13/09/2019

பூர்ணா

அய்யனார் குதிரையைப்
பார்த்து பயந்த குழந்தையிடம்...
அது ஒன்றும் செய்யாது
பொய்க்குதிரை தொட்டுப்பார் என்று
பல வகையில்
மெய்ப்பித்த தந்தை..,

அய்யனாரும்
ஒன்றும் செய்யாது
என்பதையும்
சொல்லியிருக்கலாம் .

-பூர்ணா