*🔴சு_வெங்கடேசன்...*
கல்விக்கு அதிபதி சரசுவதி என்று சொல்லக்கூடிய சமசுகிருத மொழியில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட செய்யுள்களில் சரசுவதியை குறித்து ஒரு பாடல் கூட இல்லை...
கடவுளின் மொழி என்று சொல்லக்கூடிய சுமசுகிருதத்தில் ஒரு பெண்பால் புலவரும் கிடையாது..
சமசுகிருத மொழியை பெண்கள் பேசக்கூடாது என்று ஒதுக்கி வைத்திருந்த சமூகம் சமசுகிருதம் மொழி சமூகம்.
நாகரிகத்தில் சிறப்பு வாய்ந்த கிரேக்க நாகரிகத்தில் ஏழு பெண் புலவர்கள் மட்டுமே உண்டு.
*ஆனால் தமிழ் வைகை நாகரிகத்தில் 47 பெண் புலவர்கள் பாடல்களை இயற்றியுள்ளனர்.கீழடியில் 80 பானை ஒடு எழுத்துருக்கள் கிடைத்துள்ளன.உலகிலேயே பானை ஓடுகளில் எழுத்துருக்கள் கொண்ட ஓரே நாகரிகம் தமிழர் நாகரிகம். பெண்களுக்கும் பானைக்கும் தான் நிறைய உணர்வுப்பூர்வமான உறவுகள் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டிலேயே பாலினசமத்துவமாக இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம்*
*தமிழே தனித்து இயங்கும் மொழி.தமிழே சமயச்சார்பற்ற மொழி என்று கால்டுவெல் கூறியுள்ளார்.*
*கிரேக்கமும் இலத்தீனும் இணைந்து உருவான மொழி ஆங்கிலம். ஆங்கிலத்திலும் i(ஐ) என்ற எழுத்து ஒன்பதாவதாக வரும். கிரேக்கத்திலும் ஐ என்ற எழுத்து ஒன்பதாவதாக வரும். சீனத்திலும் ஐ என்ற குறியீடு ஒன்பதாவதாக வரும். தமிழிலும் ஐ என்ற எழுத்து ஒன்பதாவதாக வரும்.இது பண்டைய மூத்த மொழிகள் என்பதற்கு சான்றாகும்..
_எழுத்தாளர் தோழர்.சு.வெங்கடேசன்
திருப்பூர் தமுஎகச கருத்தரங்கில் பேசியது...