*பரிசோதனை காலத் தனிமையும் வாசிப்பின் தோழமையும்...*
பரிசோதனைகளின் மீது ஆர்வமும் அங்கிகாரத்தின் மீது ஏக்கமும் கொண்ட ஆசிரியர்களிடம் எப்போதும் இரண்டு நூல்களை வாசிக்கச்சொல்வேன்.ஒன்று டோட்டோ சான்.
மற்றொன்று
பகல் கனவு.
வகுப்பறை பரிசோதனை களமாக மாற வேண்டும் என்று நாம் கூறுவது புதுமை மீது கொண்ட ஆர்வத்தால் அல்ல.
சலிப்பற்ற வகுப்பறையில் தான் பாடம் கனமற்றுப் போகும் ஒரு குழந்தையும் விடுபட்டுப் போகாது என்பதாலேயே.
கல்விப் பரிசோதனை என்பது இப்போது புதிய விஞ்ஞானக் கருவிகளை வகுப்பறைக்கு கொண்டு வருவது என்றாகி விட்டது.
வரவேற்போம்.
ஆனால் ஆசிரியரின் கற்பனையும் மாணவரின் ஈடுபாடும் கைகோர்க்கும் போது உண்டாகும் அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கருவிகளால் தரவியலாது.
கருவிகளை விட ஆசிரியர் முக்கியமானவர்.
ஆசிரியரின் கற்பனை முக்கியமானது.
அதனால் தான் பகல்கனவில் வரும் மீசை கிஜூபாய் ஆசிரியரும்
டோட்டோ சானில் வரும் ஓட்டைப்பல் கோபயாட்சியும் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள்.
நம்மை புதுப்பிக்கும் சக்தியோடு வாழ்கிறார்கள்....
_பேராசிரியர்.ச.மாடசாமி.
(வெற்றி).