28/01/2018

குமார் ஷா

ம்.....ம்....ம்......ம்....

நான் எனக்கு நானே விமர்சனம் செய்கிறேன்.

என்னை  ஒவ்வொரு முறையும்  நிர்வாணமாக்கி மீண்டும் பிறக்கிறேன்.வலியில் புழுவாய் துடித்து வண்ணத்துப்பூச்சியாக பறக்கிறேன்.கனவுகளை விதையாக தூவி விட்டு, மேகமாய் கடந்து செல்லுகிறேன்.நான் காத்திருந்து அதை சொந்தமாக்க விரும்பவில்லை. அது என் வேலையில்லை .அந்த விதை எனக்கு சொந்தமும் இல்லை.நான் அந்த விதை நேசிக்கிறன்.எனக்குள் ,நான்  ஒவ்வொரு முறையும் தொலைந்தும்  போகிறேன் .
மனிதர்களை நான் குறைசொல்லவில்லை .அவர்கள் ஒவ்வொரு வண்ணம்.ஒவ்வொரு வண்ணமும் ஒரு கதை.

ம்....ம்....ம்....

உங்களுக்கு தெரியுமா ! மௌனம் கூட கதை சொல்லும்..

நீங்கள் சித்திரம் பார்த்து கதை பேசுறீர்கள்.நான் சித்திரம் வரைந்து கொண்டே கதை சொல்லுகிறேன்.

ம்...ம்...

இப்போது கூட இந்த  வார்த்தைகளில் என் அகங்காரத்தை உணர்கிறேன். அகங்காரம் இன்னும் எனக்குள் இதோ ஒரு ஒரத்தில் இருக்கிறது...நான் போகிறேன் .எனக்கு நானே விமர்சனம் செய்துகொண்டு......

........ம்.......

Kumar Shaw