31/05/2021

பாவெல் சக்தி

என்னை அழைத்து
அவசர அவசரமாக
ஒருவருடைய
மரணச் செய்தியைச் 
சொல்லாதே நண்பா....

சுடச் சுட தெரிந்துகொண்டு
நான் என்ன செய்துவிடப் போகிறேன்.

நானாகத் தெரிந்துகொள்ளும் வரை
அவர்
உயிரோடு இருந்துவிட்டுப்
போகட்டும்.

-பாவெல் சக்தி