என் வாசிப்பை வளப்படுத்திய எஸ்.ரா வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இவரின் சிறிது வெளிச்சம் என் வாழ்வில் கிடைத்த பெரும் வெளிச்சம்.நான் ரசித்த அவரின் வரிகள்.இவரின் வரிகள் ரசித்து இட்ட என் ட்விட்டர் பதிவுகள் @Manipmp
*"நல்ல எழுத்து எல்லா நேரங்களிலும்
தாமதமாகவே உலகின் கண்களில்
அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது.
-எஸ்.ராமகிருஷ்ணன்.
*சாலைகளுக்கு முடிவே இல்லை. அது உலகை நோக்கி பயணிக்கிறது
#எஸ்.ரா
*மெளனம் நிறைய விஷயங்களை எளிதாகச் சொல்லிவிடுகிறது
-எஸ்.ரா
*சினிமா தியேட்டரில் பாப்கார்ன் விற்பது எதனால்?
படம் நல்லா இல்லை என்பதை மறக்கடிக்க!
-எஸ்.ரா
*பொய்யின் விதைகளாக இருப்பவை சொற்களே
-எஸ்.ரா
*கடந்த காலத்திற்குள் நம்மை அழைத்துப் போவதற்கு கால இயந்திரம் தேவையில்லை.ஒரு கருப்பு-வெள்ளை புகைப்படம் போதும்
-எஸ்.ரா
*வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான்
-எஸ்.ரா
*கஷ்டத்தைவிடவும் அதை மூடி மறைப்பதுதான் பெருந்துயரம்
-எஸ்.ரா
*ஒரு நாளின் தொடக்கம் என்பது பிரச்சனைகளின் ஆரம்பமாகவே இங்கே பலருக்கும் இருக்கிறது
-எஸ்.ரா
*சென்ற நூற்றாண்டில் ஒரு மனிதன் நடந்த தூரத்தில் 10%கூட இன்று நாம் நடப்பதில்லை.நடை சுருங்கிவிட்டது. கால்களின் ஓய்வுதான் மனச்சோர்வின் முதல்படி.நீண்டதூரம் நடத்தலைக் கால்களால் சிந்திப்பது என்கிறார்கள்...
-எஸ்.ரா
*அவசரம்,வைரஸ் கிருமிகளை விட மோசமானது.அது உடலுக்குள் புகுந்த மறு நிமிடம் கை கால்கள் உதற துவங்கிவிடுகின்றன
-எஸ்.ரா
*குடும்ப பிரச்சனை என்பது வெளியே தெரியாமல் தொந்தரவு தரக்கூடிய பல்வலி போன்றதே
-எஸ்.ரா
*ஒவ்வொரு வயதும் ஒரு ரகசியத்தைப் பாதுகாக்க நினைக்கிறது.ஒளித்து வைக்கிறது.ஆனால்,இன்னொரு வயது அந்த ரகசியத்தை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது
-எஸ்.ரா
* @manipmp: உண்மையில் சந்தோசத்தை கொண்டாட நமக்குத் தெரியல,சேர்ந்து குடிப்பதை தவிர
-எஸ்.ரா
* புத்தகங்கள் கணப்பது காகிதங்களால் அல்ல, சொற்களால்..!
#எஸ்.ரா”
*காகிதம் இரண்டு இடங்களில் புகழடைகிறது. ஒன்று பணமாகும்போது,மற்றொன்று புத்தகமாகும்போது
-எஸ்.ரா"
*பொய் ஒரு விதையில்லாத் தாவரம்
இன்னும் இன்னுன் அதிகம் வரிகள் மனதில் இருக்கின்றன.நினைவில்.நின்ற வரிகள் இவை.
தோழமையுடன் மணிகண்ட பிரபு