28/06/2018

கல்யாண்ஜி

எல்லோரும் புழுதியைத் துடைத்துவிட்டு
உட்கார்கிறார்கள்
நான் புழுதியின்மீதே உட்காருகிறேன்

நானும் புழுதி என்பதும் ஒன்று

என் மேலும் படியட்டும் புழுதி என்பது
இன்னொன்றாக இருக்கலாம்

உலகத்தில் துடைக்க முடியாதது
எவ்வளவோ வேறு இருக்கிறது
என்னையும் புழுதியையும் தவிர!

* கல்யாண்ஜி