“எடை போட்டு
விற்கப்படுகிற
சந்தையில்
தனிப்பூவின் அழகு
செல்லுபடியாவதில்லை..!”
-யுகபாரதி.
29/12/2018
20/12/2018
யாத்திரி
நிகழ்ந்தாக வேண்டிய சண்டை தாமதமாக தாமதமாக பெண் தனது பக்க நியாய வாதங்களை யோசித்து யோசித்துச் செம்மைப் படுத்திக்கொண்டே இருப்பாள்.
என்ன காரணத்திற்கு சண்டை என்பதையே மறந்து போயிருப்பான் ஆண்.
-யாத்திரி
இசை
அவ்வளவு
வலுக்கட்டாயமாக
தலையை வலப்பக்கம்
திருப்பிக் கொள்ளாதே
பிறகு
ஒருநூறு கைகள் ஒன்று கூடி அதை
இடப்பக்கம் இழுக்கும்
#இசை
மருதன்
வலதுசாரி தலைவர்கள்,தன்னிச்சையாக எழுச்சிப் பெற்றுவிடுவது இல்லை.அவர்களை கைதட்டி வரவேற்று ஆரவாரம் செய்பவர்கள் மக்களில் ஒரு பிரிவினர்தான்.அவர்களுடைய ஆதரவுடன் வெறுப்பு அரசியல் அவர்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது.
மக்களின் அச்சங்களையும்,எதிர்பார்ப்புகளையும்,
உணர்வற்ற நிலைகளையும் பயன்படுத்திதான் இந்த தலைவர்கள் மேலெழுந்து வருகிறார்கள்.எனவே நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்,
மனிதர்களை சக மனிதர்களோடு இணைக்கும் மக்கள் அரசியலை அவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.அது ஒன்றே வெறுப்பு அரசியலை வீழ்த்தும்!
-மருதன்
(பலம் பெறும் வலம்)
19/12/2018
சௌம்யா
யார் தவறென யோசிக்காமல்
மன்னிப்பை யாசிக்கச் செய்து விடுகிறது
சண்டையிட்ட கோபத்தில் நீ
உண்ணாமல் கொண்டு சென்ற பசி!
-செளம்யா
வே.பாபு
நள்ளிரவு 1.40
யாரிடமாவது
இரண்டு வார்த்தைகள் பேச
எண்களைத்
துழாவுகிறது
அம்மு
தொடர்பு எல்லைக்கு
வெளியே இருக்கிறாள்
அசந்து உறங்கும்
நண்பர்களே
நள்ளிரவு 1.40
உங்கள் எண்ணை அழைக்கும்போது
எடுத்துப் பேசுங்கள்
அந்த இரவில்
நள்ளிரவு 1.40 ஐ
தற்கொலையிலிருந்து
காப்பாற்றியவர்
நீங்களாகவும் இருக்கலாம்.’
-வே.பாபு
யமுனா
எந்த சண்டையிலும் கடைசி வார்த்தை யாருடையதோ, அவரே அதிகம் குற்றவுணர்வு சுமக்க வேண்டியதாகிறது.
-யமுனா
மனுஷ்ய புத்திரன்
இன்று உன்னை
நீண்ட நேரம்
நினைக்காமல் இருந்து விட்டேன்
அது உன்னை
நீண்டகாலம் பிரிந்திருந்தது போல
மனம் கனத்துவிட்டது
நான் எங்கோ
கூட்டத்தில் வழி தவறிவிட்டது போல
பாதை தெரியாமல் தடுமாறுகிறேன்
நெடுவழி நடந்து
அயர்ந்து தூங்கிவிட்டார் போல
உன்னை சற்றே மறந்திருந்துவிட்டேன்
கூட்டிலிருந்து தவறி விழுந்துவிட்ட
பறவைக் குஞ்சு
தன் கூட்டை நினைப்பது போல
நான் உன்னை நினைக்க வில்லை
என்பதை நினைக்கின்றேன்..
