31/03/2018

யாத்திரி

அறிந்திராத
புதிய எண்ணின் அழைப்பு
அலைபேசியின் அந்தப்புறம்
மிகப்பழகிய மௌனம்

நல்லாருக்கியா? என்கிறேன்
'ம்ம்ம்' என்று அழைப்பினைத் துண்டிக்கிறாள்.

அவளுக்கு ஏதோ சொல்ல வேண்டியிருந்தது,
எனக்கு கேட்க வேண்டியிருந்தது,
காலத்திற்கு தவிர்க்கவேண்டி.

-யாத்திரி

நா.பார்த்தசாரதி

கடவுள் எவ்வளவு நல்லவர்? எவ்வளவு தொலைவிற்கு அப்பால் எவர் இருந்தாலும் மற்றோர் இடத்தில் இருந்துகொண்டு மற்றொருவர் அவரைப் பற்றி நினைப்பதற்கு மனம் என்ற ஒரு பொருளைக் கொடுத்திருக்கிறாரே..

-நா.பார்த்தசாரதி
பிறந்தமண்

நா.பார்த்தசாரதி

குடிக்கறதைக்கொஞ்சம் குறைச்சுக்கக்கூடாதா? அதான் குடிக்கக்குடிக்க குறையுதே?
-நா. பா"

அழகிரிசாமி

அழகிரி சாமி குறித்து ச.தமிழ்ச்செல்வன்

வர்க்கப் போராட்டத்தை அழகியல் குறையாமல் கலையுணர்ச்சி ததும்பத் தமிழில் எழுதிய முதல் படைப்பாளியும் அழகிரிசாமிதான். அவரது `வெறும் நாய்’  என்கிற கதையே அது. ஒரு பணக்கார டாக்டர் வீட்டில் ஒரு நல்ல ஜாதி நாயை வளர்த்தார். அந்த நாய்க்கும் தெருவில் போகும் ஒரு பேரும் இல்லாத நல்ல ஜாதி நாயாகவும் இல்லாத `வெறும் நாய்’க்கும் பகை. அந்த வெறும் நாய் டாக்டர் வீட்டுக் கேட்டுக்கு முன்னால் ரோட்டில் போனாலே இந்தப் பணக்கார நாய் பாய்ந்து பாய்ந்து குரைக்கும். எத்தனை நாள்தான் நம்ம வெறும் நாயும் பொறுமை காக்கும்? ஒருநாள் வசம்மாகப் பணக்கார நாயைக் கடித்துக் குதறி விட்ட்து. டாக்டருக்குக் கோபம் வந்து ஒரு கல்லை எடுத்து எறிந்தார். வெறும் நாயிடம் நடக்குமா? அது தப்பி ஓடி விட்டது.

டாக்டர் வீட்டுக்குப் பின்புறம் கூலித்தொழிலாளி முனியசாமியும், அவன் மனைவியும் வசித்து வந்தார்கள். அவர்களின் குடிசைக்குத்தான் வெறும் நாய் சோத்துக்காகப் போய் நிற்கும். மிஞ்சின அன்றைக்கு நாய்க்குச் சோறு கிடைக்கும். முனியனைக் கூப்பிட்டு டாக்டர் `ஒழுங்கா உன் நாயை அடக்கி வை இல்லேன்னா சுட்டுவிடுவேன்’ என்று மிரட்டிக்கொண்டே இருந்தார். அவன் எவ்வளவோ சமாதானமாகப் பேசியும் டாக்டரின் கோபம் அடங்கவில்லை. இந்தப்பகை முற்றி ஒருநாள் டாக்டரும் வெறும் நாயும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. முனியனைப்போல சமாதானம் பேச அது என்ன மனுசனா, நாயல்லவா? டாக்டரை முழங்காலுக்குக் கீழே கடித்துக் குதறி இழுத்து விட்டது.

அன்று இரவு முனியனின் மனைவி வெறும் நாய்க்கு வயிறாரச் சோறு போடுவாள். மனைவி தூங்கியபிறகு முனியன் எழுந்து போய் நாயை வாஞ்சையுடன் தடவிக்கொடுப்பான்..

