உன்னைவிட்டு பிரிந்த ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமா கடக்கிறது.
_வெற்றி.
30/11/2018
26/11/2018
அறிஞர் அண்ணா
*"தமிழர்கள் ஏன் இந்துக்கள் இல்லை"*
-------------------------------------------
*- அறிஞர் அண்ணா -*
-------------------------------------------
ஆப்ரிக்கா நாட்டிலே ஒரு விதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் கழுத்திலே மண்டை ஓடுகளை மணி ஆரமாகப் போட்டுகொண்டு இருப்பார்கள். மாடு கன்றுகளைக் கண்டால் மண்டியிட்டு தொழுவார்கள். கூடப் பிறந்தவர்களைக் கொண்டு சாமிக்கு படைப்பார்கள். கூத்தாடுவார்கள், குடிப்பார்கள் என்று கூறிவிட்டு அந்த இனத்தைச் சேர்ந்தவர்தாம் நீங்கள் என்று நம்மிடமாகட்டும், உங்களிடமாகட்டும் ஓர் ஆப்ரிக்க வாசியோ அல்லது இங்குள்ள வேறு எவரோ சொன்னால், சொல்பவரின் பற்கள் கீழே உதிர்ந்து விழுமா விழாதா?
நாலுதலைச் சாமிகள், மூன்றுகண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமிகள், ஆறுதலைச் சாமி, யானை முகச்சாமி, ஆளிவாய்ச் சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், தலைமீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷிபத்தினிகளிடம் ரஸமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவனைகளிலே உள்ளனவே ! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவர்களை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழ வேண்டுமே. இந்த சேதியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களை விடக் கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கன்றாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு எப்படி மனம் துணியும்? ஆகவே தான், நாம் இந்து அல்ல என்று கூறுகிறோம்.
நமக்கு நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! ஊன் வேண்டாத சாமி! ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல் அலங்காராதிகள், அப்பம், பாயாசம், அக்காரவடிசில் கேட்காத சாமி! அங்கே, இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை, உண்டியல் எனக் கூறி, அக்கிரகாரத்தை கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும். நம்மிடமிருந்து “தியாகத்தை” பெறட்டும். அருளைத் தரட்டும். நம்மிடமிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்கு தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிபடுத்தவே நாம் நம்மை இந்து அல்ல என்று கூறுகிறோம்.
நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாலு ஜாதியிலே நாம் கீழ்சாதி என்று கொடுமை இன்றி “நாமார்க்குங் குடியல்லோம்” என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தினால் தான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிகொள்கிறோம்.
நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது. செறியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூடமதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படி தான் மனம் இடந்தரும்? எப்படி தான் துணியும்?
இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கறை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசிப் பார்த்த பிறகு யாருக்கு தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதை விட்டு, மான வழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீல்வாரா? தாம் திராவிடர் எனத் தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமை ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத் திராவிடர் என்று ஓர் உணர்ச்சி வீறிட்டு எழபெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!
23/11/2018
சல்மா
*கோணம்*
*-சல்மா.*
💥நான்
தலைகீழாகத் தலைவாரிக்
கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை
தலைகீழாக புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வௌவால்....
லதா
பழகிய பின் எத்தனை பேசினாலும் அறிமுக நாட்களில் தயங்கித் தயங்கிப் பேசிய அழகு அதில் இருப்பதே இல்லை .
-லதா
22/11/2018
படித்தது
இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் உள்ள
வேறுபாடு ஏளனத்திற்கும் ஏக்கத்திற்கும்
உள்ள
வேறுபாடு தான்.
சு.வெ
வெல்ல நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும் தான் போரை விரும்புகிறார்கள்.
வாழ நினைப்பவர்கள்
வேறு வழியின்றி
அந்தப் போரை எதிர்கொள்கின்றனர்
-சு.வெங்கடேசன்
யுகபாரதி
பிரியத்தை விட
பிணக்குற்று பிரிதல்
கொடுமை
சந்திக்க நேர்கையில்
அழக்கூட தோணாமல்
அவரவர் குழந்தைகளை
பொய்யாய்க் கொஞ்சிட
-யுகபாரதி
18/11/2018
யாத்திரி
பாடல் கேட்டுக்கொண்டு, படம் பார்த்துக்கொண்டு, தூங்கிக்கொண்டு, தூரங்களை கடக்கிறார்கள்... பயணம் என்பது வாகனத்திற்கு வெளியே உள்ளது.
