*தலையாய பிரச்னை...*
வீதியிலிறங்கிப் போராட
விழுந்துவிடாமல் முன்னேற
தலைவனே இல்லை என்பவர்கள்
தயாரித்து வைத்திருக்கிறார்கள்
கிரீடங்களையும் மாடங்களையும...
தங்களில் ஒருவனுமே
தலைவனில்லை எனும் அவர்கள்
ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள
ஏலமிடும் தரகனின் வருகைக்காக..
அவர்கள் காத்திருப்பில்
நொண்டிக்குதிரைகள்
முண்டியடிக்கின்றன வண்டியிழுக்க...
ஆனால் அவர்களோ
தங்கள் பொதிகளைச் சுமக்க தேடுகிறார்கள்
பொருத்தமான கழுதையை...
இனிமேல்தான் ஒரு தலைவன் வருவாரென்றால் என்ன செய்யலாம்
இப்போதுள்ள தலைவர்களை?.
_யுகபாரதி...