18/07/2021

மகேசிண்டே பிரதிகாரம்

மகேசிண்டே பிரதிகாரம் (தமிழில் நிமிர்) படத்தில் பகத் பாசிலின் அப்பா சொல்லுவார்.

"புகைப்படக்கலையில் தேவை பொறுமை.அந்த ஒரு நிமிடம் ஒரு தருணத்துக்காக எவ்வளவு நேரம் வேணாலும் காத்திருக்கனும்"

எஸ்.ரா

சோறு என்பதற்கு அடிசில்,கூழ்,அழினி,அவிழ்,கொன்றி,நிமிரல்,புழுங்கல்,பொம்மன்,மிதவை என பல சொற்கள் தமிழில் உள்ளன
-எஸ்.ரா

தொ.ப

இயற்கையல்லாத முறையில் நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்கையோடு இறப்பது இயல்பாகும். எனவே அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நீர்பந்தல் அமைப்பதும் தமிழர்களின் வழக்கம்.

-தொ.ப

பாக்யம் சங்கர்

சுதந்திரம் இல்லாவிட்டால் சொர்க்கம் கூட நரகம் தான்

-பாக்யம் சங்கர்

க.வை.பழனிச்சாமி

பறந்து போகும் பட்டாம் பூச்சிகளோடு என் கண்களும் போயின

-க.வை.பழனிசாமி

உமா மகேஸ்வரி

காத்திருக்கிறது அந்தக்கூடு
தன் சொந்தப் பறவைக்கென

-உமா மகேஸ்வரி

தொ.ப

குட்டை, மழைநீரின் சிறிய தேக்கமாகும்.
குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம்' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல்' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய்' என்றும் பெயரிட்டு அழைத்தனர்.

-தொ.ப

மாக்சிம் கார்க்கி

வேலை மகிழ்ச்சி தரும் போது,
வாழ்க்கை சந்தோஷமாகிறது.

வேலை கடமையாகும் போது,
வாழ்க்கை அடிமைத்தனமாகி விடுகிறது.

- மாக்சிம் கார்க்கி

ஹென்ரிக் ஹெய்னே

நல்ல மலர்கள் பூப்பதற்கு முன்னாலேயே பிய்த்தெறியப்படுகின்றன

-ஹென்ரிக் ஹெய்னே

தொ.ப

*தண்ணீர்*

குளிர்ச்சியினை உடையது என்பதனால் நீரைத் 'தண்ணீர் என்றே தமிழர்கள் வழங்கி வருகின்றனர். நீரினால் உடலை தூய்மை செய்வதனை குளிர்த்தல் (உடலைக் குளிர்ச்சி செய்தல்) என்றும் குறித்தனர்.

-தொ.ப

கிரேஸிமோகன்

நூறாவது பொய்யை முதலிலேயே முடிவு செய்த பிறகே, முதல் பொய்யை சொல்ல வேண்டும்

#கிரேஸிமோகன்

ராஜாவை கொல்லுதல்

வரலாறு என்ன சொல்கின்றது என்றால் 
ராஜாவை கொல்லும் முயற்சியை சிம்மாசனத்துக்கு அருகில் உள்ளவன் தான் செய்வான்..

மகாராணி இணைய தொடரில்..

மனுஷ்ய புத்திரன்

"இந்த நாள் என்பது அதை
 வாழ்கிறவர்களால் அல்ல அதைப்பற்றி கேட்கும்  ஒரே ஒருவரால் ஆனது"

-மனுஷ்ய புத்திரன்

கவிஜி

ஏதோ சொல்லத் துடிக்கிறது
இடம் பொருள் ஒவ்வா மனநிலை
ஒளித்து வைத்த உள்ளொன்று புறம் ஆகி மேய்கிறது
பேரழுகையோ பெரும் தவிப்போ
தேடலின் நுனியில் காட்டு வாசம்
தனித்த நடையில் தகிக்கும் மௌனம்

- கவிஜி

சேகுவாரா

உண்மையான புரட்சியாளன் அன்பின் பேராற்றலால் வழி நடத்தப்படுகிறான்

-சேகுவேரா

மனுஷ்ய புத்திரன்

இன்று 
ஓர் இலை உதிர்ந்தபோது
ஒரு மரம் அதிர்ந்ததைப் பார்த்தேன் 
ஒரு குருவி 
திடீரென்று பறந்தபோது 
காற்றில் ஒரு விரிசலைக்கேட்டேன் 
இவ்வளவு மெலிதானதை 
உன்னிடம் எப்படிக் கொண்டுவருவது
என்றுதான் தெரியவில்லை

-மனுஷ்யபுத்திரன்

சுஜாதா

இந்த உலகத்தில் நிம்மதியான மனிதர்கள் யார், யார் ?

