*தப்பித்த குரங்குகள் முக்கியமானவை...*
"வடிவமைக்கப்படாமல் தப்பித்தது எதுவோ.அதுவே உன் ஜீவன் மிக்க சாராம்சம்" என்று சிந்தனையாளர்கள் சொல்வதுண்டு.
"தப்பித்த குரங்குகள்" என்று அதை வேடிக்கையாக கல்வி உரையாடலில் நாங்கள் குறிப்பிடுவதுண்டு.
யார் கைகளும் படாமல்,யார் கைகளிலும் சிக்காமல் தப்பித்தவைதான் ஒரிஜினல். வடிவமைக்கப்பட்டதெல்லாம் ஜெராக்ஸ்தான்.
பள்ளிக்கூடம் உலகத்தின் மிகப்பெரிய நிறுவனம்.largest enterprise!
தப்பிப்பது சுலபமா?.
அசல் முகத்தை திட்டமிட்டு கரைக்கிற இடம்.
ஆசிரியர்கள் தட்டி உருட்டி காயம்போட்ட முகம்.
மத்தியவர்க்கம் ஆணாதிக்க பாடத்திட்டம் வழங்கிய முகம்.
வேலைவாய்ப்புகள் என்ற பெயரில் கார்ப்ரேட்டுகள் விரும்பிய முகம்.
என எல்லா முகங்களும் இருக்கின்றன.
சொந்த முகம் எங்கே?.எங்கே என் ஒரிஜினல் குரங்கு.?
கல்வி உரிமைச்சட்டம் போன்றவை அதட்டல் அதிகாரங்கள் மீது கேள்வி எழுப்பலாம். ஆனால் *அக்கறை* என்ற பெயரில் உலவும் *நுட்பமான அதிகாரங்கள்* எப்போதும் நிலைத்திருக்கின்றன.
வடிவமைத்தல்
மதிப்பிடுதல்
வடிகட்டுதல் எனப் பல வடிவங்களில் இருக்கின்றன நுட்பமான அதிகாரங்கள்.
எட்டாம் வகுப்பு வரை தேர்வு வைத்து வடிகட்ட முடியாமல் போகலாம். ஆர்வத்துடன் மேடையேற வந்த முகங்களில் *எண்ணெய் வடியும் கறுப்பு மூஞ்சிகளை* வடிகட்டித் துரத்துவதில் யார் குறுக்கிட முடியும்?.
வடிகட்டும் வேலையைச் செய்வோர் பலர் கறுப்பர்களாக இருப்பதும் ஒரு முரண்.
_பேராசிரியர்.ச.மாடசாமி.
(வெற்றி)