26/06/2020

எஸ்.ரா

உலகில் உள்ள எந்த விருட்சத்தையும்விட அதிகமாகக் கிளைவிடுவது சாலைகள் மட்டும்தான்.

எஸ்.ரா

ஜி.நாகராஜன்

எனக்கு இந்த வேலை பிடித்ததா இல்லையா என்று கேட்காதீர்கள்.எந்த வேலையைப் பற்றியும் அந்தக் கேள்வியை கேட்காத அளவுக்குத்தான் ஒருவன் அந்த வேலையை நன்கு செய்ய முடியும்.

-ஜி.நாகராஜன்

கவிஞர். சந்திரா

மலையே உன்னுடையவை உன்னுடனே இருக்கின்றன
அதனாலே நீ நகராமல் நிற்கிறாய்

- கவிஞர் சந்திரா

பாரதியார்

பொய் தீர்ந்தால் பயம் தீரும்
பயம் தீர்ந்தால் பொய் தீரும்

-பாரதியார்

வண்ணதாசன்

ஒரு பறவை இதைவிட
எடையுள்ளதாக இருக்கும்’
கை நினைத்தது.
‘ஒரு கை இதை விட
மென்மையாக இருக்கும்’
பறவை நினைத்தது.
எல்லாம்
அமர்ந்து பறந்த
சிறுகணத்துக்குள்.
- வண்ணதாசன்

ஓஷோ

மனம் அறிந்து கொள்ளும்போது அதை அறிவு என்கிறோம்.
நமது இதயம் அறியும்போது அதை அன்பு என்று அழைக்கிறோம். 
நமது இருப்புணர்வு அறியும் போது நாம் அதை தியானம் என்று அழைக்கிறோம். 
ஆனால் இந்த மூன்றும் வேறு வேறு மொழிகளைப் பேசுபவை. இவைகளில் ஒன்றை மற்றொன்றாக மொழிபெயர்க்க முடியாது. மேலும் நீங்கள் ஆழ்ந்து செல்ல செல்ல அதை மொழி பெயர்ப்பது மிகவும் கடினமாகி விடும். ஏனெனில் உங்களது இருப்புணர்வின் மையத்தில் அமைதியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்த அமைதியை சப்தமாக மொழி பெயர்ப்பது எப்படி? நீங்கள் அமைதியை சப்தமாக மொழி பெயர்க்கும் அந்த நொடியிலேயே அந்த அமைதியை  அழித்து விடுகிறீர்கள். சங்கீததினாலும் கூட அதை மொழி பெயர்க்க முடியாது.
     
- ஓஷோ
புரிதல் பற்றிய புத்தகம்.

எஸ்.ரா

இரவினுள் அடங்க மறுக்கும் பகல் போலதான் காதலும். அது மனிதர்களை நிம்மதியறச் செய்கிறது. ஆனால், அந்த அலைக்கழிப்பும் வலியும் காதலுக்கு அவசியம் என்றே தோன்றுகிறது. வலியில் இருந்தே காதல் வளர்கிறது. பிரிவே காதலை உணரச் செய்கிறது.

-எஸ்.ரா

வண்ணதாசன்

ஒரு பறவை இதைவிட
எடையுள்ளதாக இருக்கும்’
கை நினைத்தது.
‘ஒரு கை இதை விட
மென்மையாக இருக்கும்’
பறவை நினைத்தது.
எல்லாம்
அமர்ந்து பறந்த
சிறுகணத்துக்குள்.
- வண்ணதாசன்

சுஜாதா

"மனசாட்சியே இல்லாம எப்படிடா ஒருவனால் பொய் சொல்ல முடியும்?

"பொய் சொல்லணும்னு முடிவெடுத்த பிறகு மனசாட்சி எதுக்கு?"

-சுஜாதா

ஷங்கர ராமசுப்பிரமணியன்

தேவதச்ச கணங்கள்

உலகிலேயே அழகான
உயிர் பொருள்
நாய்வால் தான்
அதற்கு கண் இல்லை
காது இல்லை
ஒரு இதயத்திலிருந்து நீளும்
துடிப்பு உண்டு
மிக மிக மிக
முக்கியமாக
அதற்கு
அன்பின் கோரைப்பற்களில்
ஒன்றுகூட இல்லை.

- கவிஞர் 
ஷங்கர்ராமசுப்ரமணியன்

எஸ் ரா

பெரிய சிறகுள்ள பறவைகள் மட்டும்தான் பறக்க முடியும் என்பதில்லை. ஒரே வானில்தான் பருந்தும் குருவியும் வல்லூறும் பறக்கிறது. அதனதன் சிறகுகள் அதற்கு. ஆகவே பறவையாக இருப்பதுதான் முக்கியமே அன்றி, எவ்வளவு பெரிய பறவையாக இருக்கிறோம் என்பதில்லை.