-யாத்திரி
17/11/2018
அறிவுமதி
போகிற இடத்தில்
என்னைவிட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்துவிடுவானோ
என்கிற பயம்
நல்லவேளை
நட்பிற்கு இல்லை
-அறிவுமதி
படித்தது
நாம் பொய்களோடு வாழ்க்கைப்பட்டு,.அவற்றோடு வாழ கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறோம்.அதனால்தான் நாம் உண்மைகளை கேள்விப்படும்போது திடுக்கிடுகிறோம்
-P
வே.நி.சூர்யா
புரிந்து விடு என ஒரு கவிதையை மிரட்ட முடியாது. ஒரு கவிதைக்கு புரியவும் புரியாமலிருக்கவும் முழு உரிமை இருக்கிறது. கிட்டதட்ட அது நம்மை போலத்தான்.
-வே.நி.சூர்யா
15/11/2018
முகுந்த் நாகராஜன்
இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்.
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா.
வீடு இங்கேதான் இருக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு காரணமா?
- முகுந்த் நாகராஜன்
14/11/2018
இளம்பிறை
“பச்சை விறகுகளை
கழுத்து நடுங்க கட்டிச்சுமந்த
வயிற்றுப் பிள்ளைக்காரி
வீடு வந்து சேர்ந்ததைப் போல்
பதற்றமற்ற இந் நிலைக்கு
இங்கு வந்து சேர்வதற்குள்
நீங்கள்
உருவாக்கிப் பேசிக்கொண்டிருந்த
எத்தனை என் கதைகளை
கடக்கும்படி ஆயிற்று நான்.”
- இளம்பிறை.
பழமலய்
தனிப்பட்டவர்களாகத் தங்களை அறிபவர்க்கே
தனிப்பட்ட துயரங்கள்.
கூட்டாகத் தங்களை அறிபவர்க்குக்
கூட்டாகத்தான் துயரங்கள்.
அறிவதில் இருக்கிறதா?
இருப்பதை அறிவதில்.!
-பழமலய்
தேவதேவன்
நீண்ட நேரம் மேஜை வாசத்தை விட்டு வெளியே வந்தேன்
பூமி பறந்துவிடாதிருக்க
வைத்த பாரங்கள் போல
மரமும் தோப்பும் மலைகளும் புற்களும்
மனிதர்களின் குடியிருப்பும் அவ்வாறே காற்றில் துடிக்கும் மேஜை போல
ஒரு வேதனை
அன்று உணர்ந்தேன்
மனதை அழுத்திக்கொண்டிருக்கும்
பளு என்னவென்று
-தேவதேவன்
கோபி
நேர்மை
*******
உச்சரிப்பதைப் போல இலகுவாய் இல்லை
வாழ்க்கையில் கைக்கொள்வதும்
நித்தம் கடைப்பிடிப்பதும்.
பல நேரங்களில்
முகமாய் இல்லாமல்
முகமூடியாய் மாறி விடுகிறது.
ஏதோ ஒரு நிலையில்
எல்லா நாளும்
என்னிலிருந்து நழுவி நகர்கிறது.
மீட்டெடுத்து முகமாக்க
எத்தனிக்கும் போதெல்லாம்
பிழைக்கத் தெரியாதவன் என்ற வசையே மிஞ்சுகிறது.
ஆயினும் –
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
முகமூடியை முகமாக்குவதற்கான யுத்தம்!
- மு. கோபி சரபோஜி
07/11/2018
போகன்
ஒரு ஹங்கேரியப் பழமொழி
நீங்கள் தேவையில்லாத ஆணிகளாகப் பிடுங்கிக் கொண்டிருந்தால் தேவையான ஆணி வரும்போது உங்கள் சுத்தியல் டொக்காகிவிடும்.
-போகன்
கல்யாண்ஜி
நான் பழுத்திருக்கும்போது வராமல்
உளுத்துப் போனபின்
புழு கொத்த வரும் மனம் கொத்தி நீ!”
-கல்யாண்ஜி
முருகேசபாண்டியன்
தான் எவ்வளவு வேகமாக படிக்கப்பட வேண்டும் என ஒரு புத்தகம்தான்
தீர்மானிக்கிறது
-முருகேசபாண்டியன்
05/11/2018
ஓஷோ
நம்பிக்கைதான் சந்தேகத்தை கொண்டு வருகிறது.எந்த நம்பிக்கையும் இல்லையென்றால் ,எந்த ஐயமும் இருப்பதில்லை
-ஓஷோ
ராஜன்
ஒரு அழகான பெண்ணை சந்தித்ததிலிருந்து அவள் ஒரு பேய் என்று கண்டுணரும் தருணம் வரையிலான சுவாரசிய இடைவெளியே காதல்!
