கடவுள்களின் மீது ப்ரியங்கள் அதிகமாக
இருப்பது இல்லை...
எப்பவாவது
ப்ரியங்கள்
வரும்போது
அனிச்சையாக
உனக்கும்
சேர்த்து
வேண்டிவிடுகிறேன்..
_வெற்றி.
24/04/2018
வெற்றி
வெற்றி
கடவுள்களின் மீது ப்ரியங்கள் அதிகமாக
இருப்பது இல்லை...
எப்பவாவது
ப்ரியங்கள்
வரும்போது
அனிச்சையாக
உனக்கும்
சேர்த்து
வேண்டிவிடுகிறேன்..
_வெற்றி.
புத்தகம்
*ஏப்.23- இன்று உலகப் புத்தக தினம்...*
📓📔📕📗📘📙📓📔📕📗📘
ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா
கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்
உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்
சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்
உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்
பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்
உலக புத்தக தின வாழ்த்துகள் நண்பர்களே..
ஜெயகாந்தன்
படிப்பு என்பதே வயிற்றுச்சோற்றுக்கு வழியில்லாதவர்கள் மாதச்சம்பளத்துக்கு
வழி தேடிக்கொள்ளும் முயற்ச்
-ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்
ஏப்:24 ’எழுத்து சிங்கம்’ #ஜெயகாந்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு...
நன்றி:விகடன்
காலக் குடுவையில் தமிழ்ச் சமூகத்தைக் குலுக்கிப் போட்ட எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தனின் பெர்சனல் பக்கங்கள் இதோ...
ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர், உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்!
சிறுகதைகள் 200-க்கு மேல், குறுநாவல்கள் 40, நாவல்கள் 15, கட்டுரைகள் 500, வாழ்க்கைச் சரிதத்தை ஆன்மிக, அரசியல், கலையுலக அனுபவங்களாகப் பிரித்து மூன்று புத்தகங்கள் என எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன்!
சுருதிசுத்தமாக வீணை வாசிக்கத் தெரியும். இசை படித்தவர். நல்ல சினிமா பாடல்களாக இருந்தால் சுருதி கூட்டி குரல் இசைய, லேசாக விரல்கள் தாளமிட, இது இந்த ராகம் என நண்பர்களிடம் சொல்வார்!
'இந்த உலகம் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன். இந்த உலகத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், ஆச்சர்யம் மட்டுமல்ல; வருத்தமும் அடைவேன்' என்று ஜே.கே-விடம் சொன்னாராம் எஸ்.எஸ்.வாசன். நண்பர்களிடம் இதைச் சொல்லி, தனக்கு உத்வேகம் கிடைத்த விதத்தைச் சொல்லிப் பெருமைப்படுவார்!
காமராசரின் மீது மிகுந்த மரியாதையும் அன்பும்கொண்டவர். முதல்வராக இருந்தும், தனது தாய்க்கு வசதிகள் செய்து தராத அவரது நேர்மையைச் சொல்லும்போதெல்லாம் தழுதழுப்பார். காமராஜரை காங்கிரஸில் இருந்த கம்யூனிஸ்ட் எனக் குறிப்பிடுவார்!
ஜெயகாந்தனின் சபையில் பெரும்பாலும் அவரே பேசுவார். மற்றவர்கள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். கேள்வியும் அவரிடம் இருந்தே வரும். சிறிது நேரம் மௌனம் காப்பார். பிறகு பதிலும் அவரிடம் இருந்தே வரும்!
ஜெயகாந்தனின் சபையில் அடிக்கடி ஆஜரானவர்கள், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, சந்திரபாபு, பீம்சிங், எம்.பி.சீனிவாசன், கண்ணதாசன், இளையராஜா, பார்த்திபன், லெனின் ஆகியோர் அடக்கம்!
ராஜராஜன் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, சாகித்ய அகாடமி, ஞானபீடம், நேரு விருது (சோவியத் நாடு கொடுத்தது) பத்மபூஷண் இவை அனைத்தும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் ஜே.கே-தான்!
1977 சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியில் சிங்கம் சின்னத்தில் ஜெயகாந்தன் போட்டியிட்டார். 481 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 'சிங்கத்துக்குப் பிடித்த உணவு நம்ம டெபாசிட் போலும்' என நகைச்சுவையாக அதை எடுத்துக்கொண்டார்!