-எஸ்.ரா

மனுஷ்ய புத்திரன்

துடைத்துக்கொள்
கசந்த உன் கண்ணீரை
இனிநாம் அடையப்போகும் துயரங்களிலேயே
இதுதான் சின்னஞ்சிறு துயரமென ஆகிவிடலாம்

-மனுஷ்யபுத்திரன்

எஸ்.ரா

கொக்கு கடந்து போகையில் வானம் திடீரென அதிக பொலிவு கொண்டுவிடுவது போலவேயிருக்கிறது.

 - எஸ்.ரா"

ராஜா சந்திரசேகர்

பேரம் பேசாமல் வாங்கியதால் விற்றவள் முகத்தில் பூக்கள்

-ராஜா சந்திரசேகர்

பௌலோ கொய்லோ

ஆரோக்யமான விஷயத்தை நினைத்தால் இயற்கை அதனை அடைய வழி வகுக்கும்

-பெளலோ கொய்லோ

எஸ்.ரா

ஒரு மனிதன் எப்படி வளர்க்கப்படுகிறான், எந்தச் சூழல் அவனை உருவாக்குகிறது, பதினைந்து வயதிற்குள் அவன் என்ன துயரங்களை, நெருக்கடிகளைச் சந்திக்கிறான், எதற்காக ஏங்குகிறான் என்பது அவன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வரக்கூடியது.

-எஸ்.ரா

பௌலோ கொய்லோ

துன்பத்தை விடக் கொடுமையானது துன்பம் வரும் முன்பே அத்துன்பம் பற்றி அஞ்சுதலே

-பெளலோ கொய்லோ

பௌலோ கொய்லோ

நாம் எப்பொழுதும் மாற்றத்தை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

-பெளலோ கொய்லோ

ராஜா சந்திரசேகர்

யாரிடமும் போட்டியிட விரும்பாதவன்
தன்னிடமே தோற்றுவிடுவான்

-ராஜா சந்திரசேகர்

க.சீ.சிவக்குமார்

எப்போதும் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதில்தான் சிக்கல்.  சுதந்திரத்தின் விளைவுகளில் தண்டவாளத்தின் வரைநீட்டம் போல  நல்லதும் கெட்டதும் பக்கத்தில் பக்கத்தில் இருக்கின்றன.

- க. சீ. சிவகுமார்

ராஜா சந்திரசேகர்

ஹாஸ்பிட்டல் வராண்டாவுல ஒரு அப்பா வெட்கத்தோடயும் கூச்சத்தோடயும் சொல்றாரு-என் குழந்தைக்கு குழந்தை பொறந்திருக்கு சார்!

-ராஜா சந்திரசேகர்

பாவண்ணன்

ஒரு பெண் இல்லாத வெறுமைக்கு ஒரு பொழுதையே சலிப்புமிக்கதாக மாற்றும் ஆற்றல் எப்படியோ வந்துவிடுகிறது. நம்மைச் சுற்றி நிகழும் பல ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று.
-பாவண்ணன்

பழ.புகழேந்தி


கரும்பலகை அழிப்பதற்காய்
காகிதம் கேட்டேன்

கிழித்துக் கொடுத்தான்
நேற்றெழுதிய பாடங்களின்
பக்கங்களை..

இப்படித்தான்
வீணாய்ப்போகிறது
பலகையிலும் பதியாமல்
பக்கங்களிலும் பதியாமல்
சில பாடங்கள்..

-பழ.புகழேந்தி

நா.முத்துக்குமார்

இங்கு பெரும்பாலும்
கல்யாணத்தை மட்டுமல்ல,
கல்யாணத்தில் 
கலந்து கொள்வதைகூட
நகைகளே தீர்மானிக்கின்றன
-நா.முத்துக்குமார்

காரல் மார்க்ஸ்

பொருளுக்கு இரையாகுபவன் உண்மைப் பொருளைக் காணமாட்டான். அதுவே எல்லா வகை மயக்கத்திற்கும் அடிப்படைக் காரணம்.இதுதான் முதலாளியம் வளர்த்த பெரும் மயக்கம

-கார்ல் மார்க்ஸ்

க.சீ.சிவக்குமார்

முயற்சி எடுக்காமலேயே பழகிக்கொள்ளும் தொழில் ஊர் சுற்றுதல் ஒன்றுதான்.