சிறுபொழுதுதான் நினைக்காமலிருந்தேன்
பெரும் பிரிவொன்றின்
பரிதவிப்பில்
கண்கள் தளும்புகின்றன
கதவை திற
திரும்ப வந்து விட்டடேன் என்று சொல்லும் போது
சற்று முன் தானே சென்றாய் என்று கேட்கிறாய் சிரித்துக்கொண்டே..
மனுஷ்யபுத்திரன்..
முகுந்த் நாகராஜன்
தயங்கித் தயங்கி
அம்மாவின் கைப்பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை
சீராகப் போய் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது "
-முகுந்த் நாகராஜன்
சுஜாதா
_விசேஷங்களில்_
_அழகான இளம்_
_பெண்களைக் கண்டால்_
`` _அடடா அவசரப்பட்டுட்டோமே_ ``
_என்று நினைப்பது போய்…_
_சித்தி பையன் பாலாவுக்கு_
_இந்தப் பொண்ண கேக்கலாமே_
_எனத் தோன்றுகிறதா.??_
~ *÷÷÷÷*~
_சண்டை போட்ட_
_உறவினர்களின் மேல்_
_காழ்ப்பணர்ச்சி விகிதம்_
_கரைய ஆரமபித்திருக்கிறதா???_
~ *÷÷÷÷÷* ~
_உறவுகளில்_
_சம வயதினர்_
_அமெரிக்காவில்_
_செட்டில் ஆனால்_
_பொறாமைப்படுவது நின்று_
_நம்ம பையனுக்கு_
_பின்னாடி_ _பிரச்சினையில்லை…..,_
_REFER பண்ண_ _ஆளிருக்கு_
_என மனது_ _சாந்தப்படுகிறதா. ??_
~ *÷÷÷÷* ~
_மனைவியை_
_கவனிக்க_ _தவறிவிட்டதாக_
_உள் மனது ஒப்பாரி இடுகிறதா??_
~ *÷÷÷÷* ~
_திரைப்படங்களின்_
_முதல் நாள் முதல் காட்சி_
_பார்க்கும் எண்ணம் போய்விட்டதா.??_
~ *÷÷÷÷* ~
_வெள்ளை முடி கவலை_
_அப்பிக் கொள்ள_
_ஆரம்பித்துவிட்டதா???_
~ *÷÷÷÷* ~
_மியூசிக் சேனல் பார்ப்பது_
_குறைந்து_
_செய்தி சேனல் பார்ப்பது_
_அதிகரித்திருக்கிறதா??_
~ *÷÷÷÷* ~
_ஞாயிற்றுக்கிழமை_
_யார் வற்புறுத்தலும்_ _இன்றி_
_காலையில் WALKING_
_போகிறீர்களா??._
~ *÷÷÷÷* ~
_இன்னிக்கு அமாவாசை,_
_ஏகாதசி,_
_சஷ்டின்னு_
_ஏதாச்சும்_ _இருக்கான்னு_
_மனசு பார்க்க வைக்கிறதா?._
~ *÷÷÷÷*~
_பாலிஸி DUE DATE_
_பாக்க_
_ஆரம்பித்து விட்டீர்களா??_
~ *÷÷÷÷*~
_ஒரு மருந்துக்கடைக்காரர்,_
_ஒரு சிறு உணவக முதலாளியின்_
_நட்பு_
_நிச்சயம்_ _ஏற்பட்டிருக்கிறதா??_
~ *÷÷÷÷* ~
_கவலையை மறக்க_
_காமெடி சானல்_ _பார்ப்பது_
_சிறந்த சாய்ஸ்_
_எனத்தோன்றுகிறதா??._
~ *÷÷÷÷* ~
_வண்ணத்திரை, சினிக்கூத்து_
_வாங்கிய கடைகளில்_
_சக்தி விகடனும்,_
