மனம் அறிந்து கொள்ளும்போது அதை அறிவு என்கிறோம்.
நமது இதயம் அறியும்போது அதை அன்பு என்று அழைக்கிறோம்.
நமது இருப்புணர்வு அறியும் போது நாம் அதை தியானம் என்று அழைக்கிறோம்.
ஆனால் இந்த மூன்றும் வேறு வேறு மொழிகளைப் பேசுபவை. இவைகளில் ஒன்றை மற்றொன்றாக மொழிபெயர்க்க முடியாது. மேலும் நீங்கள் ஆழ்ந்து செல்ல செல்ல அதை மொழி பெயர்ப்பது மிகவும் கடினமாகி விடும். ஏனெனில் உங்களது இருப்புணர்வின் மையத்தில் அமைதியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்த அமைதியை சப்தமாக மொழி பெயர்ப்பது எப்படி? நீங்கள் அமைதியை சப்தமாக மொழி பெயர்க்கும் அந்த நொடியிலேயே அந்த அமைதியை அழித்து விடுகிறீர்கள். சங்கீததினாலும் கூட அதை மொழி பெயர்க்க முடியாது.
- ஓஷோ
புரிதல் பற்றிய புத்தகம்.