உடன்போக்கு
*******
யார் யாரோடு இருக்கிறார்கள் என்பதுதான் பெரும் விவாதம்
அவரோடு இருந்தவர் இவரோடும்
இவரோடு இருந்தவர் அவரோடும்
போய்விட்டதாக புலம்பல்
யாரும் யாரோடும் வெகுநாள் இருக்க விரும்பாமல்தான் இருக்கிறார்கள்
யாரோடாவது இருப்பதில் எந்தத் தவறுமில்லை
இல்லாமல் போவதுதான் துக்கம்.
- யுகபாரதி