``மனுஷனுக்குத்தான் ஜாதிப்புத்தி போகுமென்றால் நாய்க்கும் போய் விடுமா?”

என்ற வரியுடன் கதை முடியும். ஒரு தெளிவான அறிக்கை அது, அல்லவா?

யுகபாரதி

கவிதையில்
எல்லாம்;சொல்லிவிட
முடியாது
உன் அழகை!
எழுதும்போதே
கூடிக்கொண்டிருக்கும்
அழகு
உனக்கே உண்டானது!
-யுகபாரதி

படித்தது

உங்கள் பொய்களின் எண்ணிக்கையைப்பற்றி ஏதும் கவலையில்லை... உங்கள் உண்மைகளையே நான் நம்ப விரும்பாதபோது.

-படித்தது

30/03/2018

எஸ் ரா

குழந்தை என்னிடம் கேட்டது
மீன் உடம்பிற்குள் ஈரமாக இருக்குமா?
இல்லை என்றேன் நான்
அப்படியென்றால் வேறு எப்படியிருக்கும்
சிவப்பாகவும் இளஞ்சிவப்பாகவும்
காலை நேரத்துக் கல்லறையைப்போல
குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றேன்
குழந்தை மறுபடியும் கேட்டது
உனக்கு எப்படித் தெரியும் அது
இறந்து போனாலன்றி
_பிரெய்ன் டர்னர்.
(தேசாந்திரியில் எஸ் ரா)

வெற்றி

குடும்ப விதி எனப்படுவது யாதெனில் இரு மகள்களைப் பெற்ற அப்பாக்கள் மனைவிக்கும் சேர்த்து மூன்று கொலுசுகள் வாங்க வேண்டும்....
_வெற்றி

வெற்றி

குடும்ப விதி என்பது இரு மகள்களைப் பெற்ற அப்பாக்கள் மனைவிக்கும் சேர்த்து மூன்று சோடி கொலுசுகள் வாங்க வேண்டும்....
_வெற்றி

ரூமி

எனது உள்ளம் உன் கையில் இருக்கும் பேனாவைப் போன்றது. என் மகிழ்ச்சியையும் கவலையையும் அதுவே எழுதும்

-ரூமி

இளந்தென்றல் திரவியம்

முத்தம்

சில நேரம்
காமத்தை
தொடங்கி வைக்கிறது!

சில நேரம்
காமத்தை
முடித்து வைக்கிறது!

பல நேரம்
காமத்தை
தடுத்து வைக்கிறது!

இளந்தென்றல் திரவியம்

28/03/2018

மயில்

பொறுமையும் ஒரு நாள் புலியாகும்.
அப்போது பொய்யும் புரட்டும் பலியாகும்.
_தோழர்.மயில்

படித்தது

எறும்புகளின் மீதான வன்முறைக்கு
பெரிதாக என்ன காரணம்
இருந்துவிடப்போகிறது...
அவை எளிது என்பதன்றி.

-படித்தது

27/03/2018

ஸ்டீபன் ஹாக்கிங்

அறிவாளி ஏதேனும் குறைபாட்டுடன் இருப்பான் என்ற கூற்றுக்கு நான் உதாரணமாக இருக்கிறேன்.
மக்களுக்கு நாயகர்கள் தேவைப்படுகிறார்கள்.
முதலில் அவர்கள் ஐன்ஸ்டீனை நாயகனாக்கினார்கள்.
இப்போது என்னை நாயகன் ஆக்குகிறார்கள்.அது எவ்விதத்திலும் நியாயம் இல்லையென்றாலும்.
_ஸ்டீபன் ஹாக்கிங்
_

ராஜ சங்கீதன்

உடல் மனம் ஆகியவற்றின் வதை கொடுக்குகளில் மாட்டிய பின்பு உன்னதமான வாழ்க்கை வாழ குழந்தை தனம் வேண்டும்.
எப்போதும் எதுவாகவும் எதுவோடும் தன்னை நிறுத்திக்கொள்ளாத தெளிதல் கிட்ட வேண்டும்.
_ராஜ சங்கீதன்.