- க. சீ. சிவகுமார்

ரோஸ்லின்

உனக்கு தேவைப்படாத
எனது பிரியங்களை
இலைகளைப் போல
உதிர்த்துப் போட்டேன்
அள்ளவியலாத சருகுகளால்
அடைந்து கிடக்கிறது என் வனம்
-ரோஸ்லின்

மா வோ

கிணற்றின் அடிப்பகுதியில் உள்ள தவளையைப் போல, நாம் மிகவும் சிறிய அளவே சிந்திக்கின்றோம்.

-மாவோ

எஸ் ரா

*மனிதர்கள் கதைகளின் வழியாகவே கடந்தகாலத்தை அதிகம் அறிந்துகொள்கிறார்கள்.*

-எஸ்.ரா

19/06/2020

எஸ்.ரா

பழ புகழேந்தி

கரும்பலகை அழிப்பதற்காய்
காகிதம் கேட்டேன்

கிழித்துக் கொடுத்தான்
நேற்றெழுதிய பாடங்களின்
பக்கங்களை..

இப்படித்தான்
வீணாய்ப்போகிறது
பலகையிலும் பதியாமல்
பக்கங்களிலும் பதியாமல்
சில பாடங்கள்..

-பழ.புகழேந்தி

ராஜ சுந்தரராஜன்

*தகுதி*

ஒரு பறவையிட்ட
எச்சத்தின்
நிழலில்
அயர்கிறோம் 
நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.

- ராஜ சுந்தரராஜன்

17/06/2020

ஏங்கெல்ஸ்

இயற்கையை ஆதிக்கம் செய்யும்போது முதல் தலைமுறையில் எமக்கு ஆதாயம் இருப்பது போலவே தோன்றும்.ஆனால்,
அடுத்தடுத்த காலங்களில் இயற்கையே எமக்கு எதிராகத் திரும்பும்

-ஏங்கெல்ஸ்

கலாப்ரியா

ஆச்சரியக் குறிகள் 
போல ஆரம்ப
மழைத்துளிகள்

- கலாப்ரியா

சுப.வீ

உலகத்தின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் ஆசை மட்டும் காரணமன்று. வெறுப்பும் கூடக் காரணம்.

ஒன்றின் மீது நாம் வைக்கிற ஆசை நம்மை எப்படி அலைக் கழிக்குமோ,அதுபோல இன்னொன்றின் மீது வைக்கிற வெறுப்பும் நம்மை அலைக்கழிக்கும்

-சுப.வீ

நாவிஷ் செந்தில் குமார்

அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு
********************************************
சித்தாள் வேலை செய்கிற
அவனை
கொத்தனார், தச்சர் உள்ளிட்ட
வீட்டு வேலை பார்ப்பவர்கள்
'டே.. ஊமையா...' என்றுதான்
அழைப்பார்கள்.

மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு
ஓய்வெடுக்கும் போது
வீடு கட்ட
குவிக்கப்பட்டிருக்கும் மணலில்
'ராமு' என்ற தன் பெயரை
எழுதி
கொஞ்சநேரம் வெறித்துவிட்டு
அழிப்பான் அவன்.
--நாவிஷ் செந்தில்குமார்

இளந்தென்றல் திரவியம்

கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து கொண்டிருக்கும்
பூக்களின் மரண வாக்குமூலப்பாதையில்

நகர்கிறது சவ ஊர்வலம்!!

இளந்தென்றல் திரவியம்

சுகுமாரன்

சுகுமாரன் பிறந்ததினம்
@manipmp


*தேவதைகளுக்கு ஜாதகமே கிடையாது.அவளுக்கு ஜாதக தோஷம் என்று சொன்னவனை என்ன செய்ய..

-சுகுமாரன்

*ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களுடன் பாராட்டும் உறவு,
பசி எடுத்த விலங்கு அதன் இரை  மீது காட்டும் இரக்கம் போன்றது..

சுகுமாரன்.. 
வெலிங்டன் நாவலில்..

*பட்டினி வயிற்றுக்கு தன்மானம் ஆடம்பரம்

-சுகுமாரன்

*ஊன்று கோலில் இருக்கிறது
பார்வையற்றவரின் கண்
-சுகுமாரன்

*நெருக்கடியான சூழ்நிலையில் மனித உதடுகள் எப்படியெல்லாம் பிதுங்கும் என்று காண்பதை தவிர பலன் சூனியம்
-சுகுமாரன்

*"என்னுடைய முதலாவது கண்
என் வாழ்க்கையை
நடிப்பாக்கிக்கொண்டிருக்கையில்
இந்த இரண்டாவது கண்
என் நடிப்பை
வாழ்க்கையாக்கிக் கொண்டிருந்தது."

-சுகுமாரன்.


*மனிதர்களை ஜெயிப்பதுபோல இயற்கையை ஜெயிப்பது அவ்வளவு எளிதில்லையா? அதன் வசீகரம் புதிரானதா? விளங்கிக்கொள்ள நெருங்கும்போதெல்லாம் புதிர் இன்னும் அடர்த்தியாகிறதே?

