வேர்க்கடலை காயை உடைத்து தின்கிறீர்கள்
இரட்டை பருப்புகள் உதிர்த்து வாயிலிட்டு மெல்கிறீர்கள்
அதிசயமாய் ஒரு காய்க்குள் மூன்று பருப்புகளை காண்கிறீர்கள்
சின்ன தடுமாற்றம்
சின்ன வியப்பு
சின்ன மகிழ்ச்சி
சின்ன நன்றி
உங்களுக்குள் தோன்றும் அல்லவா
அதுதான் நீங்கள்..
மகுடேஸ்வரன்..🐅