ஆரோக்கியமுள்ளவர்கள் மட்டுமே.

-சுஜாதா

கமல்ஹாசன்

சந்தோஷம்னா என்னென்னு மனுஷனுக்கு அத அனுபவக்கையில தெரியாது.... அதெல்லாம் போனப்பறம் தான் தெரியும்...

-கமல்ஹாசன்
(விருமாண்டி)

எழிலரசு

இருவிரல் குவித்துப்
பிடிக்கப்போகும் கணம்
அடுத்தடுத்த பூவுக்குப்
பறந்தமரும்
பட்டாம்பூச்சியைப் போல்
போக்குக் காட்டுகிறது
குழந்தை
வீட்டுக்கு வரும்
அறிமுகமில்லாதவர்
அழைக்கையில்..!”

-எழிலரசு.

இளம்பிறை

வந்து விழுகிற
எல்லாக் கற்களும்
விழுந்த இடத்தில்
மூழ்கிக் கிடக்க
தன் போக்கில்
போய்க்கொண்டிருக்கிறது நதி

-இளம்பிறை

ஓஷோ

முழு உலகையும் நேசிப்பது
மிக மிக எளிது

தனிமனிதனை நேசிப்பது
மிக மிக கடினம்

-ஓஷோ

மார்க் ட்வைன்

ஒரு விஷயத்தில் சந்தேகம் இருந்தால் உண்மையை சொல்லிவிடு.

-மார்க் ட்வைன்

தென்கச்சியார்

ஒரு பெரிய பணக்காரர் ஆடிட்டர் வேலைக்கு இன்டர்வியூ வைத்திருந்தார்.48000யும் 84000யும் பெருக்குங்க..இதான் கேள்வி னு சொல்லியிருக்கார். நூறு பேரும் கணக்கு போட்டாங்க.

*ஒருத்தர் மட்டும் உங்களுக்கு எவ்வளவு ரூபாய் வரனும் னு கேட்டாராம்.உடனே அப்பாய்ன்ட் செய்திட்டார்

-தென்கச்சியார்

பாவண்ணன்

ஒரு குழந்தை மீண்டும் மீண்டும் ஒரு வரியைச் சொல்வதன் வழியாக, அதுதான் கண்டடைந்த மகிழ்ச்சியை இரு மடங்காக, மூன்று மடங்காக பெருக்கிக் கொண்டே செல்கிறது

-பாவண்ணன்

ஓஷோ

இந்த கணம் தான் உண்மை.
மற்றவை அனைத்தும் நினைவுகளும் கற்பனைகளும் தான்

-ஓஷோ

மணிகண்டபிரபு

நானே கேள்வி.. நானே பதில்..!  #MyVikatan
-மணிகண்டபிரபு

#அதிகாரத்தில் உள்ளவர்கள் சிபாரிசு செய்யலாமா?

நீதிக்கட்சியில் சென்னை மாகாண முதல்வராய் இருந்த பனகல் அரசர் பரிந்துரை கேட்டு வருபவர்களிடம் சொல்வாராம்

"For every one recommendation,I create nine enemies and one doubtful friend

ஒவ்வொரு சிபாரிசினைச் செய்யும்போதும் நான்,ஒன்பது விரோதிகளையும்,ஒரு உறுதியற்ற சந்தேகமான நண்பனையும் உருவாக்கிக் கொள்கிறேன் என்றாராம்.

#ஆரோக்கியத்தை பாதுகாக்க வழி?

ஆரோக்கியத்தை பாதுகாக்க எளிய வழி..ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படாமல் இருப்பதுதான் என்று அப்துல்காதிர் ஜிலானி எழுதிய வரி நினைவுக்கு வருகிறது

#ஒரு நெகிழ்ச்சிக் கதை?