-சுகுமாரன்

*எதுவும் பேசாதே 
இன்று மனிதனாக இருப்பதுவே குற்றம்
- சுகுமாரன்

*சந்தோசத்தின் நடைபாதை மூன்றடிதூரம்,
துயரத்தின் பாலைவெளி முடிவற்ற நீளம்

-சுகுமாரன்

*துணிச்சல் தனியானதல்ல. ஒரு பகுதி நுண்ணறிவு, ஒரு பகுதி அடங்காமை,ஒரு பகுதி பயம் எல்லாம் சேர்ந்தது தான் துணிச்சல்”

-சுகுமாரன்

*கடந்த போனதற்கும்
எதிர்காலத்துக்கும் நடுவில்
இந்த நாள் ஒரு கசியும் காயம்
-சுகுமாரன்

*நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட
ஒரு கணமேனும் பற்றி எரிவதே மேல்

-சுகுமாரன்

-மணிகண்டபிரபு

அம்பேத்கர்

எந்த ஒரு முடிவும் பெரும் அறிவாளியினுடைய முடிவாக இருந்தால் மட்டும் போதாது,அது மக்களின் முடிவாக இருக்க வேண்டும்.
மக்களைத் திரட்டி செய்கிற காரியம்தான் வரலாற்றில் இடம் பெறும்

-அம்பேத்கர்

சுப.வீ

விரிக்கிறபோது நீர்த்துப்போகாமலும்,
சுருக்குகிறபோது சிதைந்து போகாமலும் பார்த்துக் கொள்கிற ஆற்றல்தான், எழுத்திலும் பேச்சிலும் இருக்க வேண்டும்

-சுப.வீ

யாத்திரி

பேசமுடியவில்லை
வரமுடியவில்லை 
என்பதற்கெல்லாம் நீ காரணம் தேடாதே, சொல்லவும் சொல்லாதே.
நானே மிகப்பொருத்தமான ஒன்றை
நான் ஏற்றுக்கொள்ளுமாறு ஒன்றை
கற்பனை செய்து
அதிலுன்னை இருத்திக் கொள்கிறேன்.

-யாத்திரி

சதிஸ்பிரபு

தூக்கிச்செல்ல
வருவார்களா?
காத்திருத்தலின்
மணிப்பொழுதுகளில்
முதன்முதலாய்
ஏ.சி அனுபவித்தார்
தாத்தா
மார்ச்சுவரியில்

-சதீஸ்பிரபு

தேவதச்சன்

சிறுவர்கள் மொழியை நிகழ்காலத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். நாம்தான் மொழியை இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயன்படுத்துகிறோம்

-தேவதச்சன்

ருமி

மவுனத்தினால் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். மொழிப்பெயர்த்துக் கொள்.

-ருமி

சேகுவேரா

வருங்காலத்தில் மொத்த சமுதாய நன்மைக்காக, தனிமனிதத் திறமைகள் அனைத்தும் பயன்படும் விதத்தில் தனிநபர்வாதம் என்பது உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
-சே

நாம் தியாகத்தால் புடம் போட்ட வருங்காலத் தலைவர்களைத் தேட வேண்டும்.
-சே

மனிதனை மனிதன் சுரண்டுகிற நிலைமையை அழித்தொழிப்பதை விட சோசலிசத்திற்கு வேறு ஒரு சரியான அர்த்தம் இல்லை.
-சே

மாபெரும் திட்டங்களின்போது, மாபெரும் பதற்றங்களின் போது, மாபெரும் படைப்புகளின் போது எது தேவையென்றால் மாபெரும் எதிரிகளும், மாபெரும் குறிக்கோள்களும்.
-சே

பொருட் சலுகைகள் கடந்த காலத்தின் எச்சம். அது நம் மக்களின் எண்ணத்தில் ஊறிப்போய் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். புரட்சிகர வளர்ச்சி முன்னேற்றம் அடையும் போது, அதை படிப்படியாய் உடைத்துவிட வேண்டும்.
-சே

ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால், நீ எனது தோழன்.
-சே

ஏகாதிபத்தியம் இருக்கும் வரையில், மற்ற நாடுகளின் மீது அதனுடைய ஆதிக்கம் இருந்தே தீரும் என்பதுதான் அதன் அர்த்தமாகும். இன்று அந்த ஆதிக்கத்தின் பேர்தான் நவீன காலனியாதிக்கம்.
-சே

