18/06/2019

ஶ்ரீவள்ளி

🦚
------------------------------------
பாதையாக இருத்தல்
------------------------------------

(ஸ்ரீவள்ளி)

எந்தப் பாதையாவது
வழிப்போக்கனிடம் அடம்பிடிக்கிறதா
உன்னோடு கூடவருவேன் என்று
எந்தப் பாதையாவது
வழிப்போக்கன் கடந்துவிட்டபோது
வருந்தித் தன்னை
மூடித்தான் கொள்கிறதா
எந்தப் பாதையாவது
வழிப்போக்கனின் பையில்
தன் பூமர நிழல்களை
அள்ளித் திணிக்கிறதா
அல்லது அவனிடம்
தன் நீள அகலத்தின்
தர்மத்தைத்தான்
பறைசாற்றுகிறதா
காதலில் பாதையாக இரு