்தரத்தில் பூமி தொங்குவதால் ஞாலம் என அழைத்திருக்கலாம்.அதேநேரத்தில் எஞ்ஞான்றும் என்பதற்கு வேறு பொருள்

-சுப.வீ

மருதன்

இரவு கனவு காண்பதால் ஒரு பிரயோஜனுமும் இல்லை. காலை எழுந்து கண்களை கசக்குவதற்கு முன்பே உதிர்ந்துவிடும்.பகல் கனவுகள் உதிர்வதில்லை.கான்க்ரீட் போல் நம்மை திடப்படுத்துகின்றன

-மருதன்

தேவதேவன்

காட்சியளிப்பது மட்டுமே தன் கடமையென
உணர்ந்தார், துயர்குழப்பமிக்க
இவ்வுலகில் தன் கடமை என்னவென்ற
வெகுயோசனைக்குப்
பின்,கடவுள்"
-தேவதேவன்

கந்தர்வன்

கிழிசல்கள்

ஆரியப்பட்டா வானத்தை கிழித்தது
அணுகுண்டு பூமியைக் கிழித்தது

அரைக்கைச் சட்டைகள்
கிழிந்தது மட்டுமே
மனதில் நிற்கிறது

பிள்ளை வேண்டாமென்று
கருப்பையைக் கிழித்தார்கள்
உணவும் எதற்கென்று இனி
இரைப்பையையும் கிழிப்பார்கள்

எல்லாம் கிழிந்த
எங்கள் தேசத்தில்
வாய் கிழிவது மட்டும்
வகை வகையாயிருக்கும்

-கந்தர்வன்

ஜெயமோகன்

வெறுத்தபின் அதற்கான நியாயங்களை சிந்தித்து சிந்தித்து உருவாக்கிக் கொள்கிறோம்
-ஜெயமோகன்

இமையம்

வவுத்துக்குத் தெரியுமா இது சாவுச்சோறு, இது கல்யாணச் சோறுன்னு”

-இமையம்

மதிபாரதி

எனக்கு எதிரே
யார் பணம்
எண்ணினாலும்
நானும் மனசுக்குள்
எண்ண ஆரம்பித்துவிடுகிறேன்
அவரைவிட
மிகச் சரியாக!

-மதிபாரதி

20/07/2019

சுந்தர ராமசாமி

நான் செல்லும் பாதை என்னைக் கோவிலின் சந்நிதானத்திற்கு இட்டுச் செல்வதற்குள் நான் களைப்படைந்து போய்விடலாம். ஆனால் நடந்து செல்கிற பாதை சுத்தமான பாதையாக இருந்துவிட்டாலே போதும். வழிநெடுகிலும் கோவில்கள் தாம், கோபுரங்கள் தாம்

-சுந்தர ராமசாமி

ராஜா சுந்தரராஜன்

நாக்கு தொங்க
வாய்நீர் வடிய
நாறுகிற திசையெல்லாம்
ஓடுது நாய்
கரணம் போட்டு
கட்டிய வீட்டில்
இருந்து தின்னுது சிலந்தி

-ராஜசுந்தரராஜன்

நரன்

கூண்டிலிருந்து தப்பிய பறவை
தங்கிவிடுகிறது நினைவிலேயே.!

-நரன்

லஷ்மி சரவணகுமார்

ஒரு நகரில் நீங்கள் வாழ, அதற்குப் பழக வேண்டும், உங்கள் குரலுக்கு செவிசாய்க்க அந்நகரைப் பழக்க வேண்டும், அப்படியான சாமர்த்தியம் தேடிதான் ஒவ்வொருவரும் போராடுகிறார்கள்.

