பறவையையும் சேர்த்து
இந்தக் கிளையில் அந்த பறவை அமர்ந்திருந்ததை இந்தக் கிளையில் அமர்ந்து அந்தப்பறவை பறந்து சென்ற பின்னரும் இந்தக் கிளை சொல்லிக்கொண்டிருக்கிறது. மரம் தன் கிளையை, அந்தப்பறவையையும் சேர்த்து நம்புகிறது பூரணமாக.