05/11/2018

பெருமாள் முருகன்

அவனுக்கான பள்ளியை
எப்படிச் சிருஷ்டிப்பதென
யோசித்துக்கொண்டிருந்த நாளில்
வீட்டிற்குள் அவனோர்
அற்புத நகரம் உருவாக்கியிருந்ததைக் கண்டேன்
கண் விரியப் பார்த்த என்னை
அந்நகரத்துக்குள் அழைத்துச் சென்றான்
கூரிய கட்டிடங்கள்
மிதக்கும் சாலைகள்
விளையாட்டுத் திடல்கள்
எல்லாம் சுற்றி முடித்த நான்
‘எங்கே உன் பள்ளிக்கூடம்?’ என்றேன்
வினோதமாக என்னைப் பார்த்த அவன்
முகம் சுருங்க சொன்னான்
‘இது பள்ளியில்லா நகரம்’

-பெருமாள்முருகன்