கவிஞர் பாரதிதாசன் ஜெயகாந்தனின் மேல் பிரியம்கொண்டவர். திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டுடியோவில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இப்போதும் ஜே.கே-யின் வீட்டில் இருக்கிறது!
'என் வாசகனுக்குப் பிடித்தவிதமாக எல்லாம் எழுத முடியாது. நான் எழுதுவதை விரும்புகிறவனே எனது வாசகன்' எனச் சொல்வார். எழுதாமல் இருப்பதைப் பொருட்படுத்துவதில்லை. கேட்டால், 'நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க' என்பார். இன்னும் கேட்டால், 'உங்க அம்மாதான் உன்னைப் பெத்துப்போட்டா. அதுக்காக, இன்னும் பெத்துக் குடுன்னு கேட்டுட்டே இருப்பியா?' என்பார் கோபமாக!
பயணங்கள் என்றாலே நண்பர்களோடுதான். கிண்டலும் நகைச்சுவையும் கரை புரண்டோடும். யாரையும் புண்படுத்துவதாக அந்த நகைச்சுவை அமையாது!
கமல் தன் ஒவ்வொரு திரைப்படத்தையும் ஜெயகாந்தனுக்கு தனியாகப் போட்டுக் காண்பித்து, அபிப்பிராயத்தைக் கேட்டு அறிந்துகொள்வார்!
பாரதியார் பாடல்கள், திருக்குறள், சித்தர் பாடல்கள் எதுவாக இருந்தாலும் அதனை வெறுமனே சொல்ல மாட்டார் ஜே.கே. ஒரு சந்தமும், சுதியும் சேர்ந்து வர அர்த்தங்கள் இயல்பாக வெளிப்படும்!
மிகுந்த ஞாபகசக்திகொண்டவர். தான் படித்த இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதிலாகட்டும், தனது பொருட் களைக் கவனமாக வைத்திருப்பதிலாகட்டும் மறதியைப் பார்க்கவே முடியாது!
ஜெயகாந்தனின் சிறு வயதுத் தோழர் கி.வீரமணி.
ஜெயகாந்தனின் படைப்புக்களான 'புதுச் செருப்பு கடிக்கும்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'காவல் தெய்வம்', 'உன்னைப்போல் ஒருவன்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'கருணையினால் அல்ல', 'யாருக்காக அழுதான்' ஆகியவை திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன!
காலையில் சிறிது நேரம் யோகாசனம். அதற்குப் பிறகுதான் உணவு. எந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் பச்சைத் தண்ணீரில் குளித்துவிடுவார் ஜே.கே!
ஜே.கே-யின் பிறந்த நாள் ஏப்ரல் 24 - 1934. ஒவ்வொரு வருடமும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முதல் நாளில் இருந்தே நண்பர்கள் குவிய ஆரம்பித்துவிடுவார்கள். சபை களை கட்டி பாட்டும், சிரிப்பும், பேச்சுமாகக் கலகலக்கும். அன்றைக்கு எல்லோருக்கும் உணவு அவர் வீட்டில் பரிமாறுவது வழக்கம்
ஆசையுடன் நாய் வளர்த்தார். 'திப்பு' எனச் செல்லமாக அழைப் பார். 'திப்பு' இறந்த துயரத்துக்குப் பிறகு பிராணிகள் வளர்ப்பதை விட்டுவிட்டார்!
'எங்களுக்குள் இருப்பது முரண்பாடு இல்லை; வேறுபாடு. முரண்பாடு என்பது தண்ணீரும் எண்ணெய்யும் மாதிரி... சேராது. வேறுபாடு தண்ணீரும் பாலும் போல... சேர்ந்துவிடும்' என்று கலைஞர் தன்னைப்பற்றி சொன்னதை, ரசித்து ரசித்துக் குறிப்பிடுவார் ஜெயகாந்தன்!
'நாளை சந்திப்போம்...' என்பது மாதிரியான வாக்குறுதிகள் கொடுத்தால், கூடவே 'இன்ஷா அல்லா' என்று சொல்லிதான் முடிப்பார்!
ஒரு கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது "இன்றைக்கு நீங்கள் விஸ்வரூபம் காட்டவில்லையே, ஏன்?" என்றார் ஒரு வாசகர். உடனே "விஸ்வரூபம் என்பது காட்டுவது அல்ல; காண்பது" என்றார் ஜெயகாந்தன்.
