விபத்து
ஏன் இந்த வேகம்? எதற்கிந்த அவசரம்? தலைக் கவசம் ஏன் போடவில்லை? எந்தக் குற்றமும் கண்டுபிடிக்க முடியாது அதனிடம்
கவசம் நொறுங்கி செத்துக் கிடக்கிறது ஒரு நத்தை நட்டநடுச் சாலையில்.
மித வேகம் மிக நன்று யார் சொன்னது?
-சேயோன் யாழ்வேந்தன்