_நாணயம் விகடனும்_
_வாங்க வைக்கிறதா??._
~ *÷÷÷÷* ~
_பல் விளக்க,_
_சேவிங் செய்ய,_
_குளிக்க_
_வழக்கத்தை விட_
_அதிக நேரம் ஆகிறதா?_
~ *÷÷÷÷* ~
_பிள்ளைகளின் ஆசை,_
_சோம்பல் மீதான_ _கோபம்_
_வடிந்து_
_``இப்போ அனுபவிக்காட்டி_
_எப்போ, ……_
_போய்ட்டு போகுது ``_
_என்ற எண்ணம் வருகிறதா??._
~ *÷÷÷÷* ~
_அலுவலகத்தில்_
_சனி,ஞாயிறு அன்று_
_நண்பர்கள்_
_ஏதாவது அவுட்டிங்_ _பிளான்_
_செய்தால்_
_தகுந்த காரணமின்றி_
_ஜகா வாங்க_ _வைக்கிறதா??._
~ *÷÷÷÷* ~
_சாலை கடக்க_
_பயப்படத் தொடங்கி_
_PEAK HOURS_
_அவாய்ட் பண்ணினால் என்ன_
_என்று மனைவியடம்_
_தர்க்கம் பண்ண தொடங்கி விட்டீர்களா??_
~ *÷÷÷÷* ~
_பேருந்து வழக்கமாக_
_வரும் நேரத்திற்கு_
_ஒரு நிமிடம் தாமதமாய் போய்_ _ஓடிச்சென்று ஏறுவது நின்று,_
_ஐந்து நிமிடம் முன்னரே_
_பஸ்ஸ்டாண்டில் காக்க முடிகிறதா??_
~ *÷÷÷÷* ~
_என்னால் எல்லாம் முடியும்,_
_யார் தயவும் தேவையில்லை_
_என்ற எண்ணம் போய்„_
_உலக மக்கள்_ _அனைவரின்_
_கூட்டு உழைப்பால்_ _தான்_
_நமக்கு இந்த_ _வாழ்க்கை_
_சாத்தியமாயிற்று என்ற எண்ணம்_
_வருகிறதா??_
~ *÷÷÷÷* ~
_அப்ப நீங்க_
*"UNCLE"* / *AUNTY*
_ஆகிவிட்டீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இவைதான்…!_
- சுஜாதா.
நாஞ்சில் நாடன்
எந்த கூர்க்காவையும் கடுகடுத்த முகத்துடன் நான் கண்டதில்லை. முகம் ஏறிட்டுப் பாத்த உடன் மலரும் சிரிப்பு. 'உன் ஆதரவில் என் வாழ்க்கை' என்பதுபோல்.
-நாஞ்சில்நாடன்
அரூபி
மலை சுமந்து திரிபவரின் பாதங்களை கிழிக்கும் நெருஞ்சிமுள்ளாய்..
நிலைதடுமாற வைக்கும்
சிறுவிஷங்கள் வழியெங்கும்.
-அரூபி
யாத்திரி
நிகழ்ந்தாக வேண்டிய சண்டை தாமதமாக தாமதமாக பெண் தனது பக்க நியாய வாதங்களை யோசித்து யோசித்துச் செம்மைப் படுத்திக்கொண்டே இருப்பாள்.
என்ன காரணத்திற்கு சண்டை என்பதையே மறந்து போயிருப்பான் ஆண்.
-யாத்திரி
14/12/2018
கல்யாண்ஜி
முன் எப்போதுமில்லாத
நெருக்கடியின்
துண்டுப் பிரசுரம் போல
உள்ளங்கை வியர்வைக்குள்
திணிக்கப்பட்ட
டவுன்பஸ் டிக்கெட்டின்
கசங்கலைப் பார்த்ததும்
கஷ்டமாக இருந்தது.
என்ன செய்வது,
இறங்கும்வரை
வைத்திருப்பதை தவிர?
