வேகமாக முன்னேறுகிறவன்
*******
வேகமாக முன்னேறுகிறவன் வேறு எதையும் சிந்திப்பதில்லை
முன்னேறுவதிலும் வேகப்படுவதிலும் குறியாய் இருக்கிறான்
அவனுக்கு தர்மத்தின் மீது கருணையில்லை
அவனுக்கு நேர்மைகளோடு பேச நேரமிருப்பதில்லை
உச்சிக்கு மேலேயும் போக அவன் வியூகம் வகுக்கிறான்
தனக்குக் கீழே தோண்டப்படும் பள்ளங்கள் குறித்தும் அவன் பயப்படுவதில்லை
தாமதப்பட நேருமென்பதால் கடந்த காலத்தை அவ்ன திரும்பிப் பார்ப்பதே இல்லை
வேகமாக முன்னேறுகிறவன் வேகமாகவே தனது பயணத்தையும் முடித்துக்கொள்வது தவிர்க்க முடியாதது
- யுகபாரதி