நடிகர் ராஜேஷ் பகிர்ந்த ஒருகதை ஒரு பணக்கார குடும்பம் கோவிலுக்கு போறாங்க. அந்த வீட்டுக்குழந்தை அங்குள்ள குளத்தில் விழப் போகும் போது அங்கு வந்த ஒரு மருத்துவர் காப்பாற்றிவிடுகிறார். அதற்கு நன்றிக் கடனாக ப்ளாங்க் செக் ஒன்றை கொடுத்து 50 லட்சம் வரை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்.

திரும்பி மருத்துவமனைக்கு வருகிறார் மருத்துவர். அங்கு பணிபுரியும் கம்பவுண்டர்.. டாக்டரிடம் அவசரத்தேவைக்கு பணம் கேட்கிறார். டாக்டர் தன் பையிலிருந்த அந்த செக்கை கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்கிறார்

அதிகம் ஆசைப்படாத ஊழியர் 50 ருபாய் மட்டும் எழுதிக்கொண்டு புறப்படுகிறார்.
கதையின் தலைப்பு Good-Better-Best
மூவருக்கும் பொருந்தும் தலைப்பு.
நல்லவன்-மிக நல்லவன்-மிகமிக நல்லவன்

#மூடநம்பிக்கையின் ஆரம்பப்புள்ளி எது?

வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க நாட்டில் வெள்ளைக்காரன் மின்சாரத்தால் ஓடும் மோட்டாரை கண்டுபிடித்தான். அதை கரும்பு பிழிய பயன்படுத்தினான்.

அவனிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான். அவனிடம் இந்த மோட்டாரை வணங்கிவிட்டுத்தான் நீ சுவிட்சை போட வேண்டும் என்றான். அவன் அதை ஏதோ சக்தியுள்ள கடவுளாய் நினைத்தான். அது எந்திரம் என சொல்லவில்லை.
ஒரு நாள் வெள்ளைக்காரன் ஊருக்குப்போனான். மறுநாள் அந்த வேலைக்காரன் மெசினை ஆராய்ச்சி மனப்பான்மையுடன் சுற்றி வருகிறான். சுவிட்சை துணிந்து போட்டான். பட்டை ஓடியது. தொட்டுப்பார்த்தான் கை இழுத்துக் கொண்டது. பின் அவனுடைய தலையும் இழுத்துக்கொண்டது.

இதை இன்னொருவன் பார்த்து அலறுகிறான். பின் நாம் வணங்காமல் இயக்கியதாலும், பலி கொடுக்காமல் இந்த மெசினை இயக்கியதாலும் இந்த வேலைக்காரனை கடவுள் என்ற இந்த இயந்திரம் பலி வாங்கிவிட்டது என நினைக்கிறார்

எஜ்சிவெல் எழுதிய இக்கதை.. வழிபாட்டுக்கும், பலி வாங்கியதற்கும், மதத்திற்குரிய தகுதியையும் பெற்றது எனக்கூறி முடிக்கிறார்.

#சில பிரச்சனைகளை மெளனத்தினால் தீர்க்க முடியுமா?

எழுத்தாளர் சுந்தரராமசாமி கூறியது

Never explain! Never miss a good chance to keep silence

"மெளனம் கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது. பதில் உளறல்கள் கேள்வியைத் துவம்சம் செய்து விடுகிறது என்கிறார்

#ஒரு நீதிக்கதை?

காட்டுப்பன்றி மரத்தில் தன் கொம்புகளைப் தீட்டிக் கொண்டிருந்தது. அதை பார்த்த நரி எதிரி ஒருவரையும் காணவில்லையே, பின் ஏன் கொம்புகளை தீட்டுகிறாய் என்றது.

பன்றி சொன்னது.. எதிரி நம் முன்னால் வந்து விட்டால் அப்பொழுது எப்படி கொம்புகளை தீட்ட முடியும் என்பதால் இப்போது தீட்டுகிறேன் என்றது.

யுத்த காலத்திற்கு வேண்டிய காரியங்களை சமாதான காலத்தில் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்

#பணத்தை மட்டும் தேடிக்கொண்டு இருக்கிறவர்கள் பற்றி?

ஒருவர் காட்டுக்குள் கோல்ஃப் பந்தை பல மணி நேரமாக தேடிக் கொண்டிருந்தார். இறுதியில் ஆ பந்தை கண்டுபிடித்துவிட்டேன். இனி மைதானத்தை தேட வேண்டியதுதான் என்றார். இதுபோலத்தான் பணத்தை தேடும் அவசரத்தில் பலர் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்

#கடவுள் எந்த உருவத்தில் வருவார்?