-கல்யாண்ஜி
வாலி
வேதாரண்யத்தில் இளம் ஆசிரியை ஒருவர் வேன் விபத்தில் குழந்தைகளை காப்பாற்றும்போது இறந்துபோனார்.அதற்கு வாலி எழுதியது..
"முழுகாமலிருந்தால் ஒரு பிள்ளைக்கு தாயாகி இருப்பாய்..
முழுகிவிட்டதால் நூறு பிள்ளைக்கு தாயானாய் " என்று
நாணல்காடன்
நிமிர்வு
எப்போதாவது
ஒற்றடைக் குச்சியைக்
கையில் கொடுத்து
அப்பாவைத் தலை நிமிரச் செய்யும்
அம்மா
எப்போதும்
குனிந்தே இருக்கிறாள்
விளக்குமாற்றோடு!
-நாணல்காடன்
சுபவீ
விரிக்கிற போது நீர்த்துப்போகாமலும்.
சுருக்குகிறபோது சிதைந்து போகாமலும் பார்த்துக்கொள்கிற ஆற்றல்தான், எழுத்திலும் பேச்சிலும் வேண்டும்
-சுபவீ
கவியரசு
எதையாவது ரொம்ப ஆசைப்படும்போது அதை இப்போது வைத்திருக்கிறவர்
சந்தோஷமாகத்தான் இருக்கிறாரா
என்று நிச்சயப்படுத்திக்
கொள்ளுங்கள்!
-கவியரசு.
12/12/2018
லஷ்மி மணிவண்ணன்
வார்த்தைகள்
அப்படியப்படியே முளைக்கின்றன
பொய் சொன்னால் பொய்யாக
மெய் சொன்னால் மெய்யாக...
-லக்ஷ்மி மணிவண்ணன்
ராஜூமுருகன்
தேடித்தேடி வார்த்தைகளும் அர்த்தங்களும்
தீர்ந்துவிட்ட பிறகு கிடைக்கிற மெளனம் எவ்வளவு அழகானது
-ராஜூமுருகன்
ஜெயகாந்தன்
நம்மிடமுள்ள மாபெரும் தீயகுணம்,
நாம் எதையுமே கோயிலாக்கி
தெய்வமாக்கிவிடுவது..
எனவே நாம் வழிபடுவதில் சமர்த்தர்கள்,வளர்வதில் இல்லை
-ஜெயகாந்தன்
ஜெயமோகன்
பொதுமக்களுக்கு அறிவாளிகள் மீது பயம். தங்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைக் கூறுகிறான் என்ற பயம். தங்களைவிட வித்தியாசமானவனாக இருக்கிறான் என்ற பயம். சில சமயம் தாழ்வுணர்ச்சியாகவும், சில சமயம் சந்தேகமாகவும், சில சமயம் ஏளனமாகவும், சில சமயம் மரியாதையாகவும் வெளிப்படுவது இந்த பயம்தான்.
-ஜெயமோகன்
(பின் தொடரும் நிழலின் குரல்)
ஓஷோ
வாழ்வின் சிறிய தருணங்களையும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்..
ஏனெனில்..
தவறவிடப்பட்ட பேரின்பமாக அவை நாளை தெரியக்கூடும்..
- ஓஷோ
08/12/2018
வெற்றி
பேருந்து பயணங்களில்
அலைபேசியை மட்டும் பார்த்துக் கொண்டு வருபவர்களைவிட
ஏதோ ஒரு புத்தகம் படித்துக்கொண்டு வருபவர் நமது மனதிற்கு நெருக்கமாகிவிடுகிறார்...
_வெற்றி.
