06/01/2018

தபு சங்கர்

●●●●

வந்தவளை
வாழவைக்கும்
இதயம்

வந்தவள் போய்விட்டால்
வாழ்ந்து கெட்ட
இதயம்

ஏமாற்றியதற்காக
வஞ்சம் தீர்ப்பானோ என்று
பயம் கொள்வதாய்
நீ உன் தோழியிடம் சொன்னதுதான்
நீ என்னை ஏமாற்றியதைவிடக்
கொடுமை

உண்மையில்
நீ என்னைக்
காதலித்து ஏமாற்றினாயா
இல்லை
காதலிக்காமல் ஏமாற்றினாயா

நீ என்னைக் காதலித்து ஏமாற்றியது
என் காதலுக்குத் தெரியாது
அதனால்தான்
அது இன்னும் உன்னைக்
காதலித்துக்கொண்டே இருக்கிறது

_தபு சங்கர்