இளங்கோஏழுமலை

காலம் அதன்
வெள்ளை இழைகளை லேசாக
தலையில் இழைத்துவிடும்
இவ்வேளையில் தான்
சற்றே மங்கலாய் சில விசயங்கள்
நினைவுக்கு வருகின்றன....
கல்லூரியின்
சிறப்பு பேச்சாளர்
தம் வாழ்க்கையை மாற்றியதாக குறிப்பிட்டாரே
அது என்ன புத்தகம்...
25 வருடங்களுக்கு முன்
அப்படி ஓடிய படமாயிற்றே
அதைப் பார்க்கவில்லையா
என்று கேட்கப்பட்ட திரைப்படம்...
ஒன்றாயா உண்டு உறங்கி
கூடித்திரிந்த நண்பன்
இப்போது எந்த வலைதளத்திலும்
சிக்காது இருக்கிறானே
எங்கே அவன்....
படித்து ரசித்து நெகிழ்ந்து
சற்றே கிழிந்திருந்தாலும்
பரணில் பத்திரமாய் வைத்த கடிதங்கள்
அப்படியே இருக்கின்றனவா....
மேலும் எப்போதாவது
சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்
கேட்க வேண்டும் உன்னிடமும்
கல்லூரியின் கடைசி நாளன்று
ஏதோ சொல்ல வந்தாயோ?.
_இளங்கோ ஏழுமலை.

கலீல் ஜிப்ரான்

அன்பு என்பது மது நிரப்பப்பட்ட கோப்பை
கண்ணுக்கு தெரிவது திரவம்
மறைந்திருப்பது போதை
-கலீல்ஜிப்ரான்

இளந்தென்றல்

இலையில் சோறை போட்ட வுடன் கொஞ்சம் வெறும் சோத்தை தின்று தன் வெட்கத்தை வெளிப்படுத்துகிறது இந்த பசி!!"

-இளந்தென்றல்

எஸ்.ஜெயகாந்தி

பார்த்தும் பாராமல்
அவ்வளவு எளிதாய்க் கடந்துவிட
இயலாமல்
பதைபதைக்கும் நெஞ்சுக்குள்
இனம்புரியா பாரத்தை ஏற்றி வைக்கிறது
விரைவுச்சாலையில் விழுந்து கிடக்கும்
குழந்தையின் ஒற்றைச்செருப்பு.
_எஸ்.ஜெயகாந்தி.

26/03/2018

லதாமகன்

💥சொல்லக் கூடாத பொழுதொன்றில் தொடங்கினேன்
எனக்குப் பத்துப் பெண்குழந்தைகள் வேண்டும்
முன்னாள் காதலிகள் பெயர்களை வைக்கவென
மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன்.
எனக்கு ஆண்குழந்தைதான் வேண்டும்
அதுவும் ஐந்து என
அவள் சொல்கையில்
மெதுவாய்
முழிக்கிறது ஒரு மிருகம்.

- லதாமகன்

நன்றி:திரு.பாரதி

கலீல் ஜிப்ரான்

உன்னை கவனிக்காது
நான் கடந்த
தருணங்களை
அறிவாயா?

அதில்தான்
உனக்கான காதலும்
இருந்தது

-கலீல்ஜிப்ரான்

25/03/2018

ரூமி

ஒரு மலை தனது அடியாழத்தினுள்
ஒரு பேரொலியைத் தக்க வைத்திருக்கிறது
உனது குரலை
நான் வசப்படுத்தி வைத்திருப்பதும்
அவ்வாறே

-ரூமி

23/03/2018

கவிதை

தமிழ் எழுத்தாளன்

கவிதை என்பதே கற்பனையின் சூழ்ச்சி.

- பாரதி

கவிதை சொற்களில் இல்லை, ஒலிநயத்தில் இல்லை; கருத்திலே மடைதிறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே சுட்டிக்காட்டும் பேருண்மையிலே பொதிந்து கிடக்கிறது.

- ந. பிச்சமூர்த்தி

அறிந்தவற்றில் தொடங்கி அறியாத, அறியவே முடியாத ஒன்றில் முட்டிச் செயலிழப்பவை கவிதைகள்.

- பிரமிள்

மனித உள்ளத்தின் மர்மத்தை அறியும் மார்க்கங்களில் ஒன்று கவிதை.