- லக்ஷ்மி சரவணகுமார்

ராஜா சந்திரசேகர்

இந்த இரவில்

                  - ராஜா சந்திரசேகர்

என்னைப் போல்
இந்த இரவில்
நீங்கள் விழித்திருப்பீர்கள்

என்னைப் போல்
இந்த இரவில்
நீங்கள் ஒரு
துயரத்தைக் கடந்துகொண்டிருப்பீர்கள்

என்னைப் போல்
இந்த இரவில்
நீங்கள் ரகசிய மனவருத்தங்களுக்கு
அழுகை ஒத்தடம் தந்துகொண்டிருப்பீர்கள்

என்னைப் போல்
இந்த இரவில்
நீங்கள் மங்கிப்போன காதலை
நினைவுகளில் ஒளியாக்கப் பார்ப்பீர்கள்

என்னைப் போல்
இந்த இரவில்
நீங்கள் உங்களைப் புரட்டிக்கொண்டிருப்பீர்கள்

என்னைப் போல்
இந்த இரவில்
நீங்கள் பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பீர்கள்

என்னைப் போல்
இந்த இரவில்
நீங்கள் உங்களைத் திருத்திக்கொண்டிருப்பீர்கள்

என்னைப் போல்
இந்த இரவில்
நீங்கள் உற்றுப் பார்க்கும் கண்களை
மூடப் போராடுவீர்கள்

என்னைப் போல்
இந்த இரவில்
நீங்கள்  எதைஎதையோ அசைபோடுவீர்கள்

என்னைப் போல்
இந்த இரவில்
இல்லை அதிகாலையில்
நீங்கள் உறங்கப் போவீர்கள்

தமிழன்பன்

முப்பது நாள்களில் ஒரு நாள்கூட
ஒரு மாதத்திடம்
பொய் சொன்னதில்லை;
ஒரு மாதம்கூட ஒரு வருடத்திடம்
பொய் சொன்னதில்லை
அதனால்தான்
காலம் - இன்னும் காலமாகாமல்
வாழ்கிறது
காலத்துள் வாழ்பவன்
பொய்சொல்லிக் காலமாகிறான்!

-தமிழன்பன்

டான் அசோக்

குழந்தைகள் தூங்கி வழிகிறார்கள்;
காலை அவர்களுக்குப்
பின்னிரவைப் போல இருக்கிறது;
பஸ் ஸ்டாப்பில் முகமெங்கும்
பவுடர் பூசிய ஒரு சிறுவன்
கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறான்;

பிறந்து இரண்டு நாளே
ஆன நாய்க்குட்டியைப் போல
கண்களை மூடியபடி
அம்மாவின் கைப்பற்றி நடக்கிறாள்
அந்தச் சிறுமி;

எல்லோரையும் விட சீக்கிரமாக
பேச ஆரம்பித்துவிட்ட பாவத்துக்காக
அங்கே ஒரு குழந்தை
ப்ரீகேஜி சென்றுகொண்டிருக்கிறது;
தொட்டிலில் போட்டால்
இன்று முழுதும் தூங்கும்;

காலைவேளையோ
குழந்தைகள்
எப்போது எழுந்திருப்பார்கள் எனக்
காத்திருக்கிறது;
குழந்தைகளோ
மாலை எப்போது வரும்
என காலையிருந்து
காத்திருக்கிறார்கள்;

குழந்தைகள்
கெட்டப்பெயர் வாங்கலாம்;
காலையோ,
குழந்தைகளிடம்
கெட்டப்பெயர் வாங்குகிறது;

குழந்தைகளிடத்தில்
தூங்காதீர்கள் எனச் சொல்லும்
மனம் எனக்கில்லை;
ஆனால்
காலையில் இருந்து காலையிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறேன்;
ஒருநாளாவது
தூங்கித் தொலையேன்,
அவர்களைத் தூங்கவிட்டுத் தொலையேன் என்று;

-டான் அசோக்
ஜூலை17, 2019

கரன் கார்க்கி

வார்த்தைகள் மக்கி மண்ணோடு
மண்ணாய் கரைந்து போகாதவை.
எந்த மனிதன் மேல் வீசப்பட்டதோ
அந்த மனிதம் மரணம் வரை
வாழக்கூடியவை. பிறகும்
வார்த்தைகள் சாவதில்லை.!
     - கரன் கார்க்கி.!