'குப் குப்' என்று புகைவிட்டு... 'கூ கூ' என்று கூச்சலிட்டு... 'வருகுது வருகுது ரயில் வண்டி... வேகமாக வருகுது... புகை வண்டி.'-அவர் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாட்டுக் களில் இதுவும் ஒன்று!
எந்தப் பிரச்னை என்றாலும் அது சரியாகும் என்று நம்புபவர். எல்லாவற்றுக்கும் தீர்வுகள் உண்டு என்பதில் உறுதிகொண்டவர். ஒருபோதும் 'இது முடியாது' என்றோ, 'அவ்வளவுதான்' என்றோ அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வராது!
- பொக்கிஷம் ஆனந்த விகடன்
வண்ணதாசன்
வண்ணதாசன் எனும் இதயம் கொய்பவனின் எழுத்துக்கள் ....
____
என்னை உத்தேசித்து தானே
சாணை பிடித்தாய்.
அப்புறம் என்ன?
பாய்ச்சிவிட வேண்டியதுதானே
அடி வயிற்றில்.
***
அத்தனை நெருக்கமான தென்னந்தோப்பு.
உச்சியிலிருந்து கழன்று விழுகிறது
ஒரே ஒரு உலர்ந்த தோகை
தூரத்துத் தொடர்மலை ஒரு நொடி திடுக்கிட,
எதிர்த் தென்னையில் ஏறுகிறது அணில்.
***
அல்லிக் குளத்தைத் தாமரைக் குளம் என்று
யாரும் சொன்னால் தப்பே இல்லை.
அவர்களுக்குள் இருக்கும் தாமரைக் குளத்தை
நமக்கு அப்படித்தானே காட்ட முடியும்.
***
இங்கும் அங்கும் நகர்ந்து
படங்கள் எடுக்கிறவர் புறங்கையில்
உதிர்ந்த புளிய இலை ஒன்று அப்புகிறது.
இதுவரை எடுத்த படங்களில் விடவும்
இனிமேல் படங்களில் அழகாய் இருப்பேன்.
***
சலவைக் கடையில் இருந்து
நடந்து வரும் வழி அது.
ரொம்பப் பக்கத்தில் தெரிந்தது.
நேற்று அல்லது நாளைக்கு
இடைப்பட்ட முழுநிலா.
வீட்டுக்குப் பதிலாக இப்போது
நிலாவிடம் போய்க்கொண்டிருக்கிறேன்.
****
அழகான சிறு கல் அது.
நழுவி விழுந்தது
பார்த்து ரசித்தபடி இருக்கையில்.
தேடிக் கையில் எடுத்ததும்
முதலில் பார்த்தது எந்தப் பக்கத்தை
என்று தெரியவில்லை.
தெரிந்தால் பார்த்துவிடுவேன்
கல்லின் எல்லாப் பக்கத்தையும்.
****
பித்த வெடிப்புப் பாதங்கள் உள்ளவரின் விரல்கள் பற்றி
எந்தக் களங்கமும் படியாத பிஞ்சுப் பாதங்கள்
நடந்துபோய்க்கொண்டு இருக்கிறது இந்தச் சனிக்கிழமை மேல்.
கண்ணுக்குத் தெரியாத அதன் தத்தக்காச் சுவடுகளில் நடக்கமுயலும் ஒருவனின்
எதிரில்தான் நீங்கள் வந்துகொண்டு இருக்கிறீர்கள்.
****
பார்க்காத போது பெய்த மழையில்
உடைந்த சிலேட் நிறத்தில் தண்டபாணி தெரு.
உலரும் ஈரத் தீற்றலுடன் நகரும் ஏழு மணியின் பட்டைத் தூரிகை
விட்டுவைத்திருக்கும் வாதாம் இலையளவு மழைத் தேங்கல்.
இந்த நாளின் தலைகீழ் பிம்பத்தைப் பார்க்கக்குனிகிறவன்
மாநகரத்திற்கு வெளியே இருந்து வந்திருப்பவன்.
கூலிப்படை போல வெட்டிச் சாய்த்துவிட்டுப் போகும் ஆட்டோச் சக்கரங்களினடியில்
நசுங்கிக் கிடக்கிறது நேற்றெனும் மற்றொரு நாள்.