07/12/2018
எஸ்.ரா
பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து ஒருமடங்கு தருவதற்கு முன் வரவில்லை. வெயிலும் நெருக்கடியும் தாங்கமுடியாமல் குழுந்தை அழுகிறது. அதன் குரல் எவர் செவியையும் தாக்கவில்லை செல்பேசிகளில் உரையாடிய படியும், தினசரி பேப்பர்களை வாசித்தபடியும் மக்கள் இயல்பாக பயணம் செய்கிறார்கள். குழுந்தையின் கிராமத்து தாய் தண்ணீரை சுமந்து வர மறந்து போனவளாக விழிக்கிறாள். குரல் சோர்ந்த குழுந்தை அழுகையை நிறுத்தி விம்மிக் கொண்டு மட்டும் இருந்தது.
குடி தண்ணீரை விலைக்கு வாங்கி பாதுகாப்பாக அடுத்தவர் அருந்தி விடாமல் கொண்டு செல்லும் இந்த அரிய மனிதர்களோடுதான் சேர்ந்து வசித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தக் குற்றவுணர்வுதான் என்னை எழுதச் செய்கிறது. என்னை சுற்றிய உலகம் ஆயிரக்கணக்கான மனிதர்களை அவர்களின் அடையாளத்தை அழித்து கழிப்பறை புழுக்கள் போல அலைந்து திரிய விட்டிருக்கிறது.
பிழைப்பிற்காக வந்தேறியவர்கள் தங்கள் அவமானங்களையும், அவமதிப்புகளையும் தாங்கிக் கொண்டு கவிழ்ந்த தலையோடு ஏதாவது செய்து வாழ்ந்துவிட முடியும் என்று முட்டிமோதுகிறார்கள்.
-எஸ்.ராமகிருஷ்ணன்
நகுலன்
இது நல்லது-இதுவே நல்லது என்று ஒன்றைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் போதே, இது நல்லதல்ல-இது மோசம் என்ற எண்ணமும் வந்துவிடுகிறது
-நகுலன்
05/12/2018
வெற்றி.
விலகிவிடுவாய்
என்ற உயிரின்வலியை
மீண்டும் ஒருமுறை
உன்னிடமிருந்து
எதிர்கொள்ளும்போது
மரணித்திருப்பேன்...
_வெற்றி.
04/12/2018
அ.வெண்ணிலா.
ஒவ்வொரு இரவுகள் முடிந்து
வீடு திரும்பும் வேளையில்
நான் இழந்தது
ஒன்றுமில்லையென
நிரூபிக்க வேண்டியிருப்பதும்
நிரூபணத்தை
நீ ஏற்றுக் கொள்வதும்
நம் வழக்கங்களாய் இருப்பதையே
'வாழ்தல்' என்கிறார்கள்.
-அ.வெண்ணிலா
கலீல் ஜிப்ரான்
நம்மிடம் இருக்கும்
உண்மையான இயல்பு
அமைதியாய் இருக்கும்!
நம்மால் முயன்று
அடையப்பட்ட ஒன்று ...
வளவளவெனப்
பேசிக் கொண்டிருக்கும்!
- கலீல் ஜிப்ரான்
அ.வெண்ணிலா
எட்டாம் வகுப்பு படிக்கையிலேயே
சுமதிக்குக் கல்யாணம் நடந்துடுச்சு
படித்துக்கொண்டே
கோவிலில் குறி சொன்ன
பச்சையம்மா அக்காவுக்கு
பத்தாம் வகுப்பிலேயே கல்யாணம்
இறுதி வகுப்பு முடிந்து
மேல்படிப்புக்குப் போனதே
நாங்க நாலஞ்சி பேர் தான்
அப்பவே சுமதியோட பையன்
எல்.கே. ஜி யில் சேர்ந்துட்டான்
வேலைக்குப் போயும்
இன்னும் ஏன் இப்படியே
பார்வையிலேயே கழுத்தைத்
துழாவுகிறார்கள் தோழிகள்
எனக்கும் ஆகிபோகலாம்
இன்னும் சீக்கிரத்தில்
கணக்குத் தீர்த்துக்
கடந்து போகும் வாழ்க்கை
அடுத்த சந்திப்பில்
அவரவர் முகங்களை
அவரவர் குழந்தைகளில்
தேடிக்கொண்டிருப்போம்.