வாழ்வுக்கும் மரணத்திற்குமான இந்தப் போராட்டத்தில் எல்லைகளே கிடையாது. உலகத்தின் ஒரு மூலையில் நடப்பது குறித்து நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு தேசத்தின் எதாவது ஒரு பகுதியில் கிடைத்த சிறு வெற்றியானாலும் நம் அனைவரின் வெற்றி அது. அது போல ஏகாதிபத்தியத்திற்கு எதிரான யாருடைய தோல்வியாக இருந்தாலும் அது நம் அனைவரின் தோல்வியாகும்.
-சே

விளைவுகளை ஏற்படுத்தாத வார்த்தைகள் முக்கியமற்றவை.
-சே

பாட்டாளி வர்கத்துக்கு ஆண், பெண் பேதம் கிடையாது. பொதுவான இலட்சியத்துடன் நாட்டின் அனைத்து பணியிடங்களிலும் இணைந்து இடைவிடாமல் போராடும் வர்க்கம் அது.
-சே

எங்கே ஒரு அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறதோ, அது குளறுபடியாக இருந்தாலும் ஜனநாயகத் தோற்றத்தோடு காட்சியளிக்குமானால், அங்கு கொரில்லாப் போர் சாத்தியமற்றதாகிவிடுகிறது. அங்கு அமைதியாக போராடுவதற்கான வழிகள் முழுமையாக தீர்ந்து விடாமல் இருக்கிறது.
-சே

புரட்சி என்பதன் அர்த்தமே இதுதான், ஒரு மனிதன் தனக்குள் ஒரு புரட்சியாளனாக விளங்குவதோடு அதை உணர வேண்டும். அப்போது தியாகம் குறித்த கருத்துக்கள் புதிய அர்த்தங்கள் கொள்கின்றன.
-சே

சுதந்திரம் என்பது போராடாமலேயே கிடைத்துவிடும் என்று கனவை நாம் வளர்த்துக் கொள்ளக் கூடாது. அதற்கு நமக்கு உரிமையும் கிடையாது.
-சே

மிருகத்தனமான ஒரு எதிரியை நிர்மூலமாக்க வெறுப்பு இல்லாத மக்களால் முடியாது.
-சே

பெறுவதற்கு ஒன்றும் இல்லை. இழப்பதற்கு நிறைய இருக்கின்றன.
-சே

தன் கொடி பறக்காத நாட்டின் விடுதலைக்காக ஒருவன் சிந்தும் இரத்தம், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்களுக்கு அனுபவமாகும். பிறகு அவனது சொந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஒளியாக கலந்து விடும்.
-சே

உனது காலடியில் வாழ்வதைவிட எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்.
-சே

நான் தோற்றுப் போகலாம். அதன் பொருள், வெற்றி சாத்திமற்றது என்பதல்ல. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று தோற்றவர்கள் எத்தனையோ பேருண்டு. இறுதியில் எவரெஸ்ட் சிகரம் வெல்லப்பட்டது.
-சே

நமது போர் முழக்கம் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால், இன்னொரு கரம் நமது ஆயுதத்தை கையிலெடுக்க துணியுமானால், மற்றவர்கள் நமது இறுதிச்சடங்கில் இயந்திரத் துப்பாக்கிகளோடு வந்து புதிய போர் முழக்கத்தை அறிவிப்பார்களேயானால், மரணம் திடீரென வந்தால் கூட அதை வரவேற்கலாம்.
-சே

வலி, வேதனை எல்லாவற்றையும் உணர்கிறேன். ஒரு புரட்சிக்காரன் வெறுப்பினால் உந்தப்படுவதில்லை. அன்பினால்தான்.
-சே

வாழ்வதற்கான ஒன்றை நாம் ஒரு போதும் பெறவே முடியாது, அதன் பொருட்டு நாம் இறக்கா விட்டால்.
-சே

ஒரு புதிய மனிதனின் தோற்றம் ஆரம்பமாகிறது. இதனை சரியாக புரிந்து கொண்டு அவனிடம் நாம் அனைவரும் மிக அருகில் நெருங்க வேண்டியிருக்கிறது. அதற்கு நாம் ஒவ்வொருவரும், அவரவர் பங்கிற்கு கேட்கப்படுகிற தியாகங்களை வழங்க வேண்டும்.
-சே

எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
-சே

புரட்சி தானாக உருவாவதில்லை, நாம் உருவாக்க வேண்டும்.
-சே

தீ பற்றவை. மக்கள் நெருப்பென எழுவார்கள்.
-சே

நடைமுறைப் போராளிகளாகிய நாங்கள் எங்கள் பாதைகளில் அடியெடுத்து வைத்தபோது மார்க்ஸ் என்கிற அறிஞரின் பார்வையோடு நடந்திருக்கிறோம்.
-சே

ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் குண்டு தன் துப்பாக்கியில் மட்டும் இருக்கிறது என்று சொல்லவில்லை. எனது துப்பாக்கியிலும் ஒரு குண்டு இருக்கிறது.
-சே

சதிஸ்பிரபு

சவரமும் சேர்த்தே
செய்து கொண்டால்
பத்து ரூபாய் குறையும்
என்பதால்
பெரும்பாலும்
தாடியை வருடியபடியே
தீர்மானிக்கப்படுகின்றன
முடிவெட்டுகிற நாட்கள்

-சதிஸ்பிரபு

இறையன்பு

இந்தியப்பெருங்கடலை தமிழர்கள் "எறிதிரைக்கடல்" என அழைத்தனர்.அலைகள் ஓயாமல் வீசிக்கொண்டே இருப்பதால் இப்பெயர்.இதை கிரேக்கர்கள் அப்பெயரிலேயே Erythrean sea என அழைத்தனர்.பின் ஆங்கிலேயர்கள் இந்தியபெருங்கடல் என அழைத்தனர்

#வெ.இறையன்பு

ஷோபா சக்தி

விவாதிக்கும் விஷயத்தில் எந்தவித அறிவுமற்ற ஒருவரிடம் கூட ஓரளவு விவாதிக்க முயற்சிப்பேன். ஆனால் அவரது அந்த அறியாமை திமிராகத் திரளும்போது நாம் விவாதத்திலிருந்து ஒதுங்கிவிடுவதே மாண்பு

 - ஷோபாசக்தி

எஸ். ரா

ஒருவன் விதியை நம்பத்துவங்கிய மறுநிமிசம் 
பலவீனமானவன் ஆகிவிடுகிறான்.பின்பு 
அவனால் அதிலிருந்து 
விடுபடவே முடியாது.”

-எஸ்.ரா

எஸ் ரா

குற்றத்தின் நிழலில் வாழும்போது சிரிப்பது ஒன்றுதான் ஆறுதலானது”

-எஸ்.ரா

எஸ் ரா

திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்குப் பின்பு என்ற பேதங்கள் காதலில் கிடையாது. காதல் எந்த வயதிலும் உருவாகக்கூடியது. அது ஒரு தேவை. அது ஒரு தவிப்பு. இளைப்பாறுதல். அல்லது நேசிக்கப்பட வேண்டும் என்ற அடிமனிதனின் ஏக்கம். ஆணும் பெண்ணும் தங்களை யாராவது நேசிக்க வேண்டும் என்பதில் எப்போதுமே அக்கறை கொள்கிறார்கள்.

-எஸ்.ரா

செல்வேந்திரன்

எழுத்துப்பிழைகள் தயிர்சாதத்தில் முடி கிடப்பது போல. அதற்காக ஒருவன் காலம் முழுக்க தயிர்சாதத்தில் முடியை மட்டுமே தேடிக்கொண்டிருத்தல் சரியல்ல.

-செல்வேந்திரன்

தேவதேவன்

தூரத்தில் போய்க்கொண்டிருப்பது
அவரே தான்
முகத்தைச் சொல்லிவிடுகிறது
முதுகும் நடையும்

-தேவதேவன்

சுஜாதா

உலகில் நீங்கள் அதிகம் கவலைப்படும் விஷயம் எது? சந்தோஷப்படும் விஷயம் எது?
 
நம் குழந்தைகள் சீக்கிரமாக இழக்கும் அறியாமை, நம் குழந்தைகள் சீக்கிரமாகப் பெறும் திறமை!

-சுஜாதா

சுந்தர ராமசாமி

நிம்மதி எப்போதும் ஒரு மனக் கலவரம்.பிறரால் ஒதுக்கப்படுகிறோம் என தோன்றும்.முறுக்கப்படும் நூல்கள் போன்றவை உறவுகள்.முதலில் தளர்ச்சி, தொய்வு,வலு, இறுக்கம், முறுக்கத்திற்கு ஆளாகின்றன. வலுவின் உச்சத்தில் முறுக்கேற்றுதல் நிறுத்தப்படனும்.மேலும் வலுவூட்டினால் அறுபடும்

-சுந்தர ராமசாமி

அப்துல் ரகுமான்

சொற்களைச் சமைத்துப்
பரிமாறுவது
என் வேலை.
அது உண்பவர்களின்
விருப்பத்திற்கேற்பச்
சைவமாகும்
அசைவமாகும்.

அப்துல் ரகுமான்.

பா.விஜய்

அதிகார வர்க்கம் ஒருவனை ஒழிக்க எண்ணிவிட்டால் அவன் தும்மியது ராஜ துரோகம் என தூக்கிலிடும்..

பா.விஜய்..

