பிரிய மழை
பழங்கஞ்சியும் பயத்தந் துவையலும் ஏர் உழும் மாமனுக்கு எடுத்துப் போவாள்
அவளுக்குப் பிடிக்குமென்று ஈச்சம் பழங்களை துண்டில் மூடித் தருவான் அவன்
வானம் பார்த்த பூமியில் எப்போதும் பெய்தபடி பிரிய மழை.
- யுகபாரதி.