கௌதம புத்தர்

நீங்கள் பேசுவதற்குமுன்,
அது உண்மையானதா?
அது தேவையானதா?
அது கனிவானதா?
என்ற மூன்று வாயில்களின் வழியே அனுப்பி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

                       --கெளதம புத்தர்

வாலி

பெற்ற தாய், தமிழ்த் தாய் இருவருக்கும் என் வணக்கம் என்பதை வாலி

எனக்கு
இரண்டு தாய்; இந்த
இரண்டு தாய் இல்லையேல்
இருந்திருக்கும் என் வாழ்வு
இருண்டதாய்

-வாலி

13/07/2019

June Malayalam film

https://youtu.be/0phBL607JlM

மணி

வைரமுத்து பிறந்ததின பகிர்வு
*மணி

#நிறம் ஒரு ஒப்பீடுதான்,ஆப்பிரிக்காவில இருந்தால் நான் தான் அங்கு சிவப்பு
#வைரமுத்து

#உசுரை விட்டு போறது மட்டும் சாவு இல்லை, 
ஊரை விட்டு போறதும் சாவு தான்
#வைரமுத்து

#பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம்,
விலைக்கு வாங்க முடியாது
-வைரமுத்து

#இங்கே மண் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறது,
மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்
#வைரமுத்து

#கட்டிலுக்கு தூக்க மாத்திரையும், ஊக்க மாத்திரையும் தேவைப்படாதவரை உடல் நலமுடன் இருப்பதாக அர்த்தம்
-வைரமுத்து

#சிறகிருந்தால் போதும்,
சிறியதுதான் வானம்.!
-வைரமுத்து

#வாரக்கடைசியில் காட்டிக்கொடுக்கும் சாயமடித்த மீசைப்போல,
மூடிமூடி வைத்தாலும்
முட்டி முட்டி எட்டிப்பார்க்கும் துக்கம்
-வைரமுத்து

#காதலில் மட்டும்தான் தொடங்குவது கஷ்டம்; தொடர்வது கஷ்டம்; முடிப்பது கஷ்டம்; முடிந்தாலும் கஷ்டம்.
-வைரமுத்து

#பிணங்களை எரிப்பதற்காக மேல் நாட்டில் மின்சார அடுப்பு தயாரிக்கிறார்கள்.இந்தியாவில் மகன்களை தயாரிக்கிறார்கள்
-வைரமுத்து

#உடம்பு செத்துப்போனா மண்ணுக்குள்ள பொதைக்கிறோம்.மனசு செத்துப்போனா அவன் அத உடம்புக்குள்ளயே பொதச்சிர்றான்
-வைரமுத்து

#இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு
இனிமேல் இலட்சியத்துக்கு நீதான் இலக்கு
-வைரமுத்து

#இங்கே மண் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறது,
மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்
#வைரமுத்து

#உசுரவிட்டு போறதுதான் சாவா?
ஊரவிட்டு போறதும் சாவுதான்
#வைரமுத்து

#மகிழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை
மனசின் கொள்ளளவு
-வைரமுத்து

#தட்டில் மிச்சம் வைக்காதே
வயிற்றில் மிச்சம் வை

பசியோடு உட்கார்
பசியோடு எழுந்திரு
-வைரமுத்து

#காதலில் மட்டும்தான் தொடங்குவது கஷ்டம்; தொடர்வது கஷ்டம்; முடிப்பது கஷ்டம்; முடிந்தாலும் கஷ்டம்.
-வைரமுத்து

#ஆடம்பர அவசரத்தில்
புல்லாங்குழலைப் பொன்னில்
செய்துவிடாதீர்கள்
அது மூங்கிலாகவே இருக்கட்டும்
-வைரமுத்து

#ஜனநாயகத்திற்கு ஜனங்கள் தேவையில்லை

இங்கே வெட்டியானுக்கும்
வேட்பாளனுக்கும்
பிரேதங்களே தேவை
-வைரமுத்து

#நூறு வருசம் எதுக்கு இருக்கனும்?
ஒரு மனுசன் சொந்தமா ஒன்னுக்கு போறவரைக்கும் தான் இருக்கனும்.ஏங்கையைத் தூக்கிவிட இன்னொரு கையி வேணுங்கிறப்ப நான் இருந்தா என்ன?போனா என்ன?

