எண்ணங்கள் ஒரு சுமையல்ல.
தேவையற்ற எண்ணங்களே சுமையானவை
-ஓஷோ
ஒரு சொல் போதுமானதாய்
இருக்கிறது
பிணைத்துக் கொள்ளவும்
பிய்த்து எறியவும்
சில புன்னகை
சில சொற்கள்
சில பகிர்வு
எத்தனை நெருக்கமாய்
இழையோடினாலும்
விபத்தைப் போல்
ஒரு இடறுதல் காத்திருக்கிறது
எப்போதும்.!
-படித்தது
இறுதியில் நம் நினைவில் இருக்கப்போவது நம் எதிரிகளின் சொற்கள் அல்ல, நண்பர்களின் மெளனங்களே".
-மார்ட்டின் லூதர்கிங்
கருகிவிடுமெனும் பரபரப்பில்
கை சுட்டுக்கொண்டது
எத்தனையாவது முறையெனச்
சொல்ல முடியாது
அம்மாவால்.
-யுகபாரதி
சர்வாதிகாரம் என்பது ஒரே ஒரு அயோக்கியனைச் சமாளிப்பது..!!
ஜனநாயகம் என்பது ஒவ்வொரு அயோக்கியனையும் சமாளிப்பது..!!
-கண்ணதாசன்
சஞ்சலம் உள்ள நெஞ்சின் புனைவுதான் ஜோதிடம்
-விவேகானந்தர்
உலகையே உள்ளங்கையில் எளிதாக கொண்டு வந்துவிட்டார்கள் ஆனால் ,உணவை உள்ளங்கைக்கு கொண்டு வர உழவனால் மட்டுமே முடிகிறது!!!
- நம்மாழ்வார்
தந்தை பழைமைவாதி, என் மகனுக்கு நான் பழைமைவாதி...
-வைரமுத்து
வாழ்வின் எல்லை வரை உடன் வருபவர்கள் ஒருபோதும் அதனை வாக்காகத் தருவதே இல்லை. இடையில் நின்றுகொள்ளப் போகின்றவர்கள்தான் காலம் முழுக்க இருப்பேனென்னும் நம்பிக்கையை அளிக்கிறார்கள்.
-யாத்திரி
தனிமை என்பது
என்னுடன்
நானிருப்பது தான்
-வசுமித்ர:
ஆணவம் என்பது ஒரு இருப்பு.நீ நான் என்ற தன்முனைப்புடன் சென்று கொண்டே இருக்கிறாய்.அது மிகவும் பொய்யானது.அது உன்னிடமிருந்து அதிக பொய்களை கேட்கும்.அதை நீ திருப்திப்படுத்த முற்றிலும் பொய்யானவனாக ஆக வேண்டியிருக்கும்
-ஓஷோ
பிரியத்தின் பெருமழையை அவர்கள் பொழியும்போது எல்லாம் குடைபிடித்துக் கொண்டு செல்லும் கயவர்கள் நாம்
-ராஜூ முருகன்