- க.நா.சு.

எந்த வரிகளின் முன் இதயத்தையும் மூளையையும் ஒருசேர நீ இழக்கவும் பெறவும் செய்கிறாயோ அதுவே உனக்கான கவிதை.

- க.மோகனரங்கன்

கவிதையில் அழகுக்கான முயற்சிகள் (உவமை, உருவகம், படிமம், அலங்காரம்) எதுவும் தேவையில்லை. மனித வாழ்க்கையின் அடிப்படையை எங்கோ ஒரு இடத்தில் தொட்டுவிடுவதில் கவிதை இருப்பதாகத் தோன்றுகிறது.

- யவனிகா ஸ்ரீராம்

மொழி தன் இயல்பான இயக்கத்தின் மூலம் சென்றடைய முடியாத தளங்களுக்கு மொழியை சிறப்பு அழுத்தம் தருவதன் மூலம் கொண்டு செல்ல முயலும் கலையே கவிதை. மொழிக்குள் செயல்படும் இன்னொரு தனி மொழியை கவிதை உருவாக்குகிறது.

- சுந்தர ராமசாமி

நான், கவிதை உட்செவியில் எப்பொழுதும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கையைச் சார்ந்தவன். கவிதை எழுப்பும் பரவச நிலையை வார்த்தைகளிலிருந்து பிரிக்க முடியாதென்றால், கவிதையின் வார்த்தைகள் நமது உப-போத மண்டலத்தில் ரீங்கரிப்பதற்கு ஒரு காரணம் ஓசை.
என் அனுபவத்தில் எந்த உயர் கவிதையிலும் உச்ச கட்டம் என்பதில் ஓர் அபூர்வ எளிமை, ஆழம், தெளிவு இருக்கின்றன.

- நகுலன்

ஆத்மநாம்

இந்த மனிதக்கட்டையை எரிக்க
ஏன் மரக்கட்டையை அடுக்குகிறீர்
அது செய்த பாவம் தான் என்ன?

- கவிஞர் ஆத்மநாம்

விக்கிரமாதித்யன்

கவிஞனை கட்டியவளுக்கு
முதல் பக்கத்தில்
சமர்ப்பணம் தவிர
வேறென்ன கிடைக்கும்
- விக்கிரமாதித்யன்

வண்ணதாசன்

கேட்கிற இசையை விட உணர்கிற இசை கூடுதல் இசைமை உடையது

-வண்ணதாசன்

யாத்திரி

வலுக்கட்டாயமாக பிடித்து நிறுத்தாமல் இருப்பதுதான் அன்பிற்கு நீங்கள் செய்யும் ஒரே உபகாரம்.
அன்பாயிருப்பவர்களுக்கும். இருந்தவர்களுக்குமே!

யாத்திரி

21/03/2018

நடுநிலைமை

நடுநிலைமை என்று ஒன்றே கிடையாது..
நல்லதின் பக்கம் நில்...
அல்லது தீமையின் பக்கம் நில்...நடுநிலைமை  என்று சொல்வதே தன்னையும் ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றுவது.
_ப.பி.

வண்ணதாசன்

உயிரையே அசைத்த கவிதை...👇🏿

பழைய சேலை கேட்டு ஒருத்தி
வாசலுக்கு வெளியே நிற்கிறாள்.
கூடுதல் அனுதாபத்திற்காக
எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டதாக
ஒரு பொய் சொல்கிறாள்.
வாசலுக்கு உட்புறம் இருப்பவர்கள்
இன்னொரு தடவை வந்தால்
தருவதாகச் சொல்கிறார்கள்.
தங்கள் கருணையை மெய்ப்பிக்க
இப்போதுதான் அனாதை விடுதிக்குக்
கொடுத்தோம் என்று
ஒரு பொய் சொல்கிறார்கள்
அந்தப் பக்கம் ஒரு பொய்யும்
இந்தப் பக்கம் ஒரு பொய்யுமாக
அசையாமல் இருக்கிறது  வாசல் கதவு
உண்மையின் துருப்பிடித்த மௌனத்துடன்

-வண்ணதாசன்

16/03/2018

ஜெகன்

சுண்டு விரலின் பாக்கியமே, குழந்தைகள் அதை பற்றிக்கொள்வது தான்

-ஜெகன்

Pranithaselvi

நேர்மையானவனை பெரும்பாலும் விவரம் இல்லாதவனாகவே  இந்த சமூகம்  பார்க்கிறது,,அவன் பெரும்பாலும் ஏழையாகவே இருக்கிறான்.
_Pranithaselvi.

