பொய்
எப்போதும் உனக்கொரு
பதிலை வைத்திருப்பேன்
நம்பும்படியாக
அவசரத்திற்கு கையில் கிட்டும்
பொருளை போல
அப்போது கிடைத்த
சொற்களை பயன்படுத்துவேன்
கோர்வையாய் சொல்லி
திருப்தியடையும் போது
மெளனமாய் கண்டறிந்து
மெல்ல புன்னகைப்பாய்
அப்போது பூப்பெய்துவிடுகிறது
எனது பொய்.!
-மணி