-வைரமுத்து
(க.இதிகாசம்)

#முடிக்கத் தெரியாத சிறுகதையைக்
குறுநாவல் என்று
கூப்பிட்ட மாதிரி
தீர்க்கத் தெரியாத பிரச்சனைக்கு
விதி என்று பெயரிட்டு
விலகிவிடுவதா?
-வைரமுத்து

#வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும்,மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புதான்
-வைரமுத்து

#இந்தப் பூவுலகிற்கு பிறந்து வருவதற்கு ஒரே வழிதான். ஆனால் அதை விட்டுப் போவதற்குத்தான் பல வழிகள்

-வைரமுத்து

தோழமையுடன் மணிகண்டபிரபு

பாப்லோ நெரூடா

*வினாக்களின் புத்தகம்* ..

பழுப்பு நிறத்தை உணரத் தொடங்கிய உடனேயே, ஏன் இலைகள் தற்கொலை செய்து கொள்கின்றன??

- பாப்லோ நெரூடா..

பாப்லோ நெரூடா

*வினாக்களின் புத்தகம்* ..

எனக்குள் இருந்த குழந்தை, இப்போது இருக்கிறதா..?
போய்விட்டதா..??

- பாப்லோ நெரூடா..

பாப்லோ நெரூடா

*வினாக்களின் புத்தகம்* ..

சூரியனை நோக்கி, மேலே செல்ல வேண்டும் என்பதை வேர்கள் அறியுமா..??

- பாப்லோ நெரூடா..

மணி

#TWITTER  இல் படித்த சில அருமையான tweets
*மணி

> முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள், அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்..

> துரோகிகளில் சிறந்தவனை தேடிக்கொண்டிருக்கிறேன், நண்பனாக்கிக்கொள்வதற்கு...

> பார்வை அற்ற ஒருவருக்கு சாலையை கடக்க உதவினேன், சிறுது நேர கண் தானம் செய்த திருப்தி..

> மன்னிப்பு என்றால் என்ன? பூக்களை கசக்கும் போது அது தரும் நறுமணம்...

> சில நேரங்களில் தனிமை எனக்கு மிகவும் பிடித்துவிடுகிறது... ஏனெனில் அங்கு தான் முகமூடியின் அவசியம் எனக்கிருப்பதில்லை....

> 'சாவ' வச்சு பணம் பாக்கறதுல வெட்டியானும் மீடியாவும் ஒன்னு

> நம்ம வாழ்க்கையில எது வேணும் எது வேணாம்னு நாம தான் தீர்மானிக்கனும்.. அப்போதான் அது நமக்கு பிடிச்ச வாழ்க்கையா அமையும்..

> ஓர் நிராகரிப்பில் வேதனையின் உச்சத்தில் விழிகளில் இருந்து தடையை மீறி விழுந்தது என்றாலும் சிறு காயங்களுடன் பிழைத்து கொண்டது தன்மானம்

> வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்...." வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்..........."

> ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை..

> தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது

> கல்வி கற்க புத்தகங்களை விட 'நோட்டுக்களே' அதிகம் தேவைப்படுகின்றன.!

> பொறுமை உடையவர்களின் கோபம் பொல்லாதது!

> பெண்மையை விற்பவள் மட்டுமல்ல கண்ணியத்தை விற்கும் ஆணும் விபச்சாரியே!!!

வாழ்க்கை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி! ஒவ்வொருத்தர் கண்ணுக்கு ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும்! ஒரு சிலருக்கு புரியாம கூட போயிடுது!!

> என் இறப்பு எவருக்கும் வருத்தம் அளிப்பதாக இல்லாமல் போனாலும், ஒருவர் கூட நிம்மதி பெருமூச்சு விடுவதாக அமைந்துவிடக் கூடாது!!!

> மதிப்பே இல்லாத பூஜ்ஜியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி தன் மதிப்பை கூட்டியவன் தான் இந்தியன்!!