-ராஜன்
காரைக்குடி சாதிக்
நடுநிசியில்
அயர்ந்து உறங்கும் பயணியைத்
தட்டி எழுப்பி
காபி குடிக்க அழைக்கிறான்
இரவு வியாபாரி.
தூக்கக்கலக்கத்தில் இறங்கி
சிறுநீரை ஐந்து ரூபாய்க்குக்
கழித்து ஏதும் வாங்காமல்
பேருந்து மாறி உறங்கி
இறுதி நிறுத்தத்தில்
உடைமைகளைத் தேடி
டிக்கெட் இல்லாப் பயணத்திற்கு
அபராதம் கட்டியவனை
கேலி பேசிச் சிரிக்கிறது
இழந்த பேருந்தின் டிக்கெட்.
சரியான நேரத்தில்
சரியான பேருந்தில்
சரியான சில்லறை கொடுத்தும்
ஊர் சேராத பயணங்கள்
பேருந்துநிலையத்தில்
எப்போதும் அலைகின்றன.
எத்தனையோ பேருந்து
வந்து போக
அவனுக்கான பேருந்து
இன்னும் வரவில்லை.
- காரைக்குடி சாதிக்
கவிஜி
பெரிய வீட்டின் மிச்சம்
பெரிய வீட்டுப் பின் கதவின்
பூட்டுகளின் சாவி என்றோ
தொலைந்துவிட்டன
நீர் வற்றிய பின்கட்டுக்
கிணற்றின் சுற்றுச்சுவர்கூட
இடிந்துவிட்டது
வீட்டை நோக்கி வரும் சாலை
கூனிக்குறுகி கால்
பாதையாகிப்போனது
முகவரியே பாழடைந்த
பங்களா என்றானது
பின் ஒரு நாளில்
பெரிய வீட்டின் மிச்சம் என்பது
எப்போதாவது கேட்கும்
விசும்பல் சத்தம் மட்டுமே!
- கவிஜி
காசாவயல் கண்ணன்
சாயல்
ஏறிய நெற்றியும் நீண்ட மூக்கும்
அச்சுஅசலா தாத்தாதான்
சுருள்சுருளாய் முடி `அடியாத்தி
அவுக அம்மாச்சியை உரிச்சுவெச்சிருக்கா...
கண்ணு அப்படியே அத்தையோடது’
தொட்டிலில் தூங்கும்
குழந்தையின் சாயலை
ஆளாளுக்கு அளந்துவிட்டனா்.
எந்தக் கதைக்கும் பொருந்தாத
ஏதோ ஒரு கதை கேட்டு
இதழ் குவித்துச் சிரித்துக்கொள்கிறது
தூக்கத்தில் குழந்தை.
- காசாவயல் கண்ணன்.
பெருமாள் முருகன்
அவனுக்கான பள்ளியை
எப்படிச் சிருஷ்டிப்பதென
யோசித்துக்கொண்டிருந்த நாளில்
வீட்டிற்குள் அவனோர்
அற்புத நகரம் உருவாக்கியிருந்ததைக் கண்டேன்
கண் விரியப் பார்த்த என்னை
அந்நகரத்துக்குள் அழைத்துச் சென்றான்
கூரிய கட்டிடங்கள்
மிதக்கும் சாலைகள்
விளையாட்டுத் திடல்கள்
எல்லாம் சுற்றி முடித்த நான்
‘எங்கே உன் பள்ளிக்கூடம்?’ என்றேன்
வினோதமாக என்னைப் பார்த்த அவன்
முகம் சுருங்க சொன்னான்
‘இது பள்ளியில்லா நகரம்’
-பெருமாள்முருகன்
_ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி.
மகிழ்ச்சி என்பது மகிழ்ச்சியில் இல்லை.
மாறாக அதை அடையும் முயற்சியில் இருக்கிறது.
_ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி.
பா.தங்கம்
புகைப்படம்
ஆண்டுகளுக்கு முன்
எடுக்கப்பட்ட
குழுப் புகைப்படத்தின்
கல்லூரி
நினைவுகளை
மெல்ல மெல்ல
அசைபோட்டுப் பார்க்கிறேன்.
பெண்களுக்கு
முன் வரிசை தந்து...
உயரமானவர்கள்
தரையில் அமர்ந்தும்...
தாமதமாக வந்தவர்களை
ஓரத்தில் நிறுத்தியும்...
தனக்கு இடவலமாக
நண்பர்களையும்...
நெருக்கமான
பெண் தோழிக்கு பின்புறமாகவும்
நின்று எடுத்துக் கொண்ட
புகைப்படம் அது.
புகைப்படம்
உருவங்களை மட்டுமல்ல...
காலத்தையும் பதிவு செய்துவைத்திருக்கிறது.
-பா.தங்கம்.