01/01/2021

மஞ்சுளா தேவி

எந்த சாமியும் கும்பிடாத செல்வியக்கா
எல்லா கிறிஸ்மஸ்க்கும்
ராத்திரி பன்னண்டு மணிவரைக்கும்
முழிச்சிருந்து
சர்ச்சில் வெடிக்கும் 
பட்டாசப் பார்த்துட்டுத்தான் தூங்கும்
ஏசுசாமியவா கும்பிடுற
ஏன் தூங்காமலிருக்கற
என்று  யாராவது  கேட்டால்
ஒரு குழந்தை  பிறக்கப்போகுதுன்னு 
தெரிஞ்சிட்டு பார்க்காமல்
எப்படித் தூங்கறது
என்று கேட்டுச் சிரிக்கும்.

~ Manjula Devi