@manipmp
நா.முத்துக்குமார் பிறந்தநாள் பகிர்வு
கடலுக்குள் தொடங்கி
குடலுக்குள் முடித்தது வாழ்க்கையை
"மீன்"
-நா.முத்துக்குமார்
#பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்.
-நா.முத்துக்குமார்
#தன் பழைய காதலியின் குழந்தை
தன்னை மாமா என்றழைப்பதை மட்டும்
எந்த மாமாவும் விரும்புவதில்லை
-நா.முத்துக்குமார்
#எல்லா புத்தகங்களையும் நின்று கொண்டு
படிக்கிறது-'வறுமை'
-நா.முத்துக்குமார்
#இங்கு பெரும்பாலும்
கல்யாணத்தை மட்டுமல்ல,
கல்யாணத்தில்
கலந்து கொள்வதைகூட
நகைகளே தீர்மானிக்கின்றன
-நா.முத்துக்குமார்
#ஒரு நாள், அப்பா தோழனாகும் தருணங்கள் வாய்க்கும்.அந்தக் காலத்தில் நீங்கள் அப்பாவாகியிருப்பீர்கள்
-நா.முத்துக்குமார்
#பெண் விடுதலை என்றால்
அம்மாக்களை விட
அக்காக்கள் அதனை
அடைந்துவிடுகிறார்கள்
-நா.முத்துக்குமார்
#ஒவ்வொரு அடகுக்கடைகளிலும் உலர்ந்து கொண்டிருக்கிறது பிரியமில்லாமல் கழட்டிக் கொடுத்த ஒரு பெண்ணின் கண்ணீர்த்துளி-நா.முத்துக்குமார்
#ஆழமான ஆறு
இறங்கியது லாரி
மணல் எடுக்க..
-நா.முத்துக்குமார்
#மாற்றான் அலமாரிப் புத்தகத்துக்கு
மணம் அதிகம்
-நா.முத்துக்குமார்
#“காதல் கவிதை எழுதுபவர்கள்
கவிதை மட்டுமே எழுதுகிறார்கள்.
அதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களே
காதலிக்கிறார்கள்”.
– நா. முத்துக்குமார்.
#யாரும் மெனக்கெடாமலே
வருடந்தோறும் உருவாகிறார்கள்
சில அறிவாளிகளும்
முட்டாள்களும்
-பள்ளி
#நா.முத்துக்குமார்
#எந்த ஊரில் கேட்டாலும் கரகரப்பாகவே இருக்கிறது
"இஞ்சி மொரப்பா" விற்பவனின் குரல்
-நா.முத்துக்குமார்
#ஒவ்வொரு அடகுக்கடைகளிலும் உலர்ந்து கொண்டிருக்கிறது பிரியமில்லாமல் கழட்டிக் கொடுத்த ஒரு பெண்ணின் கண்ணீர்த்துளி
-நா.முத்துக்குமார்
#நேற்று கலைந்த மேகங்களை பற்றி வருத்தப்படாமல் வானம் புதிய மேகங்களை பிரசவித்து கொண்டே இருக்கிறது
-நா.முத்துக்குமார்
" காலம் மைதானத்தில் விளையாடுபவனை பார்வையாளனாகவும், பார்வையாளனை பரிசு வெல்பவனாகவும் மாற்றிவிடுகிறது # நா.முத்துக்குமார்"
-பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நா.முத்துக்குமாருக்கு..
வாழ்த்த வார்த்தைகள் இருக்கும்வரை வாழ்த்துவோம்
-மணிகண்டபிரபு