மணி

தொடர முடியாத உரையாடலுக்கும்
இறுகிய மவுனத்திற்கும்
இடையில் நகர்ந்து கொண்டிருக்கிறது
காலம்"!

-மணி

கே.பி

கண்தீண்டி உறைகிறேன்..
கைத்தீண்டி கரைகிறேன்..

15/03/2018

ஸ்டீபன் ஹாக்கிங்

வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!" - ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங்

"எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல; என்ன மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம்."
_ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங்

"மனித மூளையானது ஒரு கணினியைப் போன்றது. ஒரு கணினியின் உபகரணங்கள் பழுதாகி அது இயக்கத்தை நிறுத்திவிட்டால் எப்படி அது எங்கும் செல்வதில்லையோ அப்படித்தான் மனித உயிரும் மூளை தனது கடைசி நிமிட இயக்கத்தை நிறுத்தியவுடன் மனிதன் மரித்துப்போகிறான். அவர் அதன் பின்னர் சொர்க்கத்துக்கும் செல்வதில்லை, நரகத்துக்கும் செல்வதில்லை. இவை எல்லாம் வெறும் கற்பனைக் கதை. இருள் மீது பயம் கொண்ட மக்களுக்காக சொல்லப்பட்ட கதை"

ஸ்டீபன் ஹாக்கிங்

வித்யாஷங்கர்

சிற்றருவி
பேரருவி
ஐந்தருவி
பேர் என்னவானாலும்
அருவி ஆறாகாது
அதனதன் வேகமும்
தன்மையும்
அதனதன் இயல்பு
பேருக்குத்தான் பெயர்

– வித்யாஷங்கர்

சௌவி

இருளத் தொடங்கிவிட்ட நேரத்தில்
மின்னல் மின்னுகிறது

மழை வரும்போலிருக்கே என
கொடியில் காய்ந்து கொண்டிருந்த
துணிகளை எடுக்கிறார் அம்மா

நிறுத்தி வைத்திருக்கும்
இருசக்கர வாகனத்தைப்
போர்த்தி வைக்கிறான் தம்பி

மாட்டைப்பிடித்து
சாலைக்குள் கட்டுகிறார் அப்பா

திண்ணை மேலேறிப் படுக்கச்சொல்லி
நாய்க்கு சாக்கு விரிக்கிறாள்
தங்கை

பட்டியாடுகள் நனைந்துவிடும்
கொட்டிலுக்குள் மூடவேண்டுமென
நேரத்திலேயே புறப்பட்டார்
சித்தப்பா

வீட்டுக்குள் மழையொழுகும் இடங்களில்
முன்கூட்டியே
சட்டிகளை எடுத்து வைத்தாள்
பாட்டி

வீடுகட்ட
மணல் வாங்கிக் குவித்திருந்த
பக்கத்து வீட்டுக்காரர்
தார்ப்பாயை
வாடகைக்கு வாங்கி வந்து
மூடினார்

மழை வரவேயில்லை

ஆனால் எல்லோருக்குள்ளும்
ஒரு மழை
பெய்துவிட்டுப்போயிருந்தது

-சௌவி

பாதசாரி

எண்ணம் தானே கொப்பளிக்கிறதா, இல்லை நான் கல் விட்டெறிகிறேனா என்பதிலேயே தெளிவில்லை என்னத்தைச் சொல்ல"
-பாதசாரி