-அ.வெண்ணிலா
மகுடேஸ்வரன்
டெல்டா என்பதற்குரிய தமிழ்ச்சொல், கழிமுகம் என்பது. ஆறு கடலில் சேர்ந்து கலக்குமிடத்தையொட்டிய நிலப்பகுதிக்குக் 'கழிமுகம்' என்று பெயர். 'கடைமடை' என்றும் சொல்லலாம்.
-மகுடேசுவரன்
யாத்திரி
உனக்கு முன்னும் எனக்கொரு வாழ்விருந்தது
உனக்குப் பின்னும் இருக்கத்தான் செய்யும்
ஆனால் எதற்கு
என்ற கேள்வியோடு
-யாத்திரி
03/12/2018
ஜே.கிருஷ்ணமூர்த்தி
விழிப்புணர்வின் மகத்துவம் பற்றி நான்கு பேர் பேசிக் கொண்டிருந்தனர்.,அவர்கள் வாகனம் ஓர் ஆட்டின் மீது ஏறியதை அறியாமலேயே
-ஜே.கிருஷ்ணமூர்த்தி
மகுடேஸ்வரன்
நீயில்லாவிடில் இன்னொருத்தி
அந்த இன்னொருத்தி
உன்னொருத்தி போலிருந்தால் போதும்!
-மகுடேஸ்வரன்
நா.முத்துக்குமார்
எப்போது கடற்கரைக்குச்
சென்றாலும் குறுப்பிட்ட
தூரத்துக்கு மேல்
சென்றதே இல்லை...
அலைகளிடம் பயம் இல்லை
பயம் அப்பாவிடம்தான்..!”
-நா. முத்துக்குமார்.
30/11/2018
26/11/2018
அறிஞர் அண்ணா
*"தமிழர்கள் ஏன் இந்துக்கள் இல்லை"*
-------------------------------------------
*- அறிஞர் அண்ணா -*
-------------------------------------------
ஆப்ரிக்கா நாட்டிலே ஒரு விதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் கழுத்திலே மண்டை ஓடுகளை மணி ஆரமாகப் போட்டுகொண்டு இருப்பார்கள். மாடு கன்றுகளைக் கண்டால் மண்டியிட்டு தொழுவார்கள். கூடப் பிறந்தவர்களைக் கொண்டு சாமிக்கு படைப்பார்கள். கூத்தாடுவார்கள், குடிப்பார்கள் என்று கூறிவிட்டு அந்த இனத்தைச் சேர்ந்தவர்தாம் நீங்கள் என்று நம்மிடமாகட்டும், உங்களிடமாகட்டும் ஓர் ஆப்ரிக்க வாசியோ அல்லது இங்குள்ள வேறு எவரோ சொன்னால், சொல்பவரின் பற்கள் கீழே உதிர்ந்து விழுமா விழாதா?
நாலுதலைச் சாமிகள், மூன்றுகண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமிகள், ஆறுதலைச் சாமி, யானை முகச்சாமி, ஆளிவாய்ச் சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், தலைமீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷிபத்தினிகளிடம் ரஸமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவனைகளிலே உள்ளனவே ! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவர்களை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழ வேண்டுமே. இந்த சேதியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களை விடக் கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கன்றாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு எப்படி மனம் துணியும்? ஆகவே தான், நாம் இந்து அல்ல என்று கூறுகிறோம்.
நமக்கு நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! ஊன் வேண்டாத சாமி! ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல் அலங்காராதிகள், அப்பம், பாயாசம், அக்காரவடிசில் கேட்காத சாமி! அங்கே, இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை, உண்டியல் எனக் கூறி, அக்கிரகாரத்தை கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும். நம்மிடமிருந்து “தியாகத்தை” பெறட்டும். அருளைத் தரட்டும். நம்மிடமிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்கு தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிபடுத்தவே நாம் நம்மை இந்து அல்ல என்று கூறுகிறோம்.
நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாலு ஜாதியிலே நாம் கீழ்சாதி என்று கொடுமை இன்றி “நாமார்க்குங் குடியல்லோம்” என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தினால் தான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிகொள்கிறோம்.
நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது. செறியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூடமதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படி தான் மனம் இடந்தரும்? எப்படி தான் துணியும்?
இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கறை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசிப் பார்த்த பிறகு யாருக்கு தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதை விட்டு, மான வழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீல்வாரா? தாம் திராவிடர் எனத் தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமை ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத் திராவிடர் என்று ஓர் உணர்ச்சி வீறிட்டு எழபெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!
23/11/2018
சல்மா
*கோணம்*
*-சல்மா.*
💥நான்
தலைகீழாகத் தலைவாரிக்
கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை
தலைகீழாக புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வௌவால்....
லதா
பழகிய பின் எத்தனை பேசினாலும் அறிமுக நாட்களில் தயங்கித் தயங்கிப் பேசிய அழகு அதில் இருப்பதே இல்லை .
-லதா
22/11/2018
படித்தது
இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் உள்ள
வேறுபாடு ஏளனத்திற்கும் ஏக்கத்திற்கும்
உள்ள
வேறுபாடு தான்.
சு.வெ
வெல்ல நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும் தான் போரை விரும்புகிறார்கள்.
வாழ நினைப்பவர்கள்
வேறு வழியின்றி
அந்தப் போரை எதிர்கொள்கின்றனர்
-சு.வெங்கடேசன்
யுகபாரதி
பிரியத்தை விட
பிணக்குற்று பிரிதல்
கொடுமை
சந்திக்க நேர்கையில்
அழக்கூட தோணாமல்
அவரவர் குழந்தைகளை
பொய்யாய்க் கொஞ்சிட
-யுகபாரதி
18/11/2018
யாத்திரி
பாடல் கேட்டுக்கொண்டு, படம் பார்த்துக்கொண்டு, தூங்கிக்கொண்டு, தூரங்களை கடக்கிறார்கள்... பயணம் என்பது வாகனத்திற்கு வெளியே உள்ளது.
-யாத்திரி
17/11/2018
அறிவுமதி
போகிற இடத்தில்
என்னைவிட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்துவிடுவானோ
என்கிற பயம்
நல்லவேளை
நட்பிற்கு இல்லை
-அறிவுமதி
படித்தது
நாம் பொய்களோடு வாழ்க்கைப்பட்டு,.அவற்றோடு வாழ கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறோம்.அதனால்தான் நாம் உண்மைகளை கேள்விப்படும்போது திடுக்கிடுகிறோம்
-P
வே.நி.சூர்யா
புரிந்து விடு என ஒரு கவிதையை மிரட்ட முடியாது. ஒரு கவிதைக்கு புரியவும் புரியாமலிருக்கவும் முழு உரிமை இருக்கிறது. கிட்டதட்ட அது நம்மை போலத்தான்.
-வே.நி.சூர்யா
15/11/2018
முகுந்த் நாகராஜன்
இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்.
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா.
வீடு இங்கேதான் இருக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு காரணமா?
- முகுந்த் நாகராஜன்
14/11/2018
இளம்பிறை
“பச்சை விறகுகளை
கழுத்து நடுங்க கட்டிச்சுமந்த
வயிற்றுப் பிள்ளைக்காரி
வீடு வந்து சேர்ந்ததைப் போல்
பதற்றமற்ற இந் நிலைக்கு
இங்கு வந்து சேர்வதற்குள்
நீங்கள்
உருவாக்கிப் பேசிக்கொண்டிருந்த
எத்தனை என் கதைகளை
கடக்கும்படி ஆயிற்று நான்.”
- இளம்பிறை.