09/09/2018

துளசி ராஜா

அந்த நெடுஞ்சாலையை
கடக்கும் போதெல்லாம்
கிழவன் செருப்பு அணிவதில்லை.

கொழுத்தும் கோடையிலும்
கிழவனுக்குக் கால்கள்
சுடுவதில்லை.

மாறாக
அவ்வப்போது கண்கள்
வியர்ப்பதைத் தவிர்க்க முடிவதில்லை அவனால் ...

எதுவாகிப் போனாலும் உண்ணாமல் உழுது உணவளித்த கிழவனின் வயல் அது...!

- துளசி ராஜா