ஓஷோ

பெண் ஆணின் மீது மனரீதியான கட்டுப்பாட்டை வைத்திருக்கிறாள்

- ஓஷோ

14/03/2018

ராஜா சந்திரசேகர்

உணர்ந்து வருபவர்கள் தொடர்ந்து வருகிறார்கள்.
மற்றவர்கள் உதிர்ந்து போகிறார்கள்

-ராஜா சந்திரசேகர்

ஜெயந்தன்

மக்கள் யாருக்கு வழிவிடுகிறார்கள் என்றால், யார் அவர்களை இடித்து இழுத்து, பின்னே தள்ளி முன்னேறிச் செல்கிறார்களோ அவர்களுக்கு என்று யாரோ சொன்னது மிகவும் சரிதான். உலகம் தன்னை அதட்டத் தெரிந்தவர்களின் ஆணைக்குத் தான் அடிப்பணிகிறது. அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது. நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது.

#ஜெயந்தன்

காரல் மார்க்ஸ்

நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது!
#கார்ல்மார்க்ஸ்

காரல்மார்க்ஸ்

முதலாளித்துவ சமூகத்தில் பணத்திற்கு மதிப்பிருக்கும்.ஆனால் அதை நம்பியிருக்கும் மனிதனுக்கு மதிப்பிருக்காது
-கார்ல் மார்க்ஸ்

யுவன் சந்திரசேகர்

"ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்
முதலில் உள்ளங்கை நிரம்பிய
தானிய மணிகளால் அதைக்
கவர்ந்திழுக்க வேண்டும்.
ஆகாயத்தை விடவும்
கூண்டு பாதுகாப்பானது என்று
நம்பச் செய்ய வேண்டும்.
சுவாதீனம் படிந்த பிறகு,
எதிர்பாராத தருணமொன்றில்
அதன் சிறகுகளைத் தரித்துக்
குப்பையில் வீச வேண்டும்,தூவிகளில் ஒட்டிய
ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.
பிறகு
அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்
உயிர்வாழும் வேட்கையால்
நடந்தேனும் இரைதேட விடாதபடி.
அடுத்ததாக,
அதன் அலகை முறித்து விடுவது நல்லது
தானாய் வந்து
சிக்கும் இரையைப் பிடிப்பதையும்
தடுத்து விடலாம்.
இப்போது சிட்டுக்குருவி
ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது
சிறு வித்தியாசத்துடன்.
கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.
பூர்விக நியாபகம் போல
உயிர் துடிக்கும்
அதன் கண்களில்.
இனி நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்று தான். குருவிமிச்சத்தைத்
தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.
சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்"

- யுவன் சந்திரசேகர்

வைக்கம் முகமது பஷீர்

"வசீகரமான ஏதாவது ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அன்புகாட்டவும் அன்புகாட்டப்படவும்"..

- வைக்கம் முகம்மது பஷீர்

பாலகுமாரன்

வைராக்கியம் என்பது தெளிவான பிடிவாதம், கோபமற்ற உறுதி
#பாலகுமாரன்

பாலகுமாரன்

காதல் என்றால் விட்டுக் கொடுத்தல். சிலசமயம் காதலைக் கூட
#பாலகுமாரன்

ஸ்டீபன் ஹாக்கிங்

வாழ்க்கை என்னவோ கடினமானதுதான்...
ஆனால், வெற்றிக்கான பாதையும் அதில்தான் இருக்கிறது.!

-ஸ்டீபன் ஹாக்கிங்

ராஜா சந்திரசேகர்

உணர்ந்து வருபவர்கள் தொடர்ந்து வருகிறார்கள்.
மற்றவர்கள் உதிர்ந்து போகிறார்கள்

-ராஜா சந்திரசேகர்

ஷானூர்

வெறும் சடங்குகளில் ஊறிப்போன மனசு சத்தியத்தை உணர்வதில்லை.
_ஷானூர்.

13/03/2018

மு.நியாஸ் அகமது

ஒரு கம்யூனிஸ அரசு உச்சத்தில் நெகிழ்ந்து உதிர்ந்து விட வேண்டும். அதாவது, அரசு என்ற இறுக்கமான அமைப்பு இருக்கக் கூடாது என்றார் மார்க்ஸ்.

நெகிழ்வை வலியுறுத்தியவர் மார்க்ஸ். ஆனால், இன்று நம்மால் ஒரு பெண்ணை தோழராக கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு இறுகி போயிருக்கிறோம்.
பதவிகளுக்காகப் பலி வாங்க காத்திருக்கிறோம்.

