கெளவை
--------------
ஒரு செய்தி
சொல்
செயல்
வருகை
பெயர்
படம்
காணொளி
மறதி
அழைப்பு
அவதூறு
ஏதோ ஒன்று
போதுமாயிருக்கிறது
சில நாட்களுக்கு
கசப்பேற்றிக் கலக்கமூட்ட
நீறான சாம்பலாய்
நினைவெங்கிலும்
படிந்துகொண்டேயிருக்கிறது
வேறொரு நல் முகூர்த்தம் வந்து அதை
முழுதும் துடைத்தெடுக்கும் வரை.
(Ravi Subramanyan)