> ஒரு சில பிரிவுகள் வலியும் வேதனையையும், ஒரு சில பிரிவுகள் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் தரும்!!!

> யாதொருவரின் அன்பிலும் தேங்கி நின்றுவிடாமல் விடை பெற்றுச் செல்வதே புத்திசாலித்தனம்..

> உயிரற்ற மண்ணுக்கும் பசி! உணவான மனித உடல்கள் மீது!

>  "உங்கள் சொந்த ஊர் என்ன?" என்ற கேள்வி பெரும்பாலும் ஜாதியை தெரிந்துக் கொள்ளவே கேட்கப்படுகிறது!! எனக்கு ஊரே இல்ல போங்கடா!!!

>  உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்தாலும் அவை அனைத்தையும் உண்பதற்கு "மண்" உயிருடன் இருக்கும்... இதுதான் வாழ்க்கை....

> பாம்புக்கு காது கிடையாது எனில், ’தவளை எப்படி தன் வாயால் கெடும்’. சொல்லுங்க.??

> எனக்கு பயம் என் திறமை மீது அல்ல, உங்கள் எதிர்ப்பார்ப்பின் மீதே!!!

> சந்தோசமாக உள்ளவனிடம் மட்டுமே இவ்வுலகம் நலம்விசாரிக்கும்! கஷ்டத்திலே இருப்பவனோட தொலைபேசிஎண்கள் கண்டிப்பாகபழைய செல்போனோட தொலைஞ்சுபோயிருக்கும்

> வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு முதலில் தண்ணீர் கொடுப்பதுதான் பண்பாடு இப்ப வைபை பாஸ்வேர்ட் கொடுப்பதே சிறந்த பண்பாடு

> எங்கிட்ட வேலையில்ல, பணமில்ல'னு கேவலமா பார்க்கும் அனைத்து உறவுகளுக்கும் , நான் சிரிச்சுகிட்டே ஒன்னுமட்டும் சொல்லிக்கிறேன் நா இன்னும் சாகலடா

>  நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில்.. நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி..

> அன்பு நிறைய பேர்கிட்ட கிடைக்கும் ஆனா ஒருவரிடம் நாம் இழந்த அன்பை ஆயுளே அழிந்தாலும் இன்னொருவரிடம் பெற முடியாது

> ஏதோ ஒரு உறவு தந்த ஏமாற்றம் தான் நிறைய ஆண்களின் வாழ்க்கை மற்றும் நடவடிக்கையின் மாற்றத்திற்கு காரணம்

> இப்பவெல்லாம் "Silence Please"னு சொல்றதுக்கு பதிலா, ஒரு மோடம் வெச்சி "WIFI" Password குடுத்தா போதும் மயான அமைதி கெடச்சிடும்..  

> பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை!

> வாழ்க்கை எவ்வளவு வேகமாக பயணித்தாலும் இறுதி ஊர்வலத்தில் மெதுவாகத்தான் சென்று முடியும்!!

> வாழத் தெரியாம சாமியார போனவங்கிட்ட எப்படி வாழறதுன்னு கேக்க போவுது ஒரு மூடர் கூட்டம்!!!

> வேண்டாம் என விலகியவர்களும் வேண்டும் என இனைய வைக்கும் சக்தி #பணத்திடம் உண்டு..;-)

> பேச்சிலர்கள் சமயலின் போது குக்கரின் உட்புறத்தை மட்டுமே துலக்குகிறார்கள் எங்களுக்கு சுத்தம்தான் முக்கியம்

> காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.

> திருக்குறளை... வாழ்றதுக்காக படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்க'தா அதிக பேரு..!

> அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை!!

> #Money மட்டுமே மதிக்கப்படுகிறது... மனிதம் பலரால் மிதிக்கப்படுகிறது..

> முதுகில் குத்திய உன்னை திரும்பிப் பார்க்கிறேன், என்னுடனான நட்பின் மிச்சம் உன் பார்வையில் இருக்கிறதா என்று!!