டால்ஸ்டாய் எழுதிய dream merchant கதை இதற்கு பதில் சொல்கிறது.

ஒரு வணிகனின் கனவில் நாளை கடவுள் வருவதாக அறிவிக்கிறார்.மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து ஆவலாய் எதிர்நோக்கி காத்திருக்கிறான்.

முதியவர்,சிறுமி,பெண்மணி மூன்று பேரும் வருவதை பார்த்து புறக்கணிக்கிறான்.அன்றைய கனவில் மீண்டும் இந்த மூன்று பேரும் கடவுளாய் வந்து மறைகின்றனர்.

தான் கற்பித்து வைத்திருக்கிற உருவத்தில் கடவுளை எதிர்பார்த்தது எவ்வளவு பெரிய பிழை என்பதை உணர்ந்து வருந்துகிறான்.

#மதிப்பது எப்படி இருக்க வேண்டும்?

சிலரை மதிப்பது மரியாதைக்காகவும்

 சிலரை மதிக்காமல் இருப்பது சுயமரியாதைக்காகவும் இருக்க வேண்டும்

#விருதுக்கான தேர்வுகளில் பாரபட்சம் காட்டப்படுகிறதா?

காப்காவின் விசாரணை நாவலில் வரும் குட்டிக்கதை

 "சட்டத்தின் வாசலில் ஒரு வாயிற்காவலன் நிற்பான். நீதி பெற விரும்புகிறவர்கள் ஒவ்வொருவரையும் உள்ளே விடாமல் பலவந்தமாக தள்ளிக்கொண்டே இருப்பான். அவன் களைப்புறும் போது மட்டும் ஒருவர் அந்த வாசலுக்குள் நுழைய முடியும்" என்பார். இது சில முக்கிய விருதுக்கான தேர்ந்தெடுத்தலுக்கும் பொருந்தும்

#அழகின் அளவுகோல் என்ன?

அந்த அளவுகோல் பெண்ணை பெற்றவர்களுக்கு ஒரு விதமாகவும்,பெண் தேடுவோர்க்கு ஒருவிதமாகவும் அமைந்திருக்கிற மர்மம் என்னவென்று புரியவில்லை என்பார் ஜெயகாந்தன்.

#ஒருவரின் செயல் மற்றொருவருக்கு இடையூறாவது எப்போது?

வழிபாட்டுக் கூட்டத்தில் ஒருவரின் குறட்டை ஒலி சத்தம் அதிகம் கேட்டது. விழித்தெழுந்த அவன் குருவிடம் மன்னிப்பு கேட்டான்.அதற்கு குரு நீ கவனமாக இருக்கனும்.மற்றவர்களின் தூக்கத்தை குறட்டை விட்டு கெடுத்துவிடாதே என்றாராம்

-மணிகண்டபிரபு

ந.ஜெயபாஸ்கரன்

சுவரில் அறைந்த 
எருவில் தெரிந்த விரல்கள் 
யார் விரல்கள்
இனிமேல் நெருப்பில் எரியப்போகும் விரல்கள் 

-ந.ஜெயபாஸ்கரன்

யாத்திரி

இன்றுகளின் புறக்கணிப்பிற்காக நேற்றைகளின் அரவணைப்புகளை கேள்விக்குள்ளாக்க மாட்டேன், அதன் உயிர்த்தன்மையை நன்கறிவேன், போலவே அதன் மரணத்தையும்.

- யாத்திரி

SPB

எதிர்காலத்தை பற்றி?

எதிர்காலத்தில் என்னைப் பற்றி எங்கேயாவது ஒரு பேச்சு வரும்போது ரொம்ப நல்ல மனுசன்,அவரால் தீங்கு வந்தது கிடையாதுனு சொல்லனும். அப்ப நான் இருக்கமாட்டேன். ஆனால் அந்த மாதிரி ஒரு பேச்சு இருக்கனும். அது ரொம்ப முக்கியம்.

-SPB ஒரு பேட்டியில்

#HBDSPB

யாத்திரி

பேசமுடியவில்லை
வரமுடியவில்லை
என்பதற்கெல்லாம் நீ காரணம் தேடாதே, சொல்லவும் சொல்லாதே.
நானே மிகப்பொருத்தமான ஒன்றை
நான் ஏற்றுக்கொள்ளுமாறு ஒன்றை
கற்பனை செய்து
அதிலுன்னை இருத்திக் கொள்கிறேன்.

