11/05/2018

வண்ணதாசன்

எதிர்வரும் யாவரும் குரு என அறிவேன்
உதிர் இலை, உதிர் மலர் அவரிடம் பெறுவேன்
புதிரதும் விடையதும் ஒன்றெனப் புரிவேன்.
இது வர, அது செலும்  எனும் இடம் தெரிவேன்.
அதிர்வதும் அமைவதும் மனமென உணர்வேன்.
எதிர் வரின் எதிர்கொளும்  இசைவினை அடைவேன்.

-வண்ணதாசன்