04/01/2018

யுகபாரதி

*தலையாய பிரச்னை...*

காலியான கூடாரத்தின் கடைசி மனிதன்
அதிர்ந்த குரலில் அறிவித்துக்கொள்கிறான்
தானே தலைவனென்று...
வழிமொழிய ஆளில்லாத அவன்
வாய்க்கு வந்ததையெல்லாம்
வாரி இறைக்கிறான் நம்பிக்கையுடன்...
அறத்தைக் கொன்றுவிட்டு
ஆளத்துடிக்கும் அவனுக்கு
வந்து வந்து குவிகின்றன வாய்ப்புகள்,
எள்ளி நகையாடுகிறான் எதிரிகைகளை,
முட்டாள்தனமான முன் அனுபவங்களை கடைவிரிக்கிறான் காத்திரமாக,
தானே நாடென்றும்
தனக்கே நாடென்றும் சொல்லும் அவன்
விளங்கி வைக்கிறான்
வியாபார அரசியலை...
உண்டியல் குலுக்கி உருவான தலைவர்கள்
ஓரத்தில் நிற்கிறார்கள்
பணம் தின்னும் கழுகாக மாறிவிட்ட
ஜனங்களைப் பார்த்தபடி....
_யுகபாரதி....