01/09/2019

மகுடேசுவரன்

மலர்ச்சி குன்றி காம்புகள் நீங்கும்   மல்லிகை..
கழுவி நிரப்பப்படாத தண்ணீர் பானை..
இறைந்து கிடக்கும் ஒலிப்பேழை..
கவிழ்ந்து அரைவட்டத்தில் உருளும் சமையலறை கலயம்..
யாரும் கொஞ்சாத ஏக்கத்தில் குட்டி பூனை..
தாமதமாய் ஓடும் கடிகாரம்..
தேடிக் கிடைக்காத சாவி..
மூடாது காய்ந்த பசை புட்டி..
உறக்கத்திடை விழிப்பில் அன்பை துழாவும் கைகளில் அகப்படும் வெறுமை..

அவள் இல்லாத அறை..

மகுடேஸ்வரன்...🐅