எஸ் ரா

அச்சத்தை 
உருவாக்குவது தான்
 ஆள்பவனின் முதற்பணி “-எஸ்.ரா

சாரு நிவேதா

புத்தகங்கள் ஊசிப் போவதில்லை என்ற ஒரே காரணத்திற்காக வெறுமனே வாங்கி வாங்கி அடுக்கக் கூடாது 

- சாருநிவேதிதா

10/06/2020

கலாப்ரியா

அலகால் பறவைகள்
ஊட்டுவதிலிருந்து
ஆரம்பித்திருக்கும்
முத்தமிடுதல்

- கலாப்ரியா

வைரமுத்து

உசுர விட்டு போறது மட்டும் சாவு இல்ல, ஊர விட்டு போறதும் சாவுதான்

 #வைரமுத்து

சு.செங்குட்டுவன்

"குறையொன்றுமில்லை

வழக்கம்போல் இம்முறையும் 
வானம் பொய்த்திருக்கும்

இருக்கும் தண்ணிக்கு 
வெச்சுள்ள கத்திரியில்
இலைச்சுருட்டு விழுந்திருக்கும்

நிலவள வங்கியின் 
நகை ஏல அறிவிப்பு 
தபால்கார்டில் வந்துசேரும்

காதுகுத்தும் பிள்ளைக்கு 
தோடு போட வேண்டுமென 
இளையதங்கை சொல்லிப் போவாள்

முகங்கண்ட மறுகணமே 
அம்மாவென குரலெழுப்பும் 
காளைகளை விற்றுவிட்டு
ஊர் திரும்புவாய்

நீ விரும்பிய பெண்
தான் விரும்பும் புருஷனுடன் 
பஸ் ஸ்டான்டில் எதிர்ப்படுவாள்

திரும்பி நிற்கும் உன்னிடத்தே 
வலியவந்து உரையாடி 
செளக்கியமா எனக் கேட்பாள்

நல்ல செளக்கியம் என்று சொல்."

- சு. வெங்குட்டுவன் கவிதைகள் ❤️

ஜெயகாந்தன்

ஒரு மனிதனுடைய பெருமை, திறமை எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனுடைய அந்தரங்கமான பலவீனங்களைப் பற்றிப் பேசுவதே நமது வேலை..

ஜெயகாந்தன்..

ஜெயகாந்தன்

வாழ்க்கையே உறுத்தல்களும், சமாதானங்களும்தான்..

ஜெயகாந்தன்..

நகுலன்

எறும்புக்கடிக்கு மருந்து கிடையாது. ஏனென்றால் மருந்து கொண்டு வருவதற்குள் வலி மறைந்துவிடுகிறது.

-நகுலன்
(நினைவுப்பாதை நாவலிலிருந்து)

ஓஷோ

சிறிய உண்மையில் இருந்து இறுதியான உண்மைக்கு பயணம் செல்ல வேண்டும்

-ஓஷோ

தஞ்சாவூர் கவிராயர்

அம்மாவின்
பழைய
புகைப்படத்தை
துடைத்துத்துடைத்துப்பார்த்தேன்
பளிச்சென்றே தெரியவில்லை
அப்புறம் புரிந்தது
அய்யோ
அது அழுக்கல்ல
காலம்!

-தஞ்சாவூர் கவிராயர்

பாவண்ணன்

ஒரு குழந்தை மீண்டும் மீண்டும் ஒரு வரியைச் சொல்வதன் வழியாக, அதுதான் கண்டடைந்த மகிழ்ச்சியை இரு மடங்காக, மூன்று மடங்காக பெருக்கிக் கொண்டே செல்கிறது

-பாவண்ணன்

சேலம் ராஜா

அழகிய 
கோபுரத்தில் தொடங்கி
அம்பேத்கர் சிலையோடு
முடிந்து விடுகிறது
எங்கள் ஊர் 

- சேலம் ராஜா

04/06/2020

மகுடேசுவரன்

கன்றிடமிருந்து நைச்சியமாகத் திருடியதைத்தான்
உலக மகா யோக்கியனும் பால் என்று பருகுகிறான்..

_மகுடேசுவரன்

கண்டராதித்தன்

நீண்டகாலம் நண்பனாக இருந்து
விரோதியானவனை வெளியூர்
வீதியில் சந்திக்க நேர்ந்தது
பதற்றத்தில்
வணக்கம் வணக்கம் என்றேன்
அவன் நடந்துகொண்டே
கால்மேல் காலைப்
போட்டுக்கொண்டே போனான்.

