புகைப்படம்
ஆண்டுகளுக்கு முன்
எடுக்கப்பட்ட
குழுப் புகைப்படத்தின்
கல்லூரி
நினைவுகளை
மெல்ல மெல்ல
அசைபோட்டுப் பார்க்கிறேன்.
பெண்களுக்கு
முன் வரிசை தந்து...
உயரமானவர்கள்
தரையில் அமர்ந்தும்...
தாமதமாக வந்தவர்களை
ஓரத்தில் நிறுத்தியும்...
தனக்கு இடவலமாக
நண்பர்களையும்...
நெருக்கமான
பெண் தோழிக்கு பின்புறமாகவும்
நின்று எடுத்துக் கொண்ட
புகைப்படம் அது.
புகைப்படம்
உருவங்களை மட்டுமல்ல...
காலத்தையும் பதிவு செய்துவைத்திருக்கிறது.
-பா.தங்கம்.