****
__ வண்ணதாசன்
சிற்பி
மனம் ஒரு பாத்திரம்
மனம் ஒரு பாத்திரம்
ஆனால் விசித்திர பாத்திரம்
ஆசைகளை அதில் போட்டால்
அடிப்புறம் கழன்று கொள்ளும்
ஒரு நாளும் நிறையாது
துயரங்களைப் போட்டால்
பாத்திரம் தாங்காமல்
உடைந்து போகும்
காதலைப் போட்டால்
பாத்திரம் சிறகு முளைத்துப்
பறக்கத் தொடங்கும்
பொறாமையைப் போட்டால்
பாத்திரம் ஆத்திரமாகி
மேல் மூடி காணாமல் போகும்
...
அது நிறைவாய் இருக்க...
காலியாய் வைத்திடு
-சிற்பி
அப்துல் ரகுமான்
மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"
-அப்துல்ரகுமான்
யாத்திரி
தோழி எப்போதும் தோழிதான் அவளைக் காதலிக்க முடியவே முடியாது. முடியும் என்றால் காதலை அடைய நட்பை ஒரு வழியாகப் பயன்படுத்துகின்றிர்கள். அல்லது உங்களுக்குள் இருந்த ஈர்ப்பை நட்பென்று அடையாளப்படுத்துகின்றிர்கள்.
கண்டதும் காதல் போல் கண்டதும் நட்பு சாத்தியமே இல்லை.
பட்டும் படாத பழக்கத்தில் துவங்கி அதிக முக்கியத்துவம் வழங்கப்படாமல் இருவரும் இருவரைப் பற்றியும் அதிகமாகக் கருத்தில் கொள்ளாமல் அதன்போக்கில் அதுவாகவே நிகழும் ஒன்று.
நட்பு தன்னை பிரகடனப்படுத்தவே செய்யாது.
கண்டறியவும் முடியாது. தேவையும்இல்லை.
காலம் தந்த பிணைப்பிற்குள் வேறுபட்ட கருத்துகளோடு ஒருமித்துக் கிடக்கும் போது, உங்கள் best friend யாரென்று கேட்டால். முதலில் நினைவுக்கு வந்த இந்த நாய எதுக்கு சொல்லிக்கிட்டு வேற யாரையாவது சொல்லலாம் என்று மனம் யோசிக்கும். அந்த நாய்க்கும் நமக்கும் இருக்கக்கூடியதுதான் நட்பு. முக்கியத்துவம் வழங்காத எதிர்பார்க்காத நிர்பந்திக்காத சுதந்திரம் கிடைக்கும் இடம். அந்த நாயிடம் மட்டும்தான்.
ஓரமா போ சனியனே என்று அவனும்
இடிக்காம வாடா எரும என்று அவளும்
சாலையில் விளையாடி
கடைசியில் கைகள் கோர்த்து தோள்சேர
நட்பினைக் கொண்டாடிச் செல்வார்கள்.
தூரமாய் இருந்து பார்க்கும் கண்களுக்குத்தான் குழப்பம் எல்லாம். அவர்கள் இருவரையும் புரிவதற்கு நட்பிற்குள் இருந்தாலொழிய பிறவழிகளில்லை.
காலஓட்டத்தில் வாழ்க்கைப் பாதை மாறி இவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்தாலும் பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு முன் அவர்களிடம் ஒரு கேள்வி இருக்கும்,
''நீ இன்னும் சாவலியா?''
அவ்ளோதான் சார் நட்பு
-யாத்திரி
21/04/2018
காடன்
வேட்டைப் பொழுதுகள்...!
------------------------------------
மாமிசப் பட்சியின் குரூர கண் கொண்ட
தோல்வி
தலை சிலுப்பி தொண்டைக்குழி விரிந்து சுருங்க
லாவகமாய் விழுங்கிற்று இந்நாளையும்
விடியலில் கிளம்பிய முயற்சியின்
திரள் பறவைகளை ஒன்றுவிடாமல் வீழ்த்தியதில்
தேர்ந்த வேடர்களாயின முப்பொழுதும்
என் கதவை நானே திறக்க அச்சப்படுகையில்
எவருக்கு ஏதுவாகும் அதன் தாழ்
வலையின் பிளிறல்
தூண்டிலின் கர்ஜனை
தோட்டாக்களின் சப்த சிதறல்
இதென்ன வன வாழ்வா....?
