20/06/2018

மனுஷ்ய புத்திரன்

யாரோ ஒருவருக்காக
...................................
நான் உயிராக நேசிக்கும் உன்னை
இன்னொருவரும் உயிராக நேசிக்கலாம்

நீ உயிராக நேசிக்கும் என்னை
இன்னொருவரும் உயிராக நேசிக்கலாம்

நமது இந்தக் காதலுக்குள்
எப்போதும் நிரம்பியிருப்பது
நாம் அல்ல
அந்த இன்னொருவர்

நாம் அத்தனை இறுக்கமாக
ஒருவருக்கொருவர் பற்றிக் கொள்வது
நமக்காக அல்ல
யாரோ ஒருவருக்காக

மனுஷ்ய புத்திரன்