கவிக்கோ அப்துல்ரகுமான் நினைவுதினம்
*மணி
மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"
*கொஞ்சம் கொஞ்சமாய்
இறப்தற்க்குப் பெயர் தான்
வாழ்க்கை ...
*உன் தலையை புகழால் அலங்கரி
மகுடங்களால் அலங்கரிக்காதே
ஏனென்றால்
மகுடங்கள் தலைமாறக்கூடியவை
*உன் சாவில் சாம்பலை அல்ல
நெருப்பை விட்டுச்செல்
*மனிதன் தன்
வாழ்நாளில்
செய்து முடிக்க வேண்டிய மிகப்பெரிய சாதனை
மனிதனாவதுதான்!!!
*உடல் நிழலில் அமர்ந்தாலும்
மனம் வெயிலிலேயே அலைந்து கொண்டிருக்கிறது.
*வரங்களே..
சாபங்கள் ஆகுமென்றால்
இங்கே
தவங்கள் எதற்காக...?
*உன்னை மறக்கும்போது
வாழ்கிறேன்
நினைக்கும் போது
இறந்து விடுகிறேன்
*வியாதிகளின்
மேய்ச்சல் நிலம்
முதுமை
*எழுத்துக்கள் என்பதென்ன?
அங்கீகரிக்கப்பட்ட
கிறுக்கல்கள் தாமே?
*வாழ்க்கைத் தேர்வில்
வெற்றி பெறுகிறவர்கள்
விடைகளை அறிந்தவர்கள் இல்லை
வினாக்களை அறிந்தவர்களே
*விதி
தொட்டிலைச் செய்யும்போது
பாடையையும்
செய்துவிடுகிறது
*நீ பிரிகிறாய்
கட்டடம் முடிந்ததும்
பிரிக்கப்படும் சாரம் போல
*பழமை என்பது
வயதாகிப்போன புதுமைதான்
புதுமை என்பது
மறுபிறப்பெடுத்த பழமைதான்
*மரணக் காற்றில் ஒரு விளக்கை போல் அணைந்து போகாதே!
ஒரு ஊதுவத்தியைப் போல் கொஞ்சம் நறுமணமாவது விட்டு விட்டுப் போ!
*நீ கிடைத்துவிடாதே
உன்னைத் தேடுவதில்தான்
என் இருத்தல்
இருக்கிறது
*தர்மம் வென்றது" என்கிறார்களே;
அதர்மம் அல்லவா வென்றிருக்கிறது என்று
குழம்புகிறீர்களா?
உங்களுக்கு விஷயம் தெரியவில்லை;
அதர்மம் "நியூமராலஜி"ப்படி தன் பெயரைத்
தர்மம் என்று மாற்றிக் கொண்டது!
*Naked truth வெளிப்படையான, நிர்வாண உண்மை
ஒருநாள் பொய்யும்,உண்மையும் குளிக்கச் சென்றன.பொய் குளித்துவிட்டு கரையிலிருந்த உண்மையின் ஆடையை அணிந்து சென்றது.கரைக்கு வந்த உண்மை ஆடையின்றி நிர்வாணமாகவே புறப்பட்டுச் சென்றது.உண்மையிடம் மறைக்க வேண்டியது எதுவும் இல்லை
*எல்லாப் பக்கமும்
நின்று பார்ப்பவனே
உண்மையை முழுமையாக
தரிசிக்கிறான்
*நல்ல வேளை வறுமைகொடு கிடைத்தது.இல்லையென்றால் இதன் கீழ் வாழ்பவர் வேறு எதன் கீழ் வாழ்வார்கள்...?
*குளிர் காய்வதற்காய்
சுள்ளி பொறுக்கச் சென்றாய்,
சுள்ளி பொறுக்குவதிலேயே உன் காலம் கழிந்துவிட்டதே,
எப்போது நீ குளிர் காயப் போகிறாய்?
*கண்ணுக்கு அழகாக இருப்பவர்களைக் காலம் சிதைத்து விடுகிறது
காதுக்கு அழகாக இருப்பவர்கள்
மரணத்தையும் அலங்காரமாக்கிக் கொள்கிறார்கள்
*சிலப்பதிகாரம்:
பால் நகையாள் வெண்முத்துப் பல்நகையாள் கண்ணகிதன் கால்நகையால் வாய்நகைபோய்
கழுத்துநகை இழந்த கதை..
*நீ காதலிக்காவிட்டால் என்ன?
ஒரு பக்கம் பற்றினாலும்
அது நெருப்புதான்
தோழமையுடன்
-மணிகண்ட பிரபு