15/01/2020

லா.ச.ரா

ஒருவரை ஒருவர் உபயோகிப்பதற்கும், உபயோகப்படுவதற்கும் உண்டாக்கிய பொய்கள்தான் - சொந்தங்கள்

#லா.ச.ரா

சார்லி சாப்ளின்

கண்ணாடிதான் எனது சிறந்த நண்பன்
ஏனெனில் நான் அழும்போது அது ஒருபோதும் சிரித்ததில்லை.

-சார்லி சாப்ளின்

ராஜா சந்திரசேகர்

தொடர்பு எல்லைக்குள்
எல்லோரும் இருந்தார்கள்
தொடர்பற்று

-ராஜா சந்திரசேகர்

யாத்திரி

ஒருவரை விரும்பத் துவங்குதல் என்பது
காலம் முழுக்க அவரை
மன்னித்துக் கொண்டே இருப்பதற்குத் துணிதல்!

-யாத்திரி

மகுடேசுவரன்

மிதிவண்டியில்
பணிக்குச் செல்பவர் நெற்றியில்
தவறாமல் காண்கிறேன்
திருநீற்றுச் சிறுகீறு

-மகுடேசுவரன்

ஜே.கிருஷ்ணமூர்த்தி

நாம் இயந்திரத்தனமாகத் தேர்வுகளில் வெற்றி பெறுகிறோம். பணிக்குச் செல்கிறோம்.சமூகத்தில் வெற்றி பெறுவதற்கான உக்திகளைக் கற்றுக்கொள்கிறோம்.

ஆனால், வாழ்க்கைக்கு அவசியமான அழகு,நேசம்,அமைதி ஆகிய அம்சங்களின் மீது நாம் கவனம் செலுத்தாவிட்டால், கடினமானதும் சிதறுண்டதாகவும் தோன்றக்கூடிய உலகத்தில் வாழ வேண்டியிருக்கும்

-ஜே.கிருஷ்ணமூர்த்தி

ப்ராங்களின்குமார்

பேனா எடுக்கும் 
மகள்கள் 
தகப்பனின்
உள்ளங்கை
முழுதும்
எழுதுகிறார்கள்
அடுத்த 
பக்கமென
வலது கையையும்
விரிக்கிறாரார்கள்!

#ப்ராங்ளின் குமார்

யாத்திரி

யாரையும்
காயம் செய்யாது வாழவேண்டும்
பிரியமானவர்கள் மட்டும்
விதிவிலக்கு!

-யாத்திரி