எழுதலாம் என்று நினைக்கும் போது
ஏன் என்று தோன்றுகிறது.
எழுதலாம் என்று நினைக்கும் போது
நாளைய அலுவலகம் நினைவுக்கு வந்து விடுகிறது
எழுதலாம் என்று நினைக்கும் போது
முந்தைய நிராகரிப்பு ஞாபகம் வருகிறது.
எழுதலாம் என்று நினைக்கும் போது
மின் இணைப்பு போய் விடுகிறது
எழுதலாம் என்று நினைக்கும் போது
வெங்காயம் நறுக்க அழைத்து விடுகிறார்கள்..
(Madhu)