19/05/2019

போகன் சங்கர்

// காரணமற்ற அன்பு நிற்கிறது மழைபொழியும்போது
கடற்கரையில் தனியாக
விடப்பட்ட நாற்காலி போல.

காரணமற்ற அன்பு நிற்கிறது படித்துறையில் நீங்கள் இரவுக்குளிக்க இம்மென்று பாடிக்கொண்டு தலைமேல் கவிழ்ந்து நிற்கும் தெருவிளக்கு ப்போல.

காரணமற்ற அன்பு நிற்கிறது
ஆளற்ற பாதையில் ஊர்முனைவரைஉங்களுடன்  துணைக்கு வரும் பெயரற்ற நாய்போல.

காரணமற்ற அன்பு நிற்கிறது அன்னமூட்டுகிறவள் இறந்த வீட்டில் அடுப்பு மூட்டும் அடுத்த வீட்டுப்பெண் போலவும்.//

(போகன் சங்கர்)