அவளின்
நினைவுகள்
போதை
எனக்கு...
_வெற்றி
28/02/2018
25/02/2018
24/02/2018
பாரதி
தீ எரிக
அதனிடத்தே தசை பொழிகிறோம்
தீ எரிக !
அதனிடத்தே செந்நீர் பொழிகிறோம்
தீ எரிக !
அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ
சினத்தீ, பகமைத்தீ, கொடுமைத்தீ
இவையனைத்தும் தொழுகின்றோம்
தீயே நின்னைப்போல் எமதுள்ளம் சுடர்விடுக !
தீயே நின்னைப்போல் எமதறிவு கனலுக !
-பாரதி
23/02/2018
பிருந்தா
எங்கிருந்து தொடங்குவது
கிண்ணத்தில் அமிர்தம்
எந்தப் பக்கம் அருந்தினாலென்ன
எல்லாமும் அதே ருஸி.
உன்னை அருந்துகிறேன்.
உயரங்களை விட
உயரமாகிறோம்
ஆழங்களை விட
ஆழமாகிறோம்
காதலில் விழுந்து.
நீயற்று
உனது காரைக் கடக்கும்போதும்
உணருகிற செல்லத் தவிப்பு –
ஒருபோதும்
உனது பொருள்கள்
அஃறிணை யல்ல.
கொஞ்சம் மழை
கொஞ்சம் கடல்
கொஞ்சம் வானம்
கொஞ்சம் பூக்கள்
கொஞ்சம் பறவைகள்
சிறிய வானவில்
நிறைய்ய்ய்ய நீ-
வாழ்வின் முழுமைக்கு.
_பிருந்தா..
பிருந்தா
ஒரு அலைபேசி எண்ணைத் தொலைப்பது
ஒரு மனிதரைத் தொலைத்ததாகிறது –
என்னைத் தொலைக்கிறாய்.
_பிருந்தா.
*
பிருந்தா
யாருடைய கிரீடத்தில்
முட்கள் இல்லை –
மனமுவந்து ஏற்கிறேன்
பரிசுகளைப் போலவே
தண்டனைகளையும்
மகிழ்வைப் போலவே
துக்கத்தையும்
உணவைப் போலவே
கழிவையும்
பாராட்டைப் போலவே
பரிகசிப்பை
வெறும் சிலைகளால்
ஆனதல்ல இவ்வுலகம்,
அது மலைகள் நிரம்பியது.
_பிருந்தா.
பிருந்தா
எந்தச் சாவு வீட்டிலும்
பீறிட்டுக் கிளம்பி விடுகிறது
பொறுக்க முடியாமல் அழுகை
என் அப்பா இறந்த துக்கம் தாளாது
-பிருந்தா
லா ச ரா
வாழ்க்கையில் முதன்முதலாய்ப் பார்த்த உடனேயே சிலபேர் மேல் இனம் தெரியாத பாசம் ஏற்பட்டுவிடுகிறது. வெறுப்பும் அப்படித் தான்..
-லா.ச.ரா
22/02/2018
ஜெயகாந்தன்
தனக்காக வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவனோ,ஒருத்தியோ இன்னொருவருக்காக வாழறதின் ஆரம்பமே திருமணம்
#ஜெயகாந்தன்
மித்ரா
இத்தனை அன்புக்கு தான் தகுதியானவனா என குற்றவுணர்வு கொள்ளும்படி நேசிக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்!
-மித்ரா
21/02/2018
யுகபாரதி
ஒரு தீக்குச்சி போல
தீர்ந்துவிடுகிறது
உன்னிடம் பேசுவதற்காக
நான் சேமித்த சொற்கள்
போன பிறகும்
மணம் வீசிக்கொண்டிருக்கும்
ஊதுவத்தியைப் போன்றதுன்
வார்த்தைகள்
-யுகபாரதி
அனுபவம்
பேருந்து பயணங்களில் நம் இருக்கையின் அருகில் அமருபவர்களின் நேற்று இரவு குடித்த மது வாடையை சகித்துக்கொள்ளும் நாசியே நமது உடலின் ஆகச்சிறந்த உறுப்பு...
#அனுபவம்...
20/02/2018
நேசமித்திரன்
கொடுக்கப்படும் அதே அழுத்தத்துடன் உணரப்படும் முத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
_நேசமித்திரன்.