நெகிழ்வோம்!

_மு.நியாஸ் அகமது.

பிரமிள்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.
- பிரமிள்

12/03/2018

அரசியல்

வெல் அல்லது வெல்பவர்களை
உள்வாங்கு...
_அரசியல் பாலபாடம்...

மு.நியாஸ்அகமது

என்னால் விரிவாக
பேசமுடியும்
சிந்துவெளியை
அழித்தவர்கள் யார்
அவர்களுக்கு நம் மேல்
ஏன் இந்த வன்மம்
என்று எழுதமுடியும்
அங்கு
விருத்திரனுக்கும்
அகிக்கும்
என்ன நேர்ந்தது என்று
விளக்க முடியும்
இப்போது எதுவும் வேண்டாம்
வேண்டுமானால்
சுருங்க மய்யமாக சொல்கிறேன்
இது 4000 ஆண்டு போர்!

- மு. நியாஸ் அகமது.

கடவுள்

கடவுள் மேல் எப்பொழுதும்
எனக்கு ஒரு நம்பிக்கையுண்டு
அவரால் ஒரு போதும்
மக்கள் பிரச்சனைகளை
தீர்க்க முடியாதென்று...

11/03/2018

ஜெயமோகன்

தன்மேல் சாய்ந்து அழும் பெண்தான் ஆணை முழு ஆண்மகனாக உணரவைக்கிறாள்.

-ஜெயமோகன்

அருணன்

ஒருக்களித்து படுத்தவளின் விசும்பல்கள்
முதுகில் பிரதிபலிக்கிறது!

-அருணா

கவிதை மொழியன்

அப்பாக்களின் தேவதைகள்..

விஷேச வீடுகளில்,,
"அம்மா பிடிக்குமா
அப்பா பிடிக்குமா.."
எனக்கேட்டு
யாரேனும்
கன்னத்தை
கிள்ளினால்,,,
அம்மாக்களின்
இடுப்பில்
அமர்ந்திருந்தாலும்..
அப்பாக்களை
கை காட்டுவார்கள்..

காய்ச்சல்
வந்து,
குணமாகிவிட்ட
விடுமுறை
நாளில்,,
பொம்மையை
பாப்பாவாக்கி..
பொம்மைக்கு
அப்பாவாக
நடந்து
கொள்வார்கள்,,

அம்மாக்கள்
வீட்டிலிருந்தாலும்,,
அப்பாக்களிடம்
முதன்முதலில்
காட்டுவதற்காக,,
கோலப்போட்டியில்
வாங்கி வந்த
சில்வர் தட்டை,,
புத்தகப்பைக்குள்
ஒளித்து
வைப்பார்கள்...

அம்மாக்களும்
தம்பிகளும்
தூங்கிவிட்ட
இரவில்...
அப்பாக்களின்
வண்டிச்சத்தம்
கேட்டதும்
ஓடிவந்து
கதவு
திறப்பார்கள்...

பொட்டானிகல் கார்டனுக்கு
சுற்றுலா சென்றுவரும்
பேருந்தில்,
அத்தனை
தோழிகளும்
விதவிதமாய்
ரோஜா நாத்தை
பற்றியபடி
அமர்ந்திருக்க,,
அவர்கள் மட்டும்
அப்பாவிற்கு
பொருத்தமான
ஸ்வெட்டரோடு
அமர்ந்திருப்பார்கள்..,

ஐந்தாறு
அழகான
ஆண்களின்,
காதல்
கடிதங்களை
புறக்கணித்திருந்தாலும்..
அப்பாக்கள்
வீட்டிற்கு
அழைத்துவரும்,
சுமாரான
மாப்பிள்ளையை
வெட்கத்தோடு
பார்ப்பார்கள்..

சமையல்
குறிப்பிற்காக
அம்மாக்களின்
அலைபேசிக்கு
அழைத்துவிட்டு,,,
அப்பாக்களது
நாளொன்றின்
சிகரெட்
எண்ணிக்கை
குறித்து,,
விசாரித்துக்கொண்டு
இருப்பார்கள்..

