01/09/2019

மகுடேசுவரன்

>விடிந்ததும்
ஒன்றும் நடக்காதது போல்
நடந்துகொள்கிறது
இரவெல்லாம்
புணர்ந்த
இவ்வுலகு...🐅

>ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று
இச்சையை தீர்த்துக் கொள் என்று
இசைவு தெரிவித்து இருந்தால் அவள்..
ஒரு புதர் மறைவில் முடித்துக்கொள்ள எண்ணியிருந்தான்
அவளின்
நடுத்தர வர்க்கத்து காதலன்..🐅

>சமூக விதி இதுதான்
புணர்ந்துவிட்டால்
மணந்து கொள்
அல்லது
மணந்துகொண்டு
புணர்ந்து கொள்...🐅

>திருடனைக் கண்டு
குறைக்கவில்லை
புணரும் நாய்கள்..🐅

>உறங்கும் குழந்தை
சிணுங்கி எழுந்து
முடித்து வைக்கட்டும்
கருத்தரிப்பில் முடியாத
மலட்டு தம்பதியரின்
புணர்ச்சி நாடகத்தை..🐅

மகுடேஸ்வரன்..🐅