> அம்மா சுருங்கி "Mom" ஆனாள், அப்பா சுருங்கி "Dad" ஆனார், சகோதரன் சுருங்கி "Bro" ஆனான்,, இன்னும் சுருங்காதது நம் வாய் மட்டுந்தான்..

>  நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :-
நம்மட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..!
எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..!

> 5000 ரூவா சம்பளம் வாங்கும்போது இருந்தா பற்றாக்குறை லட்ச ரூவா வாங்கும்போது வந்தா நாமதான் வாழ தெரியாம வாழ்றோம் அர்த்தம்

> எவ்வளவோ மூட நம்பிக்கை இருக்கு, அதில ஒன்னா, பொது இடத்துல எச்சில் துப்பினா சாமி வாயில குத்தும்ன்னு சொல்லி வளர்த்து இருக்கலாம்

> இதுவும் கடந்து போகும்.. கடந்து போனால் பரவாயில்லை.. ஏறி மிதிச்சி நம்மள சட்னி ஆக்கிட்டு தான் போகுது ...

>  எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை
உண்டு...!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்...!!!

> சிரிக்க நினைத்தால் சிரித்து விடுங்கள், மற்றவர்கள் பார்ப்பார்களே என கவலைப்பட்டால், அவர்கள் உங்களை ஆயுள் முழுதும் சிரிக்க விட மாட்டார்கள்

> எல்லையை மீறினால் தான் சில நேரங்களில் நமக்கான எல்லையே தெரிகின்றது! #வாழ்வில்

> தெய்வமாக மதிக்கும் அனைத்துக்கும் பெண்ணின் பெயர் வைத்த இந்த சமூகம் கீழ்தரமான கெட்ட வார்த்தைகளை அவர்கள் பெயரால் உ௫வாக்கியது ஏன் #முரண்

>  மண்டியிட்டு தான் வாழ வேண்டும் என்றால் இறந்து விட்டு போகலாமே,, மண்டியிட்டு வாழ்ந்து என்ன சாதித்து விட முடியும்..?

> எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.

> கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!!

> நேர்மையாக சம்பாரித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை !

> போக்குவரத்து விதிகளை சாகசமாய் மீறும் எமக்கு... அடுத்தவர் மீறுவதைக் கண்டதும் உடனே கோபம் வருகிறதே.... ஊருக்கு தான் உபதேசமோ

> பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!!

> பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்...

> நாம் பைத்தியம் என்று ஏளனமாக பார்ப்பவர்கள் தான்., வாழ்நாள் முழுவதும் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள்..

> முத்தத்தை கொடுக்கும் போது வாங்கி விட்டு, வாங்கிய பின் "ச்சீ எச்சி" என துடைப்பதில் இருக்குது மகள்களின் பேரழகு.. #மகளதிகாரம்

> தவறே செய்யாவிட்டாலும் ஆசிரியர் மீதும் காவலர் மீதும் ஒரு வித இனம் புரியாத பயம் இருக்கத்தான் செய்கிறது!!!

> நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், 'தன்னடக்கம்' என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். உணர்ந்தவன் உயர்வான்!!

> இந்த வாய்க்கரிசிமட்டும் நேற்று கிடைத்திருந்தால் பட்டினிச்சாவை ஓரிருநாள் தள்ளிப்போட்டிருக்கலாம்!!

>  சோகமாய் இருப்பவரிடம் இருந்து"என்ன ஆச்சு"என்ற கேள்விக்கு "ஒண்ணுமில்லை" என்று வரும் பதிலுக்கு 'உன் வேலைய பாரு' என்றே பொருள் கொள்ளவேண்டும்!!

> காசுபணம் இல்லாம படிப்பவிட்டவன் நிறைய இருக்கான்! ஆனா காசு இல்லைனு பீடி,சிகரெட்,தண்ணி,கஞ்சா, குட்காவ விட்டவன் ஒருத்தன் கூட இல்ல! #வாழ்க்கை

> லாரியில அழுது கொண்டே சென்றது..... ஆற்றிடமிருந்து பிரிந்த மணல்.......!!!