பிரசவ அறையில்,,
இடுப்பு வலியை
மறந்து,,
அந்த
புதிய சிசுவிற்கு
அப்பாவின்
நாசி
அப்படியே
அமைந்திருப்பதை
ரசித்துக்கொண்டு
இருப்பார்கள்,,,

அண்ணன்கள்
ஆகவேண்டிய வேலையை
பார்த்திருக்க,,
மனைவிகள்
புகைப்படத்தில்
சிரித்திருக்க,,
பிரேதமாகிவிட்ட
அப்பாக்களின்
அருகிலமர்ந்து
நிஜமாய்
அழுதுகொண்டு
இருப்பார்கள்...

அப்பாக்களின் தேவதைகள்..!

கவிதை மொழியன்,

மீள்

10/03/2018

ராஜா

உன்னிடமிருக்கிறது
பிடிவாதம்
என்னிடமிருக்கிறது
வைராக்கியம்
இதை வைத்துக்கொண்டு
எவ்வளவு தூரம்
பயணம் செய்யப் போகிறோமோ
தெரியவில்லை

-ராஜா

நவின்

யாரையும் வெறுக்காமல் இருக்க ஒரே வழி, யாருடைய இயல்பையும் தெரிந்துகொள்ளாமல் இருப்பது தான்.

-நவின்

ப.பி

உதட்டுக்கும்
உள்ளத்துக்கும்
ஒரே ஒரு
வித்தியாசம்தான்
உதடு சொல்லத் துடிக்கும்
உள்ளம் சொல்லாமல்
துடிக்கும்.."”

-படித்தது

08/03/2018

வெற்றி

உன்
ஒற்றை
குரலுக்கு
ஏங்கித்
தவிக்கும்
எளிய உயிர்
நான்..
_வெற்றி.

05/03/2018

ஆத்மார்த்தி

அந்த
ஒற்றைச்
சொல்லிற்கும்
முந்தைய
மௌனத்திற்கும்
எத்தனைப்
பெருமூச்சுகள்
உன்

ம்

#ஆத்மார்த்தி

04/03/2018

படித்தது

உன்னைத்தவிர வேறு எவளையும் நினைய முடியாமைக்கு ஒரே காரணம்தான், என்னிடமிருந்த ஒரேயோர் காதலையும் உனக்குப்பொருத்தமாக வடிவமைத்து முடித்துவிட்டேன்!

-படித்தது

வண்ணதாசன்

அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை. கொஞ்சம் போலி வார்த்தைகள், கெட்டிக்காரத்தனம், அதிகாரம், கொஞ்சல், கெஞ்சல் இப்படி ஏதாவது ஒன்றுடன் கலந்து காட்ட வேண்டியிருக்கிறது. வெறும் அன்பு சலிப்புத் தட்டி விடுகிறது.

- வண்ணதாசன்

படித்தது

உன்னைத்தவிர வேறு எவளையும் நினைய முடியாமைக்கு ஒரே காரணம்தான், என்னிடமிருந்த ஒரேயோர் காதலையும் உனக்குப்பொருத்தமாக வடிவமைத்து முடித்துவிட்டேன்!

-படித்தது

யாத்திரி

நிம்மதியாகத் தூங்குவதற்கு சிலர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நேர்மையாக இருப்பதைக்கூட!

-யாத்திரி

சி மோகன்

மாயக் கவித்துவம்
சி. மோகன்

மலைப்பிரதேசக் கனவுக் குடிலொன்றின்
வெளியில் கிடக்கும் கட்டில் மீது
அமர்ந்திருக்கும் என்னை நோக்கி
மரத்தடியில் நிற்கும் நீ
ஒரு கவிதை சொல்கிறாய்.
ஒவ்வொரு வரி முடிந்த பின்னும்
உன்னைப் பார்க்காது
மரம் பார்த்திருக்கும்
என் அலட்சியத்திற்காக ஆதங்கப்படுகிறாய்.

நானோ
உன் ஒவ்வொரு வரிக்கும்
மரக்கிளையின் ஒரு கொப்பு
அசைந்தாடும் அற்புதத்தை
அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

(எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை" தொகுப்பு,