விலகி பாருங்கள் பாரமாக இருந்திருந்தால் தேடி வரமாட்டார்கள்..
-படித்தது
அறிவுரை சொன்னால் கேட்டு கொள்ளாத ஈகோ, அனுபவம் வந்து கன்னத்தில் பளாரென அறையும்போது அடங்கிவிடுகிறது.
-செளமி
இனி ஒன்றுமில்லை என அழுது தீர்க்கும் பொழுது
கடைசி நொடியில் பிறக்கும் துணிவுதான் மீண்டும் வாழ்வை
வாழச் சொல்கிறது.!
-படித்தது
தோல்வியும் வெற்றியும் மனநிலைகள்தான்.ஆனால் இதை உணர்வதை நிர்வகிப்பதற்கு இன்னொரு மனநிலை வேண்டும்
-லா.ச.ரா
ஒரு மௌனத்தின் இரு கரைகளில் நிற்கிறோம்; பழைய உரையாடல்களில் கல்லெறிந்து பார்த்துக்கொண்டே!!
-படித்தது
ஒரு தீக்குச்சி போல
தீர்ந்துவிடுகிறது
உன்னிடம் பேசுவதற்காக
நான் சேமித்த சொற்கள்
போன பிறகும்
மணம் வீசிக்கொண்டிருக்கும்
ஊதுவத்தியைப் போன்றதுன்
வார்த்தைகள்
-யுகபாரதி
ஒரு தீக்குச்சி போல
தீர்ந்துவிடுகிறது
உன்னிடம் பேசுவதற்காக
நான் சேமித்த சொற்கள்
போன பிறகும்
மணம் வீசிக்கொண்டிருக்கும்
ஊதுவத்தியைப் போன்றதுன்
வார்த்தைகள்
-யுகபாரதி
அந்த மாபெரும் வெற்றிடத்தில்
முன்னும் இல்லை, பின்னும் இல்லை
பறவையின் பாதை
கிழக்கையும் மேற்கையும்
அழித்துவிடுகிறது.’
- ஜென்
அந்த மாபெரும் வெற்றிடத்தில்
முன்னும் இல்லை, பின்னும் இல்லை
பறவையின் பாதை
கிழக்கையும் மேற்கையும்
அழித்துவிடுகிறது.’
- ஜென்
நடு சாலையில்
அடிபட்டுக் கிடக்கிறது
நாயொன்று.
இரயில் பாதையில்
மரித்துக் கிடக்கிறது
யானையொன்று.
மின்சாரக் கம்பியில்
தொங்கிக் கிடக்கிறது
காகம் ஒன்று.
செல்போன் கோபுரங்களில்
தொலைந்து போகிறது
குருவிக் கூட்டமொன்று.
உங்கள் அறிவியல்
கண்டு பிடிப்புகளில்
ஒவ்வொரு நொடியும்
உருக்குலைந்து போகிறது
ஏதோ ஒரு உயிரினமொன்று.
-படித்தது
அந்த மாபெரும் வெற்றிடத்தில்
முன்னும் இல்லை, பின்னும் இல்லை
பறவையின் பாதை
கிழக்கையும் மேற்கையும்
அழித்துவிடுகிறது.’
- ஜென்
இரவில் வந்தது மழை.
யாரும் அதன் அழைப்பை
ஏற்கவில்லை.
சன்னல்களும் கதவுகளும் சாத்திக்கிடந்தன.
துக்கம் அதிகமாகி மாரடித்துப் புலம்பியது அது.
இருட்டின் ஒரு துளியைக்கூட
கரைக்கமுடியவில்லை அதனால்.
இரவெல்லாம் சபித்தபடியும்
முணுமுணுத்தபடியும் இருந்தது.
காலையில் வாசலில்
தேங்கியிருந்த மழையின் கண்ணீரில் நின்றபோது
முறுக்கிகொண்ட சிறுமிபோல்
கால்களைக் கிள்ளியது
அதன் குளிர்ந்த கோபம்.
-அழகிய பெரியவன்
எத்தனை நாள்
எவ்வளவு நேரம்
எப்படியெல்லாம்
ஆனாலும்
பார்க்க வருவாய்
நம்
முதல் சந்திப்பாகவே
-திருமேனி
உங்கள் வாழ்க்கையில்
ஒரே ஒரு நாளை
ஒரே ஒருநாளை உங்களால்
ஒருபோதும் மறக்க முடியாது
உங்கள் கண்ணெதிரே
நீங்கள் கொல்லப்பட்ட நாள்
- பெருமாள் முருகன்
"வசீகரமான ஏதாவது ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அன்புகாட்டவும் அன்புகாட்டப்படவும்" -
வைக்கம் முகம்மது பஷீர்