> கஷ்டங்கள் பழகிக்கொண்டாலும் வலித்துக் கொண்டே தான் இருக்கிறது...

-மணி

சுகுணா

ம்..
என்று சொல்லிச்
சென்ற
கூட்டத்தின் நடுவில்

ஏன்
என்று கேட்ட
ஒற்றைக் குரல்
மட்டுமே உயிர்ப்பானது.

-சுகுனா

நா.முத்துக்குமார்

@manipmp

நா.முத்துக்குமார் பிறந்தநாள் பகிர்வு

கடலுக்குள் தொடங்கி
குடலுக்குள் முடித்தது வாழ்க்கையை
"மீன்"
-நா.முத்துக்குமார்

#பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்.
-நா.முத்துக்குமார்

#தன் பழைய காதலியின் குழந்தை
தன்னை மாமா என்றழைப்பதை மட்டும்
எந்த மாமாவும் விரும்புவதில்லை
-நா.முத்துக்குமார்

#எல்லா புத்தகங்களையும் நின்று கொண்டு
படிக்கிறது-'வறுமை'
-நா.முத்துக்குமார்

#இங்கு பெரும்பாலும்
கல்யாணத்தை மட்டுமல்ல,
கல்யாணத்தில்
கலந்து கொள்வதைகூட
நகைகளே தீர்மானிக்கின்றன
-நா.முத்துக்குமார்

#ஒரு நாள், அப்பா தோழனாகும் தருணங்கள் வாய்க்கும்.அந்தக் காலத்தில் நீங்கள் அப்பாவாகியிருப்பீர்கள்
-நா.முத்துக்குமார்

#பெண் விடுதலை என்றால்
அம்மாக்களை விட
அக்காக்கள் அதனை
அடைந்துவிடுகிறார்கள்
-நா.முத்துக்குமார்

#ஒவ்வொரு அடகுக்கடைகளிலும் உலர்ந்து கொண்டிருக்கிறது பிரியமில்லாமல் கழட்டிக் கொடுத்த ஒரு பெண்ணின் கண்ணீர்த்துளி-நா.முத்துக்குமார்

#ஆழமான ஆறு
இறங்கியது லாரி
மணல் எடுக்க..
-நா.முத்துக்குமார்

#மாற்றான் அலமாரிப் புத்தகத்துக்கு
மணம் அதிகம்
-நா.முத்துக்குமார்

#“காதல் கவிதை எழுதுபவர்கள்
கவிதை மட்டுமே எழுதுகிறார்கள்.
அதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களே
காதலிக்கிறார்கள்”.
– நா. முத்துக்குமார்.

#யாரும் மெனக்கெடாமலே
வருடந்தோறும் உருவாகிறார்கள்
சில அறிவாளிகளும்
முட்டாள்களும்
-பள்ளி
#நா.முத்துக்குமார்

#எந்த ஊரில் கேட்டாலும் கரகரப்பாகவே இருக்கிறது
"இஞ்சி மொரப்பா" விற்பவனின் குரல்
-நா.முத்துக்குமார்

#ஒவ்வொரு அடகுக்கடைகளிலும் உலர்ந்து கொண்டிருக்கிறது பிரியமில்லாமல் கழட்டிக் கொடுத்த ஒரு பெண்ணின் கண்ணீர்த்துளி
-நா.முத்துக்குமார்

#நேற்று கலைந்த மேகங்களை பற்றி வருத்தப்படாமல் வானம் புதிய மேகங்களை பிரசவித்து கொண்டே இருக்கிறது
-நா.முத்துக்குமார்

" காலம் மைதானத்தில் விளையாடுபவனை பார்வையாளனாகவும், பார்வையாளனை பரிசு வெல்பவனாகவும் மாற்றிவிடுகிறது # நா.முத்துக்குமார்"

-பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நா.முத்துக்குமாருக்கு..
வாழ்த்த வார்த்தைகள் இருக்கும்வரை வாழ்த்துவோம்

-மணிகண்டபிரபு