ஆங்கோர் தேடலின் நிலை ,தனித்த
ஓர் காகத்தின் நெடுநேரக் கரைதலாய்
நனையாத வேர்களின் மீதான வருத்தம்
விதைகளுக்கில்லை
நாளை என்பது நாளைய பாடு
இன்றேனும்
கசியும் இவ்விரவை தூக்கம்
கவனமாய் எதிர்கொண்டால் தேவலை..!
-காடன்-
யாத்திரி
அறிந்திராத
புதிய எண்ணின் அழைப்பு
அலைபேசியின் அந்தப்புறம்
மிகப்பழகிய மௌனம்
நல்லாருக்கியா? என்கிறேன்
'ம்ம்ம்' என்று அழைப்பினைத் துண்டிக்கிறாள்.
அவளுக்கு ஏதோ சொல்ல வேண்டியிருந்தது,
எனக்கு கேட்க வேண்டியிருந்தது,
காலத்திற்கு தவிர்க்கவேண்டி.
-யாத்திரி
20/04/2018
மனுஷ்யபுத்திரன்
ஒரு கவிதை எத்தனைப் படித்தாலும் உங்களுக்குப் புரியவில்லையென்றால்,
விட்டுவிடுங்கள். கவலைப்படவேண்டாம்.ஏனெனில், அது, உங்களுக்காக, எழுதப்பட்ட கவிதை அல்ல
-மனுஷ்யபுத்திரன்
18/04/2018
கலா ப்ரியா
உறவுகள்...
“அழுது தொலைச்சிராதள்ளா
மானம் போயிரும்.”
நொடிக்கொருதரம்
மகளை சத்தம் வெளியே வராமல்
அடக்கிக்கொண்டு
தானும் அழுகையை
ஜெயித்துக்கொண்டு
செத்துப்போன
சிசுவைத்துணியில்
சுற்றி
கழுத்து தொங்கிவிடாமல்
கவனமாக
வற்றிப்போன
மார்போடு அணைத்துக்கொண்டு
ஜெனரல் ஆஸ்பத்திரி
வாசலில்
டவுன் பஸ்ஸுக்காய்
அம்மாவும்
அப்பாவும்..!
- கலாப்ரியா.
எஸ் ரா
மனிதனைத் தவிர, வேறு எந்த
விலங்கும் தனது கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க
விரும்புவதே இல்லை. மனிதர்கள் ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு செயலிலும் கடந்த காலத்தைத்
திரும்பிப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு
போதும் திரும்பிப் போக முடியாத கடந்த காலம் ஏன்
மனிதர்களைத் துரத்திக்கொண்டே இருக்கிறது?
நாட்கள் கடந்துபோய்விட்டன. நிகழ்வுகள் கடந்து
போய்விட்டன. ஆனால், அது ஏற்படுத்திய வலியும், வேதனையும் கடந்துபோவது இல்லை. வலி உறைந்துவிடுகிறது.
அதுதான் மவுனக்கின் சாரமா?
ஞானக்கூத்தனின் கவிதை ஒன்றில் 'வெள்ளைப்
பேப்பருக்கு முன்பக்கம், பின்பக்கம் என்று கிடை
யாது, எதை முதலில் பார்க்கிறோமோ, அதுவே அதன்
முன்பக்கம்' என்றொரு வரியை வாசித்திருக்கிறேன்.
மவுனத்துக்கும் முன்பக்கம், பின்பக்கம் உண்டா?
.உங்கள் பேச்சு மவுனத்தை விடச் சிறப்பாக இருக்கு
மானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மவுனமே
நல்லது என்கிறது கிரேக்க ஞானம். மவுனம் என்பது வாய்
மூடியிருப்பது மட்டுமில்லை; அதிலும் உயர்ந்த மவுனம் இன்
னொன்று உள்ளது. அது அகத்தினுள் நிகழும் மவுனம்.
வாயை மூடிக்கொண்டிருக்கும் மவுனமும் நமக்குத் தேவை.
ஆழமான அகமவுனமும் தேவை. இரண்டும் எளிதில் உரு
வாகிவிடுவதில்லை.