இந்த முறை 
உன்னை உறுதியாக அறுத்து விட்டேன் 
இனி எங்கேனும் 
வழியில் கண்டால் தலையை ஆட்டிக்கொள்வதென 
எப்படி தலையாட்ட வேண்டுமென்று 
ஆட்டி ஆட்டிப்பார்ப்பது 
இது 119 ஆவது முறை

-கண்டராதித்தன்

சௌவி

குடிநீரென்பது
ஓடையாயிருந்தது
நதியாயிருந்தது
பின்
ஏரியாயிருந்தது
குளமாயிருந்தது
பின் ஒவ்வொரு வீட்டிலும்
கிணறாயிருந்தது
பின் சுருங்கி
ஆழ்துளைக் கிணறானது
பின்
பன்னாட்டு நிறுவனத்தின்
வியாபாரப் பொருளாகி
ஒரு லிட்டரில் அடைபட்டது
பின் அதுவும் சுருங்கி
அரை லிட்டரானது
இப்போது அதுவும் சுருங்கி
200 மிலி 100 மிலி என்றானது
அடிப்படைக் குடிநீர்
இனி சொட்டு மருந்தெனச்
சொட்டப்படுமோ?

-சௌவி

கரிகாலன்

டயானா மரணமும்
கிளிண்டன் காதல் லீலைகளும்
பஞ்சாயத்து தொலைக்காட்சியில்
பார்த்தபின் விவாதமாயிற்று
டீக்கடை பெஞ்சுகளில்

முதிர்ந்த கரும்பு காய்ந்து கருக
ஆலை திறக்குமா
நிலுவை கிடைக்குமா
இருள் சூழ் மர்மமாயிற்று

வீட்டுக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி
லட்சியமானபோது
மருங்கூருக்குள் வந்துவிட்டது உலகம்
உலகத்துக்குத்தான் கவலையில்லை
மருங்கூர் பற்றி

-கரிகாலன்

மதன்

நல்லவர்களை அடையாளம் காண ஒரு வழி?
"மாசக்கடைசியில் அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்
-மதன்

அப்துல் ரகுமான்

மரணக் காற்றில் ஒரு விளக்கை போல் அணைந்து போகாதே!

ஒரு ஊதுவத்தியைப் போல் கொஞ்சம் நறுமணமாவது விட்டு விட்டுப் போ!
-அப்துல்ரகுமான்

காகித ஓடங்களை(பாடபுத்தகங்கள்) நம்பி இருப்பவர்கள் ஒரு நாளும் அக்கரை போய் சேரமாட்டார்கள்
#அப்துல்ரகுமான்

பொம்மை செய்யச் சொல்லி கருப்பையை
நச்சரிக்காதீர்கள்
-அப்துல்ரகுமான்

உன் தலையை புகழால் அலங்கரி
மகுடங்களால் அலங்கரிக்காதே
ஏனென்றால் 
மகுடங்கள் தலைமாறக்கூடியவை
-அப்துல்ரகுமான்

மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"
-அப்துல்ரகுமான்

நல்ல வேளை வறுமைகொடு கிடைத்தது.இல்லையென்றால் இதன் கீழ் வாழ்பவர் வேறு எதன் கீழ் வாழ்வார்கள்...?
#அப்துல்ரகுமான்

வாழ்க்கை சந்தையில் மட்டும் முட்களை வாங்கினால் கொசுறாக கிடைக்கிறது "பூ"
#அப்துல்ரகுமான்

வைரமுத்து

*மனுச வாழ்க்கையில் நல்ல இடம் சுடுகாடுதான். மனசு மட்டுப்படுவது அங்கேதான். செத்துப் போனவனுக்கு நிரந்தரமான நிம்மதியும் வீடு திரும்புகிறவனுக்கு 'இத்துனூண்டு' ஞானமும் தருகிற உலகத்தின் பழைய பள்ளிக்கூடம் அதுதான்.*

-கள்ளிக்காட்டு இதிகாசம்

ஜான் ஹோல்ட்

உலகின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் எல்லாம் ஒரு கருத்து பிரபலமாகி வருகிறது.மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் இயந்திரங்கள் தவிர வேறல்ல என்ற கருத்துதான் அது.  என்னைப் பொறுத்தவரை உலகில் உள்ள மோசமான, அபாயகரமான,முட்டாள்தனமான,  தவறான ஒரு கருத்தாகும் இது. ஒரு கருத்து சாத்தானாக இருக்க முடியும் என்றால், அது இது தான்.

   - ஜான் ஹோல்ட்
எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?

மீரா

சொல்லில் அடங்கா ஆத்திரம் 
சும்மா விடக்கூடாது அவளை 
கொண்டு வந்து கொட்டுங்கள் 
கோடி ரோஜாப் பூக்களை..

மீரா..

கலைஞர்

அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பதற்கும்,
அடுத்த தலைமுறை சமுதாயத்தைப் பற்றி சிந்திப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

- #கலைஞர்