-யாத்திரி

ஸ்டீபன் ஹாக்கிங்

அறிவாற்றலின்
மிகப் பெரும் எதிரி அறியாமையல்ல;
அறிவாற்றல் பெற்றதாக யூகித்தல்!

-ஸ்டீபன் ஹாக்கிங்

கலீல் ஜிப்ரான்

வாழ்க்கை எப்போதும் 
அழகு நிறைந்தது 

அதில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை 
உறுதியாக நம்பியவர்களுக்கு! 

- கலீல் ஜிப்ரான்

யாத்திரி

பேச்சை தவிர்த்துவிட்டு நகரும் போது நிறுத்தி
உனக்கு என்னதான் பிரச்சனை என்கிறாய்,
அதொன்றுமில்லை கடமைக்கென்று பேசும் உன் குரலை
அறிந்துகொள்ளுமளவு உன்னை கிரகித்துவிட்டேன்
அதான் என் பிரச்சனை.

-யாத்திரி

கலைஞர்

பாராட்டும் புகழும் கிடைக்கும்போது
குட்டையான வாசலுக்குள்
குனிந்து செல்வது போன்ற பணிவு வேண்டும்.இல்லையேல்
நெற்றியடி கிடைக்கும்
-கலைஞர்
#karunanidhi

அப்துல்ரகுமான்

கவிக்கோ அப்துல்ரகுமான் நினைவுதினம்
*மணி

மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"

*கொஞ்சம் கொஞ்சமாய் 
இறப்தற்க்குப் பெயர் தான் 
வாழ்க்கை ...

*உன் தலையை புகழால் அலங்கரி
மகுடங்களால் அலங்கரிக்காதே
ஏனென்றால் 
மகுடங்கள் தலைமாறக்கூடியவை

*உன் சாவில் சாம்பலை அல்ல
நெருப்பை விட்டுச்செல்

*மனிதன் தன் 
வாழ்நாளில் 
செய்து முடிக்க வேண்டிய மிகப்பெரிய சாதனை 
மனிதனாவதுதான்!!!

*உடல் நிழலில் அமர்ந்தாலும் 
மனம் வெயிலிலேயே அலைந்து கொண்டிருக்கிறது.

*வரங்களே..
சாபங்கள் ஆகுமென்றால்
இங்கே
தவங்கள் எதற்காக...?

*உன்னை மறக்கும்போது
வாழ்கிறேன்
நினைக்கும் போது
இறந்து விடுகிறேன்

*வியாதிகளின் 
மேய்ச்சல் நிலம் 
முதுமை

*எழுத்துக்கள் என்பதென்ன?
அங்கீகரிக்கப்பட்ட 
கிறுக்கல்கள் தாமே?

*வாழ்க்கைத் தேர்வில்
வெற்றி பெறுகிறவர்கள்
விடைகளை அறிந்தவர்கள் இல்லை
வினாக்களை அறிந்தவர்களே

*விதி 
தொட்டிலைச் செய்யும்போது
பாடையையும்
செய்துவிடுகிறது

*நீ பிரிகிறாய்
கட்டடம் முடிந்ததும்
பிரிக்கப்படும் சாரம் போல

*பழமை என்பது
வயதாகிப்போன புதுமைதான்
புதுமை என்பது
மறுபிறப்பெடுத்த பழமைதான்

*மரணக் காற்றில் ஒரு விளக்கை போல் அணைந்து போகாதே!

ஒரு ஊதுவத்தியைப் போல் கொஞ்சம் நறுமணமாவது விட்டு விட்டுப் போ!

*நீ கிடைத்துவிடாதே
உன்னைத் தேடுவதில்தான்
என் இருத்தல்
இருக்கிறது

*தர்மம் வென்றது" என்கிறார்களே;
அதர்மம் அல்லவா வென்றிருக்கிறது என்று
குழம்புகிறீர்களா?
உங்களுக்கு விஷயம் தெரியவில்லை;
அதர்மம் "நியூமராலஜி"ப்படி தன் பெயரைத்
தர்மம் என்று மாற்றிக் கொண்டது!

