மீன்கள் தெறித்து விழும் சிலிர்ப்பில்
தளும்பிய உன் உடலில்
பூக்களை விலக்கி
ஒரு கை அள்ளிப் பருகுகிறேன்
விளிம்புவரை நெகிழ்ந்தோடி வந்து
உடைகின்றன
உன் வெட்கத்தின் சிற்றலைகள்
முழுதும் அருந்த இயலாத
என் முகத்தில் தெறித்தபடி
#பழநிபாரதி
(தண்ணீரில் விழுந்த வெயில்)