நம் பிரச்சினைகளுக்குக் காரணம் எங்கே பேசக் கூடாது
எனத் தெரியாமல் போனதுதான். ஞானிகள் குறைவாகப்
பேசுவதற்குக் காரணம், அவர்களுக்கு மவுனத்தின் வலிமை
புரிந்திருப்பதுதான். மவுனத்தைச் சுமையாக்கிக்கொள்பவர் களும் இருக்கிறார்கள். சக்தியாக மாற்றிக்கொள்பவர்களும்
இருக்கிறார்கள்.....
எஸ் ரா
15/04/2018
ராஜா சந்திரசேகர்
ஒரு முறை
உன்னைப் பார்த்துவிட்டுப்
போக வேண்டும் என்று
காத்திருக்கிறேன்
நீயோ
நான் போனபின்தான்
வரவேண்டும் என்று
காத்திருக்கிறாய்
-ராஜா சந்திரசேகர்
அம்பேத்கர்
திருமாவேலன்
1. இது குறைபாடுகள் உள்ள சமூகம் தான்.ஆனால் குறைபாடுகளை பாதுகாக்கும் சமூகத்தில் வாழக்கூடாது
2 நீங்கள் பலமற்றவர்கள் என்பதாலேயே ஒடுக்கப்பட்டுள்ளீர்கள்.
3 மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு பாதுகாப்பை நம்பி அழிந்துபோவதைவிட, மிகவும் அய்யத்துக்குரிய அச்சங்களை எழுப்பி வசவுகளைப் பெறுவதையே நாங்கள் விரும்புகிறோம்
4 நாம் சமூக அளவிலும் மனதளவிலும் ஒரு தேசமாக இல்லை
5 ஒருவனின் சுயநலத்தோடு அறிவு முரண்படும்போது அறிவு தோற்றுவிடுகிறது.
6 நீங்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் உங்களுக்கு நல்லது எது என்பதைச் சொல்வது என் கடமை
7 சாதி உணர்வு கொண்ட நல்லவனால் என்ன பயன்? நல்லவன் செய்த குண்டு வெடிக்காமல் இருக்குமா?
8 தான் அடைந்துள்ள உரிமையைப்
பிறரும் அடைய அனுமதிக்காத எவரும்
மக்களாட்சியில் பங்கெடுக்கக் கூடாது
9 நான் விரும்பும் அமைதி என்பது நீதியை அடிப்படையாகக் கொண்டது
10 எனது செய்தி இதுதான்:
போராட்டம். மேலும் போராட்டம்.
தியாகம். மேலும் தியாகம்.
- மாமனிதர் அம்பேத்கர்
14/04/2018
தோழி
இப்படி லூசாக இருக்கிறாளே என வருத்தப்ப்படும்போது... லூசாக இருப்பதால்தான் அவள் தோழியாக இருக்கிறாள் என்ற ஞானோதயமும் வருகிறது.
12/04/2018
கடவுள்
ஆசைகளை மட்டும்
சமமாக வழங்கிவிட்டு
படி அளக்க மட்டும்
பாத்திரத்தை வெவ்வேறாக
பயன் படுத்துவதேனோ!
அந்த பாரபட்சமிக்க
உங்கள் கடவுள்!
யாழிசை
மூழ்கியபோது
மேவிய நீருக்கும்
எழுந்தபோது
தழுவிய நீருக்கும்
இடைப்பட்ட கணங்களாக
நகர்ந்து போய்க்கொண்டிருக்கிறது
என் அமிழ்தல்.
-யாழிசை
எஸ் ரா
ஒவ்வொரு வயதும் ஒரு ரகசியத்தைப் பாதுகாக்க நினைக்கிறது.ஒளித்து வைக்கிறது.ஆனால்,இன்னொரு வயது அந்த ரகசியத்தை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது
-எஸ்.ரா
குறுந்தொகை
நான் அவளை பிரிய நேர்ந்தால்
கல் மோதி மறையும்
நீர் நுரை போல
மெல்ல மெல்ல
இல்லாமல் போவேன்
-கலல்பொரு சிறுனரையார் ( குறுந்தொகை
எஸ் ரா
பயம்,நம் நிழல் போன்றது. அது நம்மைவிட பெரிதாக இருப்பதுபோல பல நேரம் தோன்றும்.அது நிஜம் இல்லை.வெறும் மயக்கம்.அந்த எளிய உண்மையை நாம் மறந்துவிடுவதே இத்தனைக்கும் காரணம்
-எஸ்.ரா