13/09/2019

மகுடேசுவரன்

>தடாகம் தேடி வந்த
தாகப்புலி
தண்ணீர்த் தளத்தை
விரைந்து நக்கியது..

தன் சிறு வீட்டின் கூரையை யாரோ இடிப்பதாய் பயந்து
பதைபதைத்து
தாய்வயிற்று அடியில்
ஒண்டியது மீன்குஞ்சு..

>நடுச் சாலையில் கிடந்தது குழந்தை செருப்பு

முயன்று திருப்பியும்
முடியாமல்
வண்டி அதன்மீது
ஏறி இறங்கி விட்டது

இன்னும் அடங்கவில்லை படபடப்பு..

மகுடேஸ்வரன்..🐅