16/06/2018

ச.மாடசாமி

*ஒவ்வொரு அவமதிப்பும் ஒரு மரணம்...*

மரணத்தை விட மோசமானது வலி என்கிறது மருத்துவம். அவமதிப்பும் அப்படித்தான். மரணத்தை விட மோசமானது.

குழலி என்று அழகாகப் பெயர் சூட்டப்பட்ட குழந்தை இப்படிக் கலங்கி அழுவதாக அவளுடைய அம்மா சொன்னார்.

"வாத்தியார் கெழவி கெழவி ன்னு சிரிப்பு காட்டி கூப்பிடுகிறார் மா.பசங்கள்ளாம் சிரிக்கிறாங்க!.எனக்கு ஏன் இந்தப்பேரு வச்சீங்க!.இந்த விசும்பலுக்குள் மரணத்தின் வாசனை இல்லையா?.ஒவ்வொரு அவமதிப்பும் ஒரு மரணம்.

கூப்பாடு போட்டு வரும் மரணங்கள் முடிவுரையாக வெளிப்பட்டு நிற்கின்றன. ஆனால் அவற்றின் முகவுரையாக வீடுகளிலும் பள்ளிகளிலும் சத்தமில்லாமல் நிகழும் மரணங்களை எப்போது நாம் வாசிக்க போகிறோம்..?.
_பேராசிரியர். ச.மாடசாமி.