17/02/2018
தபூ சங்கர்
My fav lines தபூசங்கர்
கும்பலில் செல்லாதே, யார் யாரோ உன் நிழலை மிதிக்கிறார்கள்
-தபூசங்கர்
செல்போனில் முத்தம் கொடுத்தால், முத்தத்தை எடுத்துக் கொண்டு., சத்தத்தை மட்டும் தருகிறது
#தபூசங்கர்
உனக்காக எதை வேண்டுமானாலும் தருவேன் என் உயிரைத் தவிர,
அதை உன்னோடு வாழ்வதற்காக வைத்திருக்கிறேன்
-தபூசங்கர்
தும்மல் வரும்போது உடலின் சில பகுதிகள்
நின்றுவிடும்,
நீ வரும்போது தும்மலே நின்றுவிடும்
#தபூசங்கர்
நீ யாருக்கோ செய்த மவுன அஞ்சலியை
பார்த்ததும் எனக்கும் செத்து விட தோன்றியது
-தபூசங்கர்
ராஜா சந்திரசேகர்
முதுகில் எதுவும் காயங்கள் இல்லை என்பதுதான் நெஞ்சில் வாங்கிய காயங்களுக்கு மருந்து
-ராஜா சந்திரசேகர்
15/02/2018
13/02/2018
காதல்
#காதல்...
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
–குறுந்தொகை 40, செம்புலப்பெயனீரார்
பொருள்:
காதலன் கூறுகிறான்: “என்னுடைய தாயும் நின்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவினர்? என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தே பெய்த மழை நீர், அம்மண்ணோடு கலந்து அத்தன்மையை அடைவது போல நமது உள்ளங்கள் (தாமாகவே) ஒன்றுபட்டன.
07/02/2018
மனுஷ்யபுத்திரன்
மருந்துகளும் ஷாம்புகளும் வந்துவிட்டன.
ஒரு முறை கூட
கரத்தால் பேன் பார்க்கப்பட்ட
ஆன்மிக அனுபவம் கிட்டாத
ஒரு தலைமுறையே வந்துவிட்டது
-மனுஷ்யபுத்திரன்
பனித்துளி
பெருஞ்சோகமில்லைதான்...
ஆனாலும்...
ஒரு புன்னகைக்குக் கூட
வழியற்றுப்போவது
எத்தனை பெருஞ்சோகம்?
- பனித்துளி
யுகபாரதி
ஒரு நல்ல தேநீரென்பது
உண்மையில் எங்கிருக்கிறது?
கொடுக்கப்படும் கைகளிலா
குடிக்கப்படும் உதடுகளிலா
-யுகபாரதி
முத்துவேல்.ச
நான் சாகிறேன்
என்பதுகூட அல்ல
என் கவலை
எனக்காக உழைத்திட்ட
இந்த என் உடலை
அப்படியே விட்டுவிட்டு போகிறேனே
-ச.முத்துவேல்
நாஞ்சில் நாடன்
எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல;வேள்வி அல்ல;பிரசவ வேதனையல்ல; ஆத்மசோதனையோ சத்தியசோதனையோ அல்ல;பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல;வாழ்க்கையைத் தேடும் முயற்சி ; என் சுயத்தைத் தேடும் முயற்சி.!
-நாஞ்சில் நாடன்
06/02/2018
எஸ் ரா
பொய்கள் எளிதாகப் பழகிவிடுகின்றன.
உண்மையைச் சொல்வதற்கு தான் நிறைய நடிக்க வேண்டியிருக்கிறது
-எஸ்.ரா
04/02/2018
வண்ணதாசன்
நீ வருவதற்காகக்
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்துகொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்.
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக் கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.
-வண்ணதாசன்
யுகபாரதி
இவ்வளவு கறாராகப்
பேரம் பேசிய ஒருவனுக்குக்
கொசுறு வழங்கக்கூடிய பூக்காரம்மா
அந்த நேரத்தில் நுகர வைக்கிறாள்
மனித வாசனையை
-யுகபாரதி
கவிதாபாரதி
“பெண் குழந்தைகள்
அலங்காரத்தையும்,
ஆண் குழந்தைகள்
அதிகாரத்தையும்
கற்றுக்கொள்கிறார்கள்...
யாரும் சொல்லித்தராமலே..!”
- கவிதா பாரதி.
வைரமுத்து
நீங்கள் எதிர்பார்க்கும் பாசம் இங்கே இருக்கும்.அதை காட்டுவதற்குதான் நேரம் இருக்காது
-வைரமுத்து
புகழ்
இறந்துபோன எந்த மிருகத்தைப்பார்த்தும்
மனிதன் பயப்படுவதில்லை...
புலியோ சிங்கமோ ஆவியாக வந்தால் இன்னும் கொடுமையான விலங்காகத்தானே இருக்கும்.
-புகழ்.