பறவைகளின் வலசை கண்டால்
மனம்
எண்ணத் தொடங்கிவிடுகிறது
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
கடைசிப் பறவை எங்கே?
அது ஏன்
தனியாகப் பறந்து வருகிறது
அய்ந்துக்கும் கடைசிக்கும் இடையில்
நின்றுகொண்டிருக்கிறேன் நான்
அது கடந்து போய்க் கொண்டிருக்கிறது
– பழநிபாரதி