*Naked truth வெளிப்படையான, நிர்வாண உண்மை

ஒருநாள் பொய்யும்,உண்மையும் குளிக்கச் சென்றன.பொய் குளித்துவிட்டு கரையிலிருந்த உண்மையின் ஆடையை அணிந்து சென்றது.கரைக்கு வந்த உண்மை ஆடையின்றி நிர்வாணமாகவே புறப்பட்டுச் சென்றது.உண்மையிடம் மறைக்க வேண்டியது எதுவும் இல்லை

*எல்லாப் பக்கமும் 
நின்று பார்ப்பவனே
உண்மையை முழுமையாக
தரிசிக்கிறான்

*நல்ல வேளை வறுமைகொடு கிடைத்தது.இல்லையென்றால் இதன் கீழ் வாழ்பவர் வேறு எதன் கீழ் வாழ்வார்கள்...?

*குளிர் காய்வதற்காய் 
சுள்ளி பொறுக்கச் சென்றாய்,
சுள்ளி பொறுக்குவதிலேயே உன் காலம் கழிந்துவிட்டதே,
எப்போது நீ குளிர் காயப் போகிறாய்?

*கண்ணுக்கு அழகாக இருப்பவர்களைக் காலம் சிதைத்து விடுகிறது
காதுக்கு அழகாக இருப்பவர்கள்
மரணத்தையும் அலங்காரமாக்கிக் கொள்கிறார்கள்

*சிலப்பதிகாரம்:
பால் நகையாள் வெண்முத்துப் பல்நகையாள் கண்ணகிதன் கால்நகையால் வாய்நகைபோய் 
கழுத்துநகை இழந்த கதை..

*நீ காதலிக்காவிட்டால் என்ன?
ஒரு பக்கம் பற்றினாலும்
அது நெருப்புதான்

தோழமையுடன்

-மணிகண்ட பிரபு

யாத்திரி

உமக்கு சேவகம் செஞ்சே
நான் இத்துப் போயிட்டேன்
இனிமேக்கொண்டு கூப்டீரு
மருவாத கெட்ரும்.
எப்ப பாத்தாலும்
நொய்யி நொய்யினுக்கிட்டு
ஈஸ்வரா,
என்னைய சீக்கிரம் கூப்டுக்கோயேன்.
புலம்பிக்கொண்டே வெளிவந்த கிழவி
சிறிது நேரத்தில்
என்ன சத்தத்தையே காணோம் என்று
கிழவனின் அறையை எட்டிப்பார்ப்பாள்.

-யாத்திரி

மு.மேத்தா

என்னுடைய முதல் தேதி
சம்பளத்தில் எல்லோருடைய முகமும்
தெரிகிறது

என் முகத்தைத் தவிர

-மு.மேத்தா

நா.பார்த்தசாரதி

மனிதர்கள் தனித்தனியே நல்லவர்களாக இருக்கிறார்கள்.தனித்தனியே அவர்களை நல்லவர்களாக வைத்திருக்கவும் முடியும். 'மக்கள்','ஜனங்கள்' என்ற மைதான வார்த்தைக்குள் மந்தையாய் அடைக்கும்போதே தனித்தன்மையை இழக்கிறார்கள்

-நா.பார்த்தசாரதி

நா.விச்வநாதன்

யாத்திரி

அழைத்த மறுநொடியே 
வந்து பேச காத்திருப்பவர்களைத் தவிர்த்துவிட்டு,
தவிர்க்கப்படும் இடங்களின் கதவைத்
தட்டிக்கொண்டு இருப்பதுவே
காலங்காலமாய் நாம் கொண்ட சாபம்

-யாத்திரி

வண்ணதாசன்

அங்கீகரிப்பையும் நிராகரிப்பையும் பொருட்படுத்தினால், அந்தந்த இடத்திலேயே நின்றிருப்பேனே தவிர, இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.

-வண்ணதாசன்

வண்ணதாசன்

ஒரு பூ எல்லாத் திசைகளிலும் தன் இதழ்களை மலர்த்துகிறது..!

-வண்ணதாசன்

ராம் பெரியசாமி

"நீங்கள் ஒன்றை கொடுக்க விரும்பினால் 
அதைப்பெறுபவரை விட
நீங்கள் மகிழ்ச்சியானவராக
இருத்தல் வேண